மூத்த அரசியல்வாதியும், திமுக பொதுச் செயலாளருமான க.அன்பழகன் காலமானார். அவருக்கு வயது 98.
திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் 1922 டிசம்பர் 19-ம் தேதி பிறந்த அன்பழகனின் இயற்பெயர் இராமையா. சுயமரியாதை இயக்க கொள்கைகளில் கொண்ட ஈடுபாட்டின் காரணத்தால் அன்பழகன் என பெயரை மாற்றிக்கொண்டார்.
1957-இல் திமுக சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தல் மூலம் சென்னை எழும்பூரிலிருந்து எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு, 9 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றவர்.
1971-இல் கலைஞரின் அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்று பின் கல்வித்துறை, நிதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சராக திறம்பட பணியாற்றியவர்.
1984-ஆம் ஆண்டு ஈழத்தமிழர் கோரிக்கையை வலியுறுத்தி திமுக தலைவர் கலைஞரோடு, தனது எம்.எல்.ஏ பதவியை இராஜினாமா செய்தவர் பேராசிரியர் க.அன்பழகன்.
1 முறை மேல்சபை உறுப்பினராகவும், 1 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.
வயது முதிர்ச்சியின் காரணமாக உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்.
அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
No comments:
Post a Comment