டெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை - Agnipuratchi

டெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை

Share This

டெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மசூதி ஒன்றில் தங்கி இருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேர் கொரோனா பரிசோதனைகளுக்காக அதிரடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது அப்பகுதி போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதியானது தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமானது. இங்கு மத கூட்டம் ஒன்று அண்மையில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

டெல்லியில் ஏற்கனவே மார்ச் மாதம் தொடக்கத்திலேயே ஒன்று கூடல்களுக்கு மாநில அரசு தடை விதித்திருந்தது. ஆனாலும் தடையை மீறி இந்த பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் மலேசியா, இந்தோனேசியா, செளதி அரேபியா, கிர்கிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

மேலும் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இருந்தும் நூற்றுக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர். ஆனால் இதுபற்றி டெல்லி அதிகாரிகளுக்கு எந்த ஒரு தகவலும் தெரியாமல் இருந்து வந்தது. இந்நிலையில் ஶ்ரீநகரில் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்தார்; ஹைதராபாத்தில் 11 இந்தோனேசியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

இப்படி அடுத்தடுத்து கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள், பாதிப்புகள் பெரும்பாலும் டெல்லி நிஜாமுதீன் மசூதியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்குத்தான் என தெரியவந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் குறிப்பாக ஈரோடு பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் என தெரியவந்தது.

இதனையடுத்து இன்று டெல்லி அதிகாரிகள் இம்மசூதியை முற்றுகையிட்டு அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையின் போது மசூதியில் தங்கி இருந்த 300க்கும் மேற்பட்டோர் அதிரடியாக கொரோனா பரிசோதனைக்காக வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் பலர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டும் வருகின்றனர். தற்போது இந்த பகுதி சீல் வைக்கப்பட்டு போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages