இன்று 09.02.2020: இதே நாளில்...:
ஜாக்குவஸ் லூசியன் மோனாட் (Jacques Lucien Monod) பிறந்த தினம். (பிப்ரவரி 9, 1910: பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் (1910) பிறந்தார்.
இவர் ஓர் பிரெஞ்சு உயிரியலாளார். 'மூலக்கூறு உயிரியலின் சிற்பி' எனப்புகழப்படுபவர்; மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசினை 1965 இல் 'பிராங்கோயிஸ் ஜாக்கோப்', 'ஆண்ட்ரூ லோப்' ஆகியோருடன் பகிந்து கொண்டவர். செல்களின் வளர்சிதை மாற்றத்தை ஜீன்கள் எனப்படும் மரபீனிகள் நொதிகளை உருவாக்குதன் மூலம் நெறிமுறைப்படுத்துவதைக் கண்டுபிடித்ததற்காக இப்பரிசு வழங்கப்பட்டது.
இயற்கை விஞ்ஞானத்தில் 1931-ல் பட்டம் பெற்றார். அடுத்த சில ஆண்டுகளில் பரிணாம வளர்ச்சி, டிஎன்ஏ, ஆர்என்ஏ மரபணுக்கள் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். சக அறிவியல் வல்லுநர்களுடன் இணைந்து, ‘இ கோலி லாக் ஓபரான்’ ஆய்வை மேற்கொண்டார்.
கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் அறிவியல் ஆசிரியராக சிறிது காலம் பணியாற்றினார். 1941-ல் இயற்கை அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார். கேலக்டோசிடேஸ் எனப்படும் என்சைம் தொகுப்புகள் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். பாஸ்டர் கல்வி நிறுவனத்தின் செல் உயிரி வேதியியல் துறை தலைவராக 1954-ல் பொறுப்பேற்றார்.
ஜீன்கள், நொதிகளை உருவாக்குவதன் மூலம் செல்களின் வளர்சிதை மாற்றத்தை நெறிப்படுத்துவது தொடர்பான கண்டுபிடிப்பை இவரோடு இணைந்து பிரான்கோயிஸ் ஜேக்கப், ஆண்ட்ரே லூஃப் ஆகிய ஆராய்ச்சியாளர்கள் இந்த உலகுக்கு வழங்கினர். இந்த கண்டுபிடிப்புக்காக 1965-ல் இவர்கள் மூவருக்கும் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இவர் சிறந்த இசைக் கலைஞரும்கூட. இசையும் படகு சவாரியும் இவரது விருப்பமான பொழுதுபோக்குகள். கலை மற்றும் அறிவியலின் ஏறக்குறைய அனைத்துப் பிரிவுகளிலும் ஆர்வம் கொண்டிருந்தார். இலக்கியத்திலும் நாட்டம் கொண்டவர். அரசியலிலும் ஈடுபட்டு வந்தார்.*
உயிரியலின் தந்தை எனப் போற்றப்படும் ஜாக்குவஸ் லூசியன் மோனாட் 66-வது வயதில் (1976) மறைந்தார்.
No comments:
Post a Comment