அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
*“காலணியை கழற்ற சொன்ன விவகாரம்“ சிறுவன், அவரது பெற்றோரிடம் நேரில் வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
*இளைஞர்களை புறக்கணிக்கும் எந்தவொரு நாடும் வளர்ச்சி பெறாது, வெற்றி பெற வழிமுறைகளை அறிந்து கடுமையாக உழைக்க வேண்டும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்.
*தமிழக அரசு மது விலை உயர்த்தியதன் மூலம் ஆண்டுக்கு ரூ.2500 கோடி வருவாய் கிடைக்கும் - அமைச்சர் தங்கமணி.
*மக்களவையில் தன்னை தாக்கிய பாஜக எம்பிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கடிதம்:
*கொலை மிரட்டல் விடுத்த பிரஜ் பூஷன் சிங் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடிதம்.
*மக்களவையில் தன்னை தாக்கிய பாஜக எம்பிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கடிதம். கொலை மிரட்டல் விடுத்த பிரஜ் பூஷன் சிங் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடிதம்.
*கேரளாவில் அறிவிக்கப்பட்டிருந்த மாநில பேரிடர் தளர்த்தப்படுவதாக அறிவிப்பு: கொரோனாவை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் - கேரள சுகாதாரத்துறை.
*தமிழக சட்டப்பேரவையில் பிப்.14-ம் தேதி பட்ஜெட் தாக்கல்.
*2020-21-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பிப்.14-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல். பிப்.14-ம் தேதி காலை 10 மணிக்கு துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்கிறார்.
*டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
*சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் வருமானவரி சோதனை நிறைவு:
கடந்த 4 நாட்களாக சென்னை, மதுரையில் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.77 கோடி மற்றும் 2 பைகள் நிறைய ஆவணங்களை கைப்பற்றியது வருமான வரித்துறை.
*சீனாவில் 717 பேர் உயிரிழப்பு.
*சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை 717ஆக அதிகரிப்பு. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக 34,394 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் அறிவிப்பு.
*கடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் 149வது தைப்பூச ஜோதி தரிசன விழா. ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது, ஆயிரக்கணக்கான மக்கள் ஜோதி தரிசனம்.
*போலீஸ் அதிகாரிகள் வீடுகளில் சோதனை.
காவல்துறையினருக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு நடந்ததாக வந்த குற்றச்சாட்டு. 100 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடி சோதனை. முறைகேட்டில் ஈடுபட்டதாக கருதப்படும் எஸ்.பி மற்றும் டி.எஸ்.பி வீடுகளில் சோதனை. வாக்கி டாக்கி சப்ளை செய்த நிறுவனங்களிலும் அதிரடி சோதனை.
*கொரானோ வைரசுக்கு முதல் வெளிநாட்டவர் பலி. சீனாவின் யுஹான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க நாட்டவர் பலி.
No comments:
Post a Comment