அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்
*திருவாரூர் : முத்துப்பேட்டை தர்காவில், பெரிய கந்தூரி விழாவை முன்னிட்டு வரும் 6ம் தேதி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
*கடலூர் : வெள்ளப்பாக்கம் பகுதியில் தேர்தல் தோல்வி காரணமாக இரு கோஷ்டிக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயம், வீடுகள் சூறை.
*ஜன.8ஆம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும்.
வரும் 8ம் தேதி நடக்கும் தேசிய அளவிலான வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு தவிர வேறு எந்த விடுப்பும் எடுக்கக் கூடாது - தலைமைச் செயலாளர் உத்தரவு.
அன்று பணிக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியத்தை பிடித்தம் செய்ய ஆணை.
*அருப்புக்கோட்டை அருகே இருபிரிவினரிடையே மோதல்: போலீஸ் துப்பாக்கி சூடு.
கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து திரும்பியவர்கள் வாகனம் மீது கல்வீச்சு.
இருதரப்பினர் மோதி கொண்டதால் துப்பாக்கி சூடு பதற்றம்.
வானத்தை நோக்கி 2 முறை துப்பாக்கிச் சூடு - போலீசார் குவிப்பு.
*கடலூர் மாவட்டம் உள்ளூர் விடுமுறை.
கடலூர்: சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு 10.01.2020 அன்று கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவு. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 01.02.2020 தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
*திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2019-ம் ஆண்டு கோவில் உண்டியல் வருமானம் ரூ.1161 கோடியே 74 லட்சம் வந்துள்ளது.
2 கோடியே 79 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 12 கோடியே 49 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் அதிகபட்சமாக 100 கோடி ரூபாய் உண்டியல் வருமானம் கிடைத்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
*வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்.
* கர்நாடக மாநிலம் கோலாரில் பதட்டம்!
கர்நாடகா மாநிலம் கோலாரில் அனுமதி பெறாமல் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் ஊர்வலம் நடத்தினர்.
காவல்துறையினர் ஊர்வலத்தை தடுத்து அப்புறப்படுத்த முற்பட்ட போது இரு தரப்பிற்கு கடும் மோதல் மூண்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த தடியடி நடத்திய காவல்துறையினர் நிலைமை கட்டுக்குள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
*நீட் தேர்வைக் கட்டாயமாக்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ரிட் மனு தாக்கல்.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வைக் கட்டாயமாக்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு.
*சிவகங்கை சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவியாக பிரியதர்ஷினி பதவி ஏற்க இடைக்கால தடை.
வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. மாநில தேர்தல் ஆணையர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பிரியதர்ஷினி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.
No comments:
Post a Comment