அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

*சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.72.28 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.65.71ஆகவும் உள்ளது.
தொடர்ந்து 15 வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி தொடர்வது குறிப்பிடத்தக்கது.

*’கொரோனா குறித்து வதந்தி பரப்பியதாக திருச்சியில் ஒருவர் கைது’

திருச்சி: மணப்பாறை அருகே புத்தாநத்தத்தில் கொரோனா குறித்து வதந்தி பரப்பியதாக நல்லபொன்னப்பட்டி அழகப்பன் என்பவர் கைது

*புதுச்சேரி சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்

அரசின் செலவினங்களுக்காக அடுத்த 4 மாதத்திற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி பேரவையில் இன்று தாக்கல் செய்கின்றார் புதுச்சேரி சட்டமன்ற கூட்டம் காலை 9.30 மணிக்கு கூடுகிறது

*’புதுச்சேரி சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்கின்றார் முதல்வர் நாராயணசாமி’
சமூக இடைவெளியை கடைபிடிக்க புதுச்சேரி சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்களின் இருக்கைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன

*‘ஏப்.7க்குள் தெலங்கானாவில் கொரோனா இருக்காது...!’

புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு வராமல் இருந்தால் 7ஆம் தேதிக்குள் கொரோனா இல்லாத மாநிலமாக தெலங்கானா மாற்றப்படும் - முதல்வர் சந்திரசேகரராவ்

*நாடு முழுவதும் ஏப்ரல் 14க்கு பிறகும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை: 21 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு அமைச்சரவை செயலாளர் ராஜீவ்கவுபா மறுப்பு.

*உலகம் முழுக்க 7 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை:

அமெரிக்கா - 1,31,403

இத்தாலி - 97,689

சீனா - 81,439

ஸ்பெயின் - 78,799

ஜெர்மனி - 60,659

ஈரான் - 38,309

பிரான்ஸ் - 37,575

பிரிட்டன் - 19,592

சுவிஸ் - 14,829 பேர் பாதிப்பு

1.49 லட்சம் பேர் இதுவரை குணமாகியுள்ளனர்.
33178 பேர் இதுவரை உயிர் விட்டுள்ளனர்.

*கேரளாவில் மதுபானத்திற்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர் பரிந்துரைப்படி மதுபானம் தர முதல்வர் ஆணை. ஊரடங்கு காரணமாக மது விற்பனை தடையால் சிலர் தற்கொலை செய்ததையடுத்து முதல்வர் பினராயி விஜயன் ஆணை

*புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்.
ரூ. 2 ஆயிரம் நிவாரண நிதி அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் - முதலமைச்சர் நாராயணசாமி.

*புதுக்கோட்டை அரசு பேருந்து பணிமனையில் பரபரப்பு.

பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆறு பேருந்துகள் எரிந்து நாசம். தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டதால் மேலும் தீ பரவாமல் தடுப்பு.

*புதுச்சேரி சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை முதலமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார்.
அரசின் அடுத்த 3 மாத செலவினங்களுக்காக ரூ.2,042 கோடிக்கான பட்ஜெட்டை முதலமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார்.

*தமிழகத்தில் நாளை முதல் 2 மணி நேரம் TASMAC கடைகள் திறந்திருக்கும் என்ற வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என TASMAC நிர்வாகம் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது
ஏற்கனவே அறிவித்தபடி ஏப்பிறல் 14ம் தேதி வரையில் TASMAC கடைகள் மூடப்பட்டிருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

*கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்குப் பின் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு:

தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 67ஆக உயர்வு - 5 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா அறிகுறியுடன் 1,925 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் - முதலமைச்சர்.

*உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,000ஆக உயர்வு.
உலகம் முழுவதும் 7.23 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று - 1.51 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

*பொள்ளாச்சி பகுதியில் கொரோனா!

பொள்ளாச்சி அருகே ஆனைமலையிலிருந்து சமீபத்தில் டெல்லி சென்று வந்த 7 பேருக்கும், பொள்ளாச்சியை சேர்ந்த 2 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அப்பகுதிகளை சேர்ந்த 1500 பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களுக்கு மருந்து தெளிக்கும் பணியில் சிறிய ரக விமானத்தை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

*பொதுமக்கள் வெளியூர் செல்வது தொடர்பாக இ-மெயில் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பொதுமக்கள் வெளியூர் செல்வது தொடர்பாக உண்மைத் தன்மை விசாரிக்கப்படும்.

பொது மக்கள் வசதிக்காக, விண்ணப்பம் செய்வது எளிமைப்படுத்தப்படும்.

திருமணம், இறப்பு மற்றும் மருத்துவ சிகிச்சை என 3 காரணங்களுக்கு மட்டுமே அவசர பயண பாஸ் வழங்கப்படும் - போலீஸ் கமிஷ்னர் ஏ.கே.விஸ்வநாதன்.

*'சென்னையில் ரெட் அலர்ட் விடுக்கப்படவில்லை':

கொரோனா காரணமாக சென்னையில் ரெட் அலர்ட் எதுவும் விடுக்கப்படவில்லை; மக்கள் அச்சப்பட வேண்டாம். - மாநகராட்சி ஆணையர்.

*டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 16 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தனியார் அமைப்பு சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற 16 பேருக்கு கொரோனா.

டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த ஆயிரத்து 500 பேர் பங்கேற்றனர்.

1,500 பேரில் 981 நபர்களின் விவரங்கள் கண்டுபிடிப்பு. அதில் 16 பேருக்கு கொரோனா உறுதி.

*பொதுமக்கள் வெளியூர் செல்வது தொடர்பாக இ-மெயில் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பொதுமக்கள் வெளியூர் செல்வது தொடர்பாக உண்மைத் தன்மை விசாரிக்கப்படும்.
பொது மக்கள் வசதிக்காக, விண்ணப்பம் செய்வது எளிமைப்படுத்தப்படும்.
திருமணம், இறப்பு மற்றும் மருத்துவ சிகிச்சை என 3 காரணங்களுக்கு மட்டுமே அவசர பயண பாஸ் வழங்கப்படும் - போலீஸ் கமிஷ்னர் ஏ.கே.விஸ்வநாதன்.

*தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 6 பேர் குணமடைந்துள்ளனர்- சுகாதாரத்துறை.

சென்னையில் 4 பேரும், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் தலா ஒருவர் என மொத்தம் 6 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

*இத்தாலியில் ஒரே நாளில் 812 பேர் உயிரிழப்பு.
இத்தாலியில் கொரோனாவால் ஒரே நாளில் 812 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 11,500 ஆக அதிகரிப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages