📰 நாளிதழ் செய்திகள்📰 🗓 பிப்ரவரி - 21 வெள்ளி 🗓 - Agnipuratchi

📰 நாளிதழ் செய்திகள்📰 🗓 பிப்ரவரி - 21 வெள்ளி 🗓

Share This

📰 நாளிதழ் செய்திகள்📰
   🗓 பிப்ரவரி - 21 வெள்ளி 🗓
➖➖➖➖➖➖➖➖➖➖
தமிழ்ச்சொல் அறிவோம்

சூட்சுமம் - நுட்பம்
➖➖➖➖➖➖➖➖➖➖

இந்தியக் கலாச்சாரம் என்பது, இந்து கலாச்சாரம் என்று அறியப்படுகிறது என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.

புதுடில்லி: பல்வேறு மாநிலங்களுக்கு ரூ.19,950 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவை தொகையை மத்திய அரசு வழங்கியது.
ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு முறை கடந்த 2017 ஜூலையில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதனால் மாநில அரசுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடுசெய்ய, மத்திய அரசு இழப்பீட்டு தொகை வழங்கி வருகிறது.

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக நடிகர் கமல் மற்றும் இயக்குனர் சங்கருக்கு சம்மன்

CAA, NPR ஆகியவை இந்தியாவில் இஸ்லாமியர்களை நாடற்றவர்களாக மாற்றக் கூடும் : சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்கா ஆணையம் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு

புதுடில்லி: வரும் ஏப்ரல் மாதம், காங்., கட்சியின் தலைவராக ராகுல் பதவியேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு தொடங்கியதை அடுத்து பார்வையாளர்களின் வருகை அதிகரிப்பு

மாலத்தீவு உள்துறை மந்திரி ஷேக் இம்ரான் அப்துல்லாவுடன் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

வாஷிங்டன்: 'இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை பாதியாக குறைக்க, அடுத்த, 10 ஆண்டுகளில், 7.83 லட்சம் கோடி ரூபாயை சாலை மேம்பாட்டுக்கு முதலீடு செய்ய வேண்டும்' என, உலக வங்கி அறிக்கை தெரிவிக்கிறது.

ரூ.2000 நோட்டுகள் ஏடிஎம்-ல் பணபரிவர்த்தனை கிடையாது; மார்ச் 1-ம் தேதி முதல் அமல் : இந்தியன் வங்கி அறிவிப்பு

முதல்-மந்திரி பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக உத்தவ் தாக்கரே இன்று டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் சோனியா காந்தியை சந்தித்து பேசுகிறார்.

கோவை: ஈஷா யோகா மையத்தில் இன்றுமஹா சிவராத்திரி விழா நடைபெறுகிறது. விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்கிறார்.

சிங்கப்பூரிலிருந்து தமிழகம் திரும்பிய நபருக்கு கொரோனா அறிகுறி: தனி வார்டில் கண்காணித்து வருவதாக மருத்துவர்கள் தகவல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-ம் ஆண்டு விழா: கமல்ஹாசன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் ரத்து

நியூயார்க்: துாக்கமின்மையால் அவதிப்படும் பெண்கள், அதிகமாக சாப்பிடுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு இருதய பாதிப்பு, சர்க்கரை நோய் ஏற்படலாம்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்புக்கு 79 ரன்களை சேர்த்துள்ளது.

இடாநகர்: அமித் ஷா அருணாச்சல பிரதேசம் சென்றதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீன எதிர்ப்புக்கு மதிப்பளிக்க தேவையில்லை என இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

ஆமதாபாத் நகரத்தில் டிரம்ப் செல்லும் வழியில் வரவேற்க 2 லட்சம் பேர் வருவார்கள்; புதிய தகவல்

புதுடில்லி: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மனுக்கள் மீது, விளக்கம் அளிக்குமாறு, மத்திய அரசுக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா ரூ.12 கோடி நிதி வழங்கியுள்ளது

புதுடில்லி: உலகளவில் 16 நாடுகளின் ராணுவத்தில் பெண்கள் உயர் பதவி அல்லது போர்ப் படையில் உள்ளனர்.

ஜெர்மனியில் அடுத்தடுத்து பயங்கரம் மதுபான விடுதிகளில் துப்பாக்கி சூடு; 8 பேர் பலி

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான பழமையான காசிவிஸ்வநாதர் கோயிலின் ஒரு பகுதியில் நவீன கழிப்பிடம், குளியறைகளை கட்டி வாடகைக்கு விட்ட தி.மு.க., மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் செ. போஸ் உட்பட 12 பேர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவில் இளம் ‘ராப்’ பாடகர் சுட்டுக்கொலை

நியூயார்க்: சிறார்களின் ஆரோக்கிய வாழ்வு அடிப்படை யிலான ஐ.நா.வின் ஸ்திரக் குறியீட்டில் இந்தியா 77வது இடத்தை பிடித்துள்ளது. சிறார் நலன் மற்றும் உயிர்வாழ்வு அடிப்படையிலான குறியீட்டில் இந்தியா 131வது இடத்தில் உள்ளது.

”தேசியவாதம்” என்ற சொல்லை தவிர்க்கவும் ; ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

ஹவுரா : “மேற்கு வங்க கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டது சட்டவிரோதமானது” என திரிணமுல் காங். எம்.எல்.ஏ. கலிபடா மோண்டல்சாடியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த உத்தரவிட வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. வழக்கு

சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டசபை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

புதுடில்லி : 'துாக்கு தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கான கால அவகாசம் முடிவதற்குள் குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்ற 'வாரன்ட்' பிறப்பிப்பது ஏன்' என விசாரணை நீதிமன்றங்களை உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.

12 போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு - தமிழக அரசு உத்தரவு

மதுரை:பி.எஸ்.என்.எல்., போல் அரசு போக்குவரத்து கழகத்திலும் விருப்ப ஓய்வு திட்டம் அமலானதால் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு

பல்வேறு துறைகளில் சாதனையாளராக திகழ்ந்தவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்- தமிழக அரசு புகழாரம்

கும்பகோணத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

நிர்பயா கொலை குற்றவாளி காயம்: மனநல சிகிச்சை அளிக்க கோர்ட்டில் வக்கீல் கோரிக்கை

அஞ்சுகிராமம் அருகே 3½ வயது மகளை கொன்ற பேரூராட்சி ஊழியர் கைது பரபரப்பு வாக்குமூலம்

கியாஸ் சிலிண்டர் விலை அடுத்த மாதம் குறையும்: பெட்ரோலிய மந்திரி நம்பிக்கை

சேலம் அருகே ஆம்னி பஸ்கள் மோதிய விபத்தில் நேபாள சுற்றுலா பயணிகள் 7 பேர் பலி

அனுமதி பெறாமல் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றதாக ஓவைசி திருமுருகன் காந்தி மீது வழக்கு பதிவு

சமூக வலைதளங்களில் வைரலாகிறது: பள்ளி மாணவிகள் மதுஅருந்தும் வீடியோவால் பரபரப்பு பெற்றோர்கள் அதிர்ச்சி

நள்ளிரவில் பயங்கரம் ராமேஸ்வரம் மீனவர்கள் படகு மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு: ஒருவர் முகத்தில் குண்டு பாய்ந்தது

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதாவில் தமிழக அரசு இரட்டை வேடம் முத்தரசன் குற்றச்சாட்டு

கவிஞர் மதன்கார்க்கி உருவாக்கியுள்ள கிளிக்கி என்ற புதிய மொழி சென்னையில் அறிமுகம்

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா பலப்பரீட்சை

தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய விதிகள் ஒரு வாரத்தில் நடைமுறைப்படுத்தப்படும்: ஆர்.கே.செல்வமணி

‘பைக்’கில் சாகசம் செய்தபோது ‘வலிமை’ படப்பிடிப்பில் விபத்தில் சிக்கினார், அஜித்

இரும்புலியூர் மேம்பாலத்தில் கனரக லாரி கவிழ்ந்து விபத்து : போக்குவரத்து நெரிசல்

‘அலாவுதீன்’ படத்தை அடுத்து கார்த்தி நடிக்கும் புதிய படத்தை மித்ரன் டைரக்டு செய்கிறார்

எனது மகள் சில முஸ்லிம்களால் தவறாக வழிநடத்தப்படுகிறார்: அமுல்யாவின் தந்தை கருத்து

தேர்தல் பிரமாண பத்திரத்தில் கிரிமினல் வழக்குகளை மறைத்த வழக்கு முன்னாள் முதல்-மந்திரி பட்னாவிஸ் கோர்ட்டில் ஆஜர் ஜாமீன் வழங்கி உத்தரவு

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை டிக்கெட் கட்டணம் உயா்வு

முதல்-மந்திரி அலுவலக ஒருங்கிணைப்பாளராக ரவீந்திர வாய்க்கர் நியமனம்

திருச்சி - புதுக்கோட்டை சாலையில் பேருந்து மோதி 50 ஆடுகள் பலி

மராட்டிய போலீஸ் தலைமையகத்தில் லண்டன் அரண்மனையில் நடப்பதுபோன்ற அணிவகுப்பு நிகழ்ச்சி சுற்றுலா பயணிகளை கவர ஏற்பாடு

கேரளத்தில் கொவைட்-19 பாதிக்கப்பட்ட 3ஆவது நபரும் உடல்நலம் பெற்று வீடு திரும்பினார்

பணம் பறிக்க முயன்ற மத்திய அரசு ஊழியர் கைது 100 பேரை போலீசில் சிக்க வைத்த மதுபான உரிமையாளரிடம் மாட்டிக்கொண்டார்

பரங்கிப்பேட்டை : டெல்டா மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த, முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து, பரங்கிப்பேட்டை ஒன்றியக்குழு கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கர்நாடகத்தில் ராம ராஜ்ஜியத்தை உருவாக்காவிட்டால் மக்கள் சம்மட்டியால் அடிப்பார்கள் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு சித்தராமையா எச்சரிக்கை

பண்ருட்டி : ஊர்க்காவல் படையினர் போதை வாகன ஓட்டிகளை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பண்ருட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

வட கர்நாடக விவசாயிகளின் கனவு நனவாகும் நேரம் வந்துவிட்டது நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கருத்து

கடலுார் : கடலுாரில் அனுமதியின்றி நடந்த பேரணியில், கலவரத்தை துாண்டியதாக 3 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில், நேற்று முன்தினம், அனுமதியின்றி பேரணி நடந்தது.

கர்நாடகத்தில் முஸ்லிம் வாலிபர் மடாதிபதியானார்

கடலுார் : சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக, சுப காரியங்களில், பயன்தரும் பழ மரக்கன்றுகள், பூச்செடிகளை வழங்கிட தோட்டக்கலைத்துறை யோசனை தெரிவித்துள்ளது.

பெங்களூருவில் திருட்டு, கொள்ளை உள்பட குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 86 பேர் கைது ரூ.2.45 கோடி நகைகள், வாகனங்கள் மீட்பு

புதுடில்லி : இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுவதால் நாடு முழுவதிலும் உள்ள சிவாலயங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து, வழிபாடு நடத்தி வருகின்றனர்.

தமிழ் மொழி விஞ்ஞான அறிவு பெற வேண்டும் நூல் வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேச்சு

சென்னையில் இன்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.74.68 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.68.27காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அக்னிப்புரட்சி செய்தி பிரிவு P.சுரேஷ்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages