அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
*’சார்ஸை’ விட கொரோனாவில் உயிரிழப்பு அதிகம்.
கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சார்ஸ் வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை தாண்டியது. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 810 பேர் உயிரிழந்துள்ளனர்- சீன அரசு தகவல்.
*தாய்லாந்து நாட்டில் கண்மூடித்தனமாக 21 பேரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் சுட்டுக்கொலை. வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த ராணுவ வீரரை சுட்டுக்கொன்றது தாய்லாந்து போலீஸ்.
*கடலூர் அருகே வானமாதேவியில் மணல் கொள்ளையை தடுக்க கோரி கெடிலம் ஆற்றில் மணல் திருடிய 12 மாட்டு வண்டியை ஊர்மக்கள் சிறைப்பிடித்து காற்றை இறக்கி விட்டு போராட்டம்.
*’தமிழகத்தில் கொரோனா பாதிப்பில்லை!’ - அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட்:
சென்னை: ஸ்டான்லி மருத்துவமனையில் கண்காணிப்பில் இருந்த 2 சீனர்கள்; இரண்டு தமிழர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என உறுதி.. கொரோனா குறித்து தமிழக மக்கள் அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்.
*முதல்வர் பழனிசாமியின் அறிவிப்பை வரவேற்கிறேன்; அறிவிப்போடு இல்லாமல் உரிய சட்ட நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொள்ள வேண்டும் : முத்தரசன், சி.பி.எம்.
*முதல்வரின் அறிவிப்பால் விவசாயிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்; டெல்டா விவசாயிகளை முதல்வர் பழனிசாமி காப்பாற்றியுள்ளார் : அய்யாகண்ணு.
*'மக்களை சந்திக்க திராணியோ,வியூகம் வகுக்க மூளையோ இல்லாதவர்கள் தான் அடுத்தவர் மூளையை இரவலாய் பெறுவர் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
*வரும் 12ம் தேதி புதுச்சேரி சிறப்பு சட்டப்பேரவை கூட்டம்.
இந்த கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் - முதலமைச்சர் நாராயணசாமி.
*கிரிக்கெட் போட்டியில் பந்து தாக்கி சிறுவன் உயிரிழப்பு.
செங்கல்பட்டு: சூனாம்பேடு அகரம் கிராமத்தில் கிரிக்கெட் போட்டியின் போது பந்து தாக்கி சிறுவன் உயிரிழந்தான். கிரிக்கெட் பந்து தாக்கி காயமடைந்த 17 வயது சிறுவன் சுனில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தான்.
*கொரோனோ வைரஸ் பாதிப்பை தடுக்க சீனாவுக்கு இந்தியா உதவ தயார்-சீன அதிபருக்கு பிரதமர் மோடி கடிதம், உகான் மாகாணத்தில் இருந்து இந்தியர்களை மீட்க உதவியதற்கு நன்றி - பிரதமர் மோடி.
*தமிழக முதலமைச்சரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் அதனை சுற்றிய கிராமங்களில் விவசாயிகளும், இளைஞர்களும் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
*டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 62.59% வாக்குகள் பதிவு - தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
இது நாடாளுமன்ற தேர்தலைவிட 2% அதிகம் - தேர்தல் ஆணையம்.
2015 சட்டமன்ற தேர்தலில் 67.47% வாக்குகள் பதிவாகி இருந்தது.
*காவிரி டெல்டா விவசாயிகளுக்கு செய்துள்ள பச்சை துரோகத்தை திசைதிருப்ப
காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று இன்று முதலமைச்சர் சேலத்தில் அறிவித்திருக்கிறார். திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு குற்றச்சாட்டு
*ஜூனியர் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றது வங்க தேசம்.
இந்திய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி. முதன்முறையாக ஐ.சி.சி. உலக கோப்பையை கைப்பற்றியது வங்கதேசம். வென்றால், '5வது வெற்றி' என்ற வாய்ப்பை நழுவ விட்டது இந்தியா.
No comments:
Post a Comment