தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும்: முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு. - Agnipuratchi

தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும்: முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு.

Share This

தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும்: முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு.

சேலம் மாவட்டம் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக்  கல்லூரியின் திட்டப் பணிகளை தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தனர்.

சேலம் தலைவாசலில் அமையவுள்ள கால்நடை பூங்கா ஆசியாவிலேயே பெரிய ஒருங்கிணைந்த பல்நோக்கு பூங்காவாக இருக்கும். 3 பிரிவுகளாக அமையவுள்ள பூங்காவின் முதல் பிரிவில் நவீன வசதிகள் கொண்ட கால்நடை மருத்துவமனை அமைகிறது.

இவ்விழாவில் பேசிய  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும்.
திருவண்ணாமலை,திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கால்நடை தீவன தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.

கால்நடை வளர்ப்பு தொழில் அதிக லாபம் ஈட்டும் தொழிலாக உள்ளது. கால்நடை துறைக்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராமப் பொருளாதார மேம்பாட்டிற்கு கால்நடை வளர்ப்பு திட்டம் உதவுகிறது. அரசின் திட்டங்களால் கிராமப்புற பொருளாதாரம் மேம்பாடு அடைந்துள்ளது என்றார்- முதலமைச்சர் பழனிசாமி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages