அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
*சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்கள் மீது, 9 நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு சாசன அமர்வு இன்று முதல் விசாரணை.
*மூன்று நாட்களுக்கு மெட்ரோ ரயில் பயணக் கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 15,16,17 ஆகிய மூன்று நாட்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் பயணக் கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொங்கல் பண்டிகையான வரும் 15 முதல் 17 வரை இச்சலுகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரை செல்ல வரும் பயணிகளுக்கு ஏதுவாக அரசினர் தோட்டம் மற்றும் டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மெரினாவிற்கு பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
*டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் எதிரொலி:
ராமநாதபுரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 35 பேர் சென்னைக்கு வரவழைப்பு. சென்னையில் 35 பேரிடம் டி.என்.பி.எஸ்.சி விசாரணை தொடங்கியது.
*இளைஞர் விளையாட்டு மேம்பாட்டுத் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் காணொலியில் தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி:
சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்த 4 நாளில் இளைஞர் விளையாட்டுத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
*சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்எஸ்ஐ வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடியை வழங்கினார் முதல்வர் பழனிசாமி:
வில்சனின் மனைவி மற்றும் 2 மகள்களிடம் ரூ.1 கோடி நிதியை தலைமைச்செயலகத்தில் வழங்கினார் முதல்வர்.
*சபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்களை விசாரிக்க போவதில்லை.
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.
இந்த விவகாரத்தில் விவகாரத்தில் 5 நீதிபதிகள் அமர்வு எழுப்பிய கேள்விகளை மட்டுமே நாங்கள் விசாரிக்க இருக்கிறோம் -9 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு அறிவிப்பு.
*தஞ்சை: கும்பகோணத்தில் 2018ஆம் ஆண்டில் டெல்லியை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தினேஷ், புருசோத்தமன், வசந்த், அன்பரசன் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தஞ்சை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு.
*மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த குழு அமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு ஒய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில் குழு அமைப்பு.
பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைப்பு.
ஜல்லிக்கட்டு குழுவில் உள்ள கிராம கமிட்டியில் அனைத்து சமுதாய பிரதிநிதிகளும் அடங்குவார்கள் - உயர்நீதிமன்ற கிளை.
*டெல்லி பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை தஞ்சை மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
2018ஆம் ஆண்டு, வங்கி பணி பயிற்சிக்காக கும்பகோணம் வந்த டெல்லி பெண் பாலியல் வன்கொடுமை.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவு.
*உதவி ஆய்வாளர் வில்சன் கொலையில் கொலையாளிகளுக்கு துப்பாக்கி வழங்கிய இஜாஸ் பாஷா கைது:
பெங்களூருவில் கைதானவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர். பாஷாவிடம் இருந்து 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
*நாமக்கல் : மோகனூரில் 2014-ம் ஆண்டு மனைவி மகேஸ்வரியை கொலை செய்த கணவர் செல்லதுரைக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.
*பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் வரும் 27-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு.
*இந்தியப் பொருளாதாரம் ஏன் வீழ்ந்தது என்பது பற்றி இளைஞர்களிடம் பிரதமர் மோடி விளக்க வேண்டும்.
இளைஞர்களின் குரலுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும்; அதைவிடுத்து அடக்கக் கூடாது. - ராகுல்காந்தி.
*"இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு:
கோயில்களில் ஸ்தபதி பணியிடங்களுக்கு, சிற்பக் கலைக் கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழக இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு:
*CAA, NRC-ல் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மக்களை தவறாக வழிநடத்தியுள்ளனர்; மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் மத்திய அரசு செயலற்றதாக இருக்கிறது. பிரச்னைகளை ஏற்படுத்தி பொருளாதார மந்த நிலையில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப முயற்சி - சோனியாகாந்தி.
*தனது தொகுதியில் அரசு திட்டங்களை முடக்க முயற்சி நடக்கிறது.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்த பின் காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேல் பேட்டி.
*விழுப்புரம்: சீருடைப் பணியாளர் எஸ்.ஐ தேர்வில் காப்பி அடித்த முதல்நிலைக் காவலர் மணி பிடிபட்டார்: தேர்வில் காபி அடித்த முதல்நிலைக் காவலர் மணி உடனே வெளியேற்றப்பட்டார்.
*காஷ்மீர் : கந்தர்பால் பகுதியில் லச்ஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்புடைய தாரிக் கானி என்பரை கைது செய்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
*பொங்கல் பண்டிகையையொட்டி மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் சென்னையில் போக்குவரத்து நெரிசல்:
கோயம்பேடு, வடபழனி, கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இதுவரை 5,25,890 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம். - போக்குவரத்துறை.
*ஜம்மு-காஷ்மீர்: புல்வாமாவில் பாதுகாப்புப் படையினரால் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை: சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல்.
*நாகை : வேதராண்யம் அருகே குரவப்புலம் பகுதியில் 13வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சக்திவேல், கபிலன் ஆகியோர் போக்சோ சட்டத்தில் கைது.*
*புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தனது மகனுடன் சேர்ந்து நில ஒப்பந்தங்களில் ஊழல் மேற்கொண்டதற்கான ஆதாரங்களை தருவதாக எம்.எல்.ஏ தனவேல் கூறியதாக புதுச்சேரி ஆளுநர் மாளிகை விளக்கம்.
*ரூ.6,608 கோடி மதிப்பிலான 15 தொழில் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி.
முதல்வர் பழனிசாமி தலைமையிலான உயர்மட்டக் குழு கூட்டத்தில் தொழில் திட்டங்களுக்கு அனுமதி. தொழில் திட்டங்கள் மூலம் 6,673 நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் - தமிழக அரசு.
No comments:
Post a Comment