அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
*குடும்ப அட்டைதாரர்கள், தமிழகத்தில் உள்ள எந்த நியாய விலைகடைகளிலும் பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில் 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டத்திற்கான அரசாணை வெளியீடு.
முதற்கட்டமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பரிசோதனை முறையில் நடைமுறைப்படுத்திய பின் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
*டி.என்.பி.எஸ்சி குரூப்-4 முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடங்கியது
தேர்வாணையம் அளித்த புகாரின் அடிப்படையில், சி.பி.சி.ஐடி விசாரணையை தொடங்கியது
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு புகாரில் ராமேஸ்வரம் வட்டாட்சியர் பார்த்தசாரதி, கீழக்கரை வட்டாட்சியர் சிக்கந்தர் பபிதா ஆகிய இருவரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை.
*நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா முதல் டி20 போட்டியில் இன்று இந்திய நேரப்படி பகல் 12:20 மணிக்கு நியூசிலாந்துடன் மோத உள்ளது.
*தை அமாவாசை தினத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏராளமானோர் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபட்டனர்.
*சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பாக பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் இது தொடர்பாக தூதரகத்துடன் தொடர்பு கொள்ள விரும்புவோர் +8618612083629 மற்றும் +8618612083617 எண்களில் தூதரகத்தை அணுகலாம்.
*BREAKING:குரூப் 4 முறைகேடு தொடர்பாக 99 பேர் தகுதிநீக்கம் - டிஎன்பிஎஸ்சி அதிரடி.
* குரூப் 4 தேர்வு முறைகேடு - சர்ச்சைக்குரிய 2 மையங்களில் அதிகாரிகளாக இருந்த தாசில்தார்கள் கைது.
முறைகேட்டில் ஈடுபட்டு பணியிடம் பெற்ற 39 பேருக்கு பதிலாக தகுதியான வேறு 39 பேர் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அனுப்பப்பட்டுள்ளனர் - டிஎண்பிஎஸ்சி.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 99 பேரும் வாழ்நாள் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி தேர்வெழுத தடை.
*சேலத்தில் ராமர், சீதை படங்களுடன் அனுமதியின்றி ஆன்மிக பேரணி சென்ற பாஜகவினர் கைது.
*காஞ்சிபுரத்தில் சாலைவாக்கம் அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டதால் பதற்றம்.
பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை.
*ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான வழக்கில் முறையீடு - உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் கோரிக்கை.
வழக்கை அடுத்த வாரம் விசாரிக்க வேண்டும், அதற்கு பட்டியலிட வேண்டும் - கபில்சிபல்.
விரைந்து விசாரிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் - தலைமை நீதிபதி.
*பாலியல் புகாரில் நித்தியானந்தாவிற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மனு.
ஒரு வாரத்தில் நித்தியானந்தா பதிலளிக்க வேண்டும்"-கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு.
லெனின் கருப்பன் தொடர்ந்த வழக்கில் கர்நாடக அரசு பதில் அளிக்க உத்தரவு.
*பெரியார் குறித்த பேச்சு - ரஜினிக்கு எதிரான திராவிடர் விடுதலை கழகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
பெரியார் குறித்து பேசிய ரஜினி மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. புகார் கொடுத்த 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தை அணுகியது ஏன்? - நீதிபதிகள் கேள்வி.
மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, வழக்கு தள்ளுபடி.
*6 பிரிவுகளில் வழக்குப்பதிவு.
டிஎண்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு.
*5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரி பாமக சார்பில் வரும் 28-ம் தேதி போராட்டம் அறிவிப்பு.
*நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா பந்து வீச்சு.
*CAA, NRC, NPR ஆகியவற்றிற்கு எதிராக பிப்-2 முதல் 8-ஆம் தேதி வரை கையெழுத்து இயக்கம் - மு.க.ஸ்டாலின்.
பெறப்படும் கையெழுத்து படிவங்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் - ஸ்டாலின்.
பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது கண்டனத்திற்குரியது. காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - திமுக கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு பின் மு.க.ஸ்டாலின் பேட்டி.
*”சமூக வலைதளங்களில் ஆபாசம், அவதூறாக கருத்துக்களை பதிவு செய்பவர்களின் பட்டியலை தயார் செய்யுங்கள்"
”தமிழகம் முழுவதும் சேகரித்து வருகிற 29ம்தேதி அறிக்கை அளிக்க வேண்டும்"சைபர் கிரைம் ஏடிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
*குரூப் 4 முறைகேடு தொடர்பான ஆவணங்கள் சி.பி.சி.ஐடியிடம் ஒப்படைப்பு
தேர்வுக்கு OMR தாள் தயாரிக்கும் ஒப்பந்ததாரர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அடுத்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
*தந்தை பெரியாரின் சிலை மற்றும் தமிழகத்தில் உள்ள பிற தலைவர்களின் சிலைகளுக்கு சேதம் விளைவிக்கும் சமூக விரோத சக்திகளுக்கு எதிராக காவல்துறை மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என டிஜிபி எச்சரித்துள்ளார்.
*குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய சிறைத்துறை காவலர்களுக்கான குடியரசு தலைவர் விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் தேர்வு.
வேலூர் சிறை டிஐஜி ஜெயபாரதி, திருப்பூர் மாவட்ட சிறை ஜெயிலர் தமிழ்மாறன், துணை ஜெயிலர் பேபி.
கொக்கிரகுளம் துணை சிறையின் துணை ஜெயிலர் கீதா, அருப்புக்கோட்டை துணை சிறையின் காவலர் கண்ணன் உள்ளிட்டோருக்கு அறிவிப்பு.
*மாநில தேர்தல் ஆணையர் நியமனம் செல்லாது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரும் வழக்கை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
*தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து திங்கட்கிழமை மேல்முறையீடு செய்ய விஷால் தரப்பு முடிவு.
கடந்தாண்டு ஜூன் 23இல் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
*வேலம்மாள் கல்வி குழுமத்தில் ரூ.532 கோடிக்கு கணக்கில் காட்டாத சொத்து ஆவணங்கள் பறிமுதல்.
வருமானவரித்துறை சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.2 கோடி பணமும் பறிமுதல்; தற்காலிகமாக சோதனை நிறைவடைந்தாலும் விசாரணை நடைபெற்று வருகிறது-வருமானவரித்துறை.*
No comments:
Post a Comment