ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் சிறப்பு பேட்டி.
*ரெப்போ விகிதம் 5.5% இருந்து 4.4% ஆக குறைப்பு- ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்.
*வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருப்பதால் வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி குறைய வாய்ப்பு.
*ரெப்போ வட்டி விகிதம் குறைப்பால் வாடிக்கையாளர்களின் EMI குறைய வாய்ப்பு- ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ்.
*கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை ரிசர்வ் வங்கி தீவிரமாக கவனித்து வருகிறது.
*ரிவர்ஸ் ரெப்போ 4.9%-இல் இருந்து 4%ஆக குறைப்பு- ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ்.
*சர்வதேச அளவில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது.
*கொரோனா வைரசால் ஏற்படும் பின்னடைவை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
*பொருளாதார ஸ்திரத்தன்மையை காக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது, ரிசர்வ் வங்கி தீவிரமாக களத்தில் உள்ளது.
*தொழில் நிறுவனங்கள், வங்கி வாடிக்கையாளர்களுக்கும் குறைந்த வட்டியில் கடன் கிடைக்க வாய்ப்பு.
*ஏற்கனவே வங்கிகள் கொடுத்த கடன்களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்க இயலும்.
*3 மாதத்திற்கு இ.எம்.ஐ., கட்ட தேவையில்லை. அனைத்து வகை கடன்களுக்கும் மூன்று மாதம் தவனைகளை கட்ட அவகாசம் வழங்கப்படும்.
*கடன் வசூலை நிறுத்திவைக்க வங்கிகளுக்கு உத்தரவு; அனைத்து தவணைகளையும் 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் - ரிசர்வ் வங்கி.
*கொரோனா பாதிப்பால் வருமானம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் வங்கிகளில் வாங்கிய கடனுக்கான 3 மாத தவணைகள் தள்ளிவைப்பு.
*2019 ஆம் ஆண்டில் சரிவை கண்ட சர்வதேச பொருளாதாரம் 2020-ல் மீளும் என்ற நம்பிக்கை கொரோனா வைரஸ் பாதிப்பால் தகர்ந்தது.
*கடன் செலுத்தவில்லை என்பதற்காக திவால் நடவடிக்கை கூடாது என்று வங்கிகளுக்கு உத்தரவு.
*அரசு மற்றும் தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்திருப்பவர்களின் பணத்திற்கு முழு பொறுப்பு வழங்கப்படும்.
*எல்லா வகையான கடன்களின், தவணைகளுக்கும்3 மாதங்களுக்கு விலக்கு அளிக்க முடிவு.
*விலக்கு அளிக்கப்பட்ட மாதங்களின் தவணைகளை 3 மாதம் கழித்து கட்ட வேண்டும்.
*ரிசர்வ் வங்கி அறிவிப்பு- முக்கியமாக கவணிக்க வேண்டிய ஒன்று
*3 மாத தவணை தள்ளுபடி இல்லை என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ளவும்.
*வங்கிகளில் வாங்கிய எந்த கடனுக்கும் மூன்று மாதம் தவணை கட்ட தேவையில்லை. கடன் வசூலிப்பை 3 மாதம் நிறுத்திவைக்க மட்டுமே உத்தரவு.
*மூன்று மாதம் கழித்து தொடர்சியாக தவணையை கட்டவேண்டும்.
*இதனால் வாடிக்கையாளரின் சிபில் மதிப்பெண் பாதிக்கப்பட கூடாது என்று - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் சிறப்பு பேட்டி.
No comments:
Post a Comment