அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு- மருத்துவர் இராமதாசு அய்யா டுவிட்டர் பதிவுகள் (21.03.2020) - Agnipuratchi

அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு- மருத்துவர் இராமதாசு அய்யா டுவிட்டர் பதிவுகள் (21.03.2020)

Share This

அரசு மருத்துவக் கல்லூரிகளில்  அரசு பள்ளி மாணவர்களுக்கு  உள் இட ஒதுக்கீடு-  மருத்துவர் இராமதாசு அய்யா டுவிட்டர் பதிவுகள் (21.03.2020)

1. தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சிறப்பு உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இதுவே சமூக நீதி. அரசு பள்ளிகளில் பயிலும் கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவம் பயில இத்திட்டம் வகை செய்யும்!

2. அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான உள் ஒதுக்கீட்டு உரிமை அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி, அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கும் நீட்டிக்கப் பட வேண்டும். அவர்களும் ஊரக ஏழை மாணவர்கள் தான். அது தான் முழுமையான சமூக நீதியாக அமையும்!

3. அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு  வழங்கும் திட்டத்தால் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதை மேலும் ஊக்குவிக்க அரசு பள்ளிகளில் கல்வித்தரத்தை உயர்த்தவும், கழிப்பறை, விளையாட்டுத் திடல் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் வேண்டும்!.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages