மத்திய பட்ஜெட்டில் அமைந்துள்ளது பல திட்டங்கள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
*மாவட்ட மருத்துவமனை அளவில் மருத்துவ கல்லூரிகள் விரிவுபடுத்தப்படும்.
*இந்தியாவில் படிப்போம் என்ற திட்டம் முன்னெடுக்கப்படும் .
*திறன்மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
*2024க்குள் நாடு முழுவதும் 100 புதிய விமானநிலையங்கள் அமைக்கப்படும்.
*ஆண்களை விட பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பை உருவாக்க திட்டம்.
*ஏழை, எளிய மக்களுக்கான பயன்கள், மோடி ஆட்சியில் நேரிடையாக சென்றடைகின்றன.
*புதிதாக 16 லட்சம் வரிதாரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
*தொழில்நுட்பத்தின் உதவியுடன் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கப்படும்.
*தோட்டக்கலைத் துறையின் உற்பத்தி உணவு தானியங்கள் உற்பத்தியைவிட அதிகமாக உள்ளது.
*மழை குறைந்த இடங்களில் ஒருங்கிணைந்த விவசாயத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
*விவசாயிகளுக்காக கிஷான் ரயில் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
*கிராமப்புற பெண்களுக்கு தானிய லட்சுமி சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் - நிர்மலா சீதாராமன்.
*விவசாயம், ஊரக வளர்ச்சி, பாசனம் தொடர்பான திட்டங்களுக்கு ரூ.2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு.
*2023ஆம் ஆண்டுக்குள் டெல்லி- மும்பை இடையே விரைவு சாலை.
*2024ஆம் ஆண்டுக்குள் முக்கிய 12 தேசிய நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்படும்.
*16 ஆயிரம் கி.மீ சாலைப்பணி நடப்பது உறுதி செய்யப்படும்.
*மத்திய பட்ஜெட் தாக்கல் - ஜம்மு காஷ்மீர் மேம்பாட்டிற்கு ரூ.30,757 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
*நடப்பாண்டில் இருந்து ஏற்றுமதி பொருட்களுக்கு வரி விதிக்கப்படும்.
*ஏற்றுமதி கடன் வழங்குவதற்கு நிர்விக் என்ற புதிய திட்டம் தொடங்கப்படும்.
*அடுத்த 5 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.100 லட்சம் கோடி முதலீடு.
*தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.27,300 கோடி ஒதுக்கீடு.
*உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான திறன்களை மேம்படுத்த புதிய அமைப்பு.
*பழங்குடியின அருங்காட்சியகம் ராஞ்சியில் அமைக்கப்படும்.
*ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம், அமைக்கப்படும்.
*இதை தவிர நாடு முழுவதும் 4 அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும்.
*புதிய 5 ஸ்மார்ட் சிட்டி உருவாக்கப்படும்.
*மின்னணு பொருட்களை தயாரிக்கும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு வரிச்சலுகை.
*தொழில்முனைவோர் நடவடிக்கைகள் இந்தியாவின் முதுகெலும்பாக உள்ளது.
*550 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி செய்து தரப்படும்.
*சிந்து நாகரீகம் முதல் தற்போது வரை வணிகம், வர்த்தகத்துறையில் சிறப்பான செயல்பாடு.
*ஜவுளித்துறைக்கு ரூ.1,480 கோடி நிதி ஒதுக்கீடு.
*விரைவில் தேசிய சரக்கு கையாளுதல் கொள்கை கொண்டுவரப்படும்.
*புதிய தேசிய கல்வி கொள்கை விரைவில் அறிவிக்கப்படும்.
*2026க்குள் பல்கலைக் கழகங்களில் 150 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளது.
*வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் வகையில் இந்தியாவில் கல்விக் கற்க வாருங்கள் திட்டம்.
*ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பிரபலப்படுத்தப்படும்.
*ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7.5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு 10 சதவீதம் மட்டுமே வருமான வரி.
*பாரத் நெட் திட்டத்திற்காக ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
*ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மின்னணு திட்டங்களில் முன்னுரிமை.
*தேசிய அளவில் 2 புதிய அறிவியல் திட்டம் உருவாக்கப்படும்.
*6 லட்சம் அங்கன்வாடி பணியாளர்களுக்கு செல்போன் கொடுக்கப்பட்டுள்ளது.
*குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டங்களுக்கு ரூ.35,600 கோடி ஒதுக்கீடு.
*தேசிய அளவில் ஊட்டச்சத்து திட்டங்களுக்கான பிரசாரம் முன்னெடுக்கப்படும்.
*புராதான சின்னங்களை பாதுகாக்க தனி நிறுவனம் உருவாக்கப்படும்.
*பணியாளர்களை தேர்வு செய்வதில் தேசிய அளவில் தனி நிறுவனம்.
*பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.3.5லட்சம் கோடி மூலதனம் - நிர்மலா சீதாராமன்.
No comments:
Post a Comment