அக்னிப்புரட்சி கொரோனா சிறப்பு செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி கொரோனா சிறப்பு செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி கொரோனா சிறப்பு செய்திகள்.

*உலகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20,494 ஆக உயர்வு.

கடந்த 6 நாட்களில் மட்டும் 10 ஆயிரம் பேர் உயிரிழப்பு. மொத்தம் 4,52,168 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1,13,120 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

*இத்தாலியில் தொடரும் கொடூரம்....

இத்தாலியில் இன்று ஒரே நாளில் 683 பேர் உயிரிழப்பு, கொரோனா இன்று ஒரே நாளில் 5210 பேருக்கு உறுதி.

இத்தாலியில் மொத்தம் 74386 பேர் கொரோனாவால் பாதிப்பு, 7503 பேர் உயிரிழப்பு.

*இந்தியாவிலும் உயரும் உயிரிழப்பு.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 85 வயதான மூதாட்டி பலி. சவூதியில் இருந்து நாடு திரும்பிய மூதாட்டி 22 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதி.
நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு.

*தமிழகத்தில் கிடு கிடு உயர்வு.
தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு - பாதிப்பு எண்ணிக்கை 26ஆக உயர்ந்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages