இந்திய தொற்று நோய் சட்டம் 1897- ன் சில தகவல்கள் - மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

இந்திய தொற்று நோய் சட்டம் 1897- ன் சில தகவல்கள் - மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

இந்திய தொற்று நோய் சட்டம் 1897- ன் சில தகவல்கள் - மருத்துவர் இராமதாசு அய்யா

இந்தியாவில் கொரோனா நோயை தடுப்பதற்காக இந்திய தொற்று நோய் சட்டம் 1987 என்ற சட்டத்தின்படி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக மத்திய, மாநில அரசுகள் கூறுகின்றன. அந்த சட்டம் குறித்து பார்ப்போம்.

1. இந்திய தொற்று நோய் சட்டம் 1897-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பம்பாயில் பரவிய பிளேக் நோயை கட்டுப்படுத்துவதற்காக இயற்றப்பட்ட சட்டமாகும். அப்போது பிளேக் நோயால் ஆயிரக்கானோர்  இறந்தனர். லட்சக்கணக்கானோர் மும்பையிலிருந்து வெளியேறினர்.

2.  பின்னர் தேசிய அளவில் தொற்றுநோய்களை கட்டுப்படுத்த இந்த சட்டம் விரிவுபடுத்தப்பட்டது.  மலேரியா,  காலரா,  டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்ட போது அவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டது!

3. ஏதேனும் ஒரு மாநிலத்தில் ஆபத்தான தொற்றுநோய் பரவும் பட்சத்தில் அதைக் கட்டுப்படுத்த நடைமுறையில் உள்ள சட்டம் போதுமானதல்ல என்று அம்மாநில அரசு கருதினால்,  நிலைமை சமாளிக்க மாநில அரசுக்கு எல்லையில்லாத அதிகாரத்தை இந்த சட்டம் வழங்குகிறது!

4. இந்த சட்டத்தின்படி பிறப்பிக்கப்படும் விதிகளை மீறுவோருக்கு இந்திய தண்டனை சட்டத்தின் 188 ஆவது பிரிவின்படி சிறை தண்டனை வழங்க முடியும். இந்த சட்டத்தின்படி பணியாற்றும் அதிகாரிகள் மீது எந்த வழக்குகளும் தொடர முடியாது.

5. இது மத்திய அரசின் சட்டம். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இந்த சட்டத்தை மாநில அரசுகள் பயன்படுத்த  மத்திய கேபினட் செயலாளர் கடந்த மார்ச் 11-ஆம் தேதி அனுமதி அளித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages