சிவானந்தா குருகுலம் இராஜாராம் மறைவுக்கு மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல் - Agnipuratchi

சிவானந்தா குருகுலம் இராஜாராம் மறைவுக்கு மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல்

Share This

சிவானந்தா குருகுலம்
இராஜாராம் மறைவுக்கு மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல்

சென்னை காட்டாங்கொளத்தூரில் செயல்பட்டு வரும் சிவானந்தா குருகுலத்தின் பொதுச் செயலாளரும்,  சமூக சேவகருமான இராஜாராம் உடல்நலக் குறைவால் காலமான செய்தி அறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன்.

சிவானந்தா குருகுலத்தை பல ஆண்டுகளாக நிர்வகித்து வந்த இராஜாராம், ஆதரவு இல்லாத  பலருக்கும் அடைக்கலம் அளித்துள்ளார். ஒருவருக்கு தங்க  இருப்பிடம் தருவது தான் சிறந்த சேவை, உணவளிப்பது தான் சிறந்த சேவை, கல்வி அளிப்பது தான் சிறந்த சேவை என்று மக்களுக்கிடையே விவாதங்கள் நடப்பதுண்டு. ஆனால், இவை அனைத்தையுமே வழங்கிய சேவகர் இராஜாராம் ஆவார்.

சிவானந்தா குருகுலத்திற்கு பா.ம.க. பல வழிகளில் பேருதவியாக இருந்திருக்கிறது. குருகுலத்து குழந்தைகள் வெளியுலகை பார்த்து, புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள பா.ம.க. உதவியுள்ளது.  சில ஆண்டுகளுக்கு முன்பு கூட பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சிவானந்தா குருகுலத்திற்கு சென்று அங்குள்ள குழந்தைகளுடன் குழந்தைகள் நாளை கொண்டாடினார்.

ஆதரவற்றவர்களுக்கு சேவை செய்வதையே தமது வாழ்க்கைப் பணியாகக் கொண்டிருந்த இராஜாராமின் மறைவு அவரை நம்பியிருப்பவர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages