அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
*சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பாக; கொலையாளிகளின் மாறுவேட படங்கள்:
சமீம் மற்றும் தவுபீக்கின் மாறுவேட படங்களை வெளியிட்டது கேரளா போலீஸ். மாறுவேட மாதிரி தோற்றத்தில் தெரிந்தால் தகவல் கொடுக்க பொதுமக்களுக்கு கோரிக்கை.
*சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கடத்தப்பட்ட 2 வயது குழந்தை மீட்பு.
திண்டுக்கல் இரயில் நிலையத்தில் மீட்டது காவல் துறை-மேற்கு வங்கத்தை சேர்ந்த தீபக் மண்டல் கைது.
*தமிழகத்தில் போகிப் பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்:
தமிழகம் எங்கும் இன்று போகிப் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். பயனற்ற பொருட்களை எரித்ததால், பல இடங்களில் புகைமூட்டமாகக் காணப்பட்டது.
பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப, பொங்கலுக்கு முந்தைய நாள் தமிழகமெங்கும் போகிப் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுகிறது. மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மேளதாளங்களை இசைத்து, போகி பண்டிகையை கொண்டாடினர்.
*போகி பண்டிகைக்காக பழைய பொருட்களை எரித்ததால் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு:
மணலி, ஆலந்தூர், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு காற்று மாசு காணப்படுகிறது.
*கூட்டணி தர்மத்தை திமுக மதிக்கவில்லையென கே.எஸ்.அழகிரி கூறிய பின் காங்கிரஸ் கூட்டத்தில் எப்படி பங்கேற்க முடியும்?
கூட்டணியில் பிரச்னை இருந்தால் கே.எஸ்.அழகிரி, ஸ்டாலினிடம் நேரில் தெரிவித்திருக்க வேண்டும். - டி.ஆர்.பாலு.
*இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று நடைபெறுகிறது.
*பொங்கல் பண்டிகையையொட்டி, இதுவரை சுமார் 12 ஆயிரம் பேருந்துகளில் 6.10 லட்சம் பேர் பயணித்துள்ளதாக போக்குவரத்து துறை தகவல்.
*ஈரோடு: பவானிசாகர் அணை நீர்மட்டம் - 104.39 அடி, நீர்இருப்பு - 32.2 டிஎம்சி, நீர்வரத்து - 522 கனஅடி, வெளியேற்றம் - 2650 கனஅடி.
*புகை மூட்டம், பனி காரணமாக சென்னையில் இருந்து மைசூரு செல்லும் ட்ரூ ஜெட், ஏர் இந்தியா விமானங்கள் தாமதம்.
*சென்னை விமான நிலையத்தில் புகை மூட்டம் அதிகமாக இருப்பதால் முதலமைச்சர் பழனிசாமி சேலம் செல்ல வேண்டிய விமானம் 1 மணி 45 நிமிடம் தாமதம்.
*அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகிறார்.
பிப்ரவரி மாத இறுதியில் டிரம்ப் இந்தியா வருவதாக தகவல்.
கடந்த 7ஆம் தேதி தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, டிரம்புக்கு அழைப்பு.பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று டிரம்ப் இந்தியா வருகிறார்.
*சோனியாவை சந்தித்த பின் பல்டியடித்த அழகிரி!
"திமுகவும், காங்கிரஸூம் இணைந்த கரங்கள்; பிரிய வாய்ப்பு இல்லை; திமுக கூட்டணியில் சலசலப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை!" - கே.எஸ்.அழகிரி, தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ்!
*எஸ்.ஐ. வில்சன் கொலை- இரு தீவிரவாதிகள் கர்நாடகாவில் அதிரடியாக கைது
கர்நாடகாவின் உடுப்பியில் பதுங்கி இருந்த தவ்பீக், அப்துல் சமீம் கைது!தமிழக- கர்நாடகா போலீசார் இணைந்து கொலையாளிகளை சுற்றி வளைத்தனர்!
No comments:
Post a Comment