அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
*19-வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது வங்கதேசம். இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியாவுடன் மோதவுள்ளது.
*புதுச்சேரி: கைதிகள் அறையில் செல்போன் பறிமுதல், புதுச்சேரி சிறைக்காவலர்கள் 3 பேர் சஸ்பெண்ட்.
*நாளை முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை உயர்கிறது.
குவார்ட்டர் - ரூ.10,ஆஃப் - ரூ.20, ஃபுல் - ரூ. 40ஆக உயர்வு.
பீரின் விலை ரூ.10 உயர்த்தப்படும் என அறிவிப்பு. கடைசியாக 2017 அக்டோபரில் மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டது, பீரின் விலை 2014-ல் உயர்த்தப்பட்டது.
*அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி மற்றும் சீனிவாசன் ஆகியோரை பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதலமைச்சருக்கு கடிதம்.
*சேலம் தலைவாசலில் பிப்ரவரி. 9,10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா மற்றும் விவசாயப் பெருவிழா நடைபெறவுள்ளது. முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் விழா நடைபெறுவுள்ளது.
*மெரினாவில் கலங்கரைவிளக்கம்-பட்டினப்பாக்கம் சாலையில் 24 மணி நேரமும் போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும் - சென்னை மாநகராட்சிக்கும், காவல் துறைக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவு.சென்னை மாநகராட்சி ஆணையர், மாநகர காவல் ஆணையர் பிப்ரவரி. 21 ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு.
*கொடைக்கானல் குண்டுபட்டி பகுதியில் இரவில் மது விருந்து - போலீசார் சுற்றிவளைப்பு.
இணையதளம் மூலம் ஒன்று சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோர் மது விருந்தில் பங்கேற்பு-போதை பொருட்கள் பறிமுதல். கொடைக்கானல் அருகே தனியார் தோட்டத்தில் புகுந்த போலீசார் அதிரடி வேட்டை.
*சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான வீடு , அலுவலகங்களில் 3வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.
*பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை வழக்குகள் எத்தனை?
2000ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை நடந்த பாலியல் வன்முறை குறித்து மாநில தகவல் ஆணையம் கேள்வி. வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? - மாநில தகவல் ஆணையம். 13ஆம் தேதி அறிக்கையுடன் அதிகாரி நேரில் ஆஜராக கல்வித்துறைக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவு.
No comments:
Post a Comment