அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
*இந்தியன்2’ விபத்து - லைகா நிறுவனம் மீது வழக்குப்பதிவு:
இந்தியன்2’ படப்பிடிப்பு விபத்தில் 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக லைகா நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
‘இந்தியன்2’ படப்பிடிப்பில் ஏற்பட்ட கிரேன் விபத்தில் 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக இணை இயக்குநர் குமார் நசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் தற்போது லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கிரேன் உரிமையாளர் மற்றும் புரொடக்ஷன் மேலாளர் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் வழக்குப்பதியப்பட்டுள்ளது.
*சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,236 ஆக அதிகரிப்பு. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75,465 ஆக அதிகரிப்பு- சீன அரசு.
*”சிவபெருமானின் ஆசீர்வாதம் அனைவரின் வாழ்க்கையிலும் அமைதியையும், மகிழ்ச்சியையும், செழிப்பையும் தரட்டும்" மகாசிவராத்திரியை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்து.
*டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள ஜெயக்குமார், ஓம்காந்தனை ராமேஸ்வரம் கொண்டு சென்று சிபிசிஐடி விசாரணை.
*தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய விதிகள் ஒரு வாரத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.
பாதுகாப்பை உறுதி செய்யும் படப்பிடிப்பு தளங்களில் மட்டுமே தொழிலாளர்கள் பணியாற்றும் வகையில் ஒப்பந்தம் செய்யப்படும்.
- ஆர்.கே.செல்வமணி (திரைப்பட இயக்குனர்).
*டிஎன்பிஎஸ்சி முறைகேடு - சிபிஐ பதிலளிக்க உத்தரவு:
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் வழக்குகளை சிபிஐ விசாரிக்கக்கோரும் மனு மீது டிஎன்பிஎஸ்சி தலைவர், சிபிஐ, தமிழக தலைமைச் செயலாளர் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு. மதுரை மேலூரை சேர்ந்த ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை மார்ச் 20க்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.
: *கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் நிர்மலாதேவி உட்பட 3 பேரும் வரும் 26ம் தேதி ஆஜராக ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு.
*10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் தனித்தேர்வர்களுக்கு தனி தேர்வு மையங்கள் - தேர்வுத்துறை அறிவிப்பு.
*2 ஆயிரம் நோட்டுகளை ஏடிஎம் மையங்களில் நிறுத்த முடிவு செய்துள்ளதாக இந்தியன் வங்கி அறிவித்துள்ளது.
சில்லரை மாற்றுவதற்காக வாடிக்கையாளர்கள் அடிக்கடி வங்கிக்கு வருவது, ஏ.டி.எம் மையங்களின் நோக்கத்தை சிதைப்பதாக உள்ளது- இந்தியன் வங்கி.
ஏ.டி.எம் இயந்திரங்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை நிரப்புவதை நிறுத்தும்படி வங்கி கிளைகளுக்கு வலியுறுத்தி உள்ளதாக இந்தியன் வங்கி அறிவித்துள்ளது.
*கிரேன் ஆபரேட்டர் ராஜன் கைது:
இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் உடைந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் ராஜன் கைது . இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் 3 பேர் உயிரிழந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்.
*காங்கிரஸ் கட்சிக்கு விஜய் வந்தால் மனதார ஏற்போம், ஆனால் அழைப்பு ஏதும் விடுக்கவில்லை - தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி.
*புதிய உச்சத்தில் தங்கம் விலை.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ.32,408க்கு விற்பனை.
*ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்யாமல் வேளாண் மண்டலம் அமைக்க முடியாது.
பேரவையில் வேளாண் மண்டலம் குறித்த தீர்மானம் நிறைவேற்றுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் எங்களுக்கு வழங்கப்பட்டது. - ஸ்டாலின்.
*சென்னையில் கார் மோதி பலியான மேனகா குடும்பத்திற்கு ரூ. 2.37 கோடி இழப்பீடு வழங்க சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவு. ரூ. 5.85 கோடி இழப்பீடு கோரி தந்தை சுமந்த் தொடர்ந்த வழக்கில் உத்தரவு.
*சிறுபான்மை சமூக மக்கள் விழிப்பாகவும் விஷமப் பிரசாரங்களில் இருந்து அமைதி காத்திட வேண்டும் : ஈபிஎஸ், ஓபிஎஸ் கூட்டறிக்கை.
சிறுபான்மை சமூக மக்களின் நம்பிக்கைக்குரிய அரணாக தமிழக அரசு செயல்படும். தேசிய குடிமக்கள் பதிவேடு சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என்று மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. சிறுபான்மை சமூக மக்கள் விழிப்பாகவும் விஷமப் பிரசாரங்களில் இருந்து அமைதி காத்திட வேண்டும். ஈபிஎஸ், ஓபிஎஸ்
*சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துரைமுருகனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
No comments:
Post a Comment