அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
*கள்ளக்குறிச்சி, அரியலூர் புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு. கள்ளக்குறிச்சி - ரூ.382 கோடியும், அரியலூர் - ரூ.347 கோடியும் ஒதுக்கீடு.
*திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்தில் மூன்றாவது முறையாக தேர்தல் ஒத்திவைப்பு. சட்டம்-ஒழுங்கு பிரச்சனையால் மூன்றாவது முறையாக இன்று நடைபெற இருந்த மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
*சேலம்: மேட்டூர் சரபங்கா நீரேற்று திட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ரூ.565 கோடி செலவில் மேட்டூர் அணையின் உபரி நீரை, மின் மோட்டார் மூலம் 100க்கும் மேற்பட்ட ஏரி-குளங்களுக்கு நீரேற்றம் செய்யும் திட்டம்.
*நித்தியானந்தாவுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட கோரி சி.பி.ஐ.யிடம் கர்நாடக போலீஸ் மனு அனுப்பியுள்ளது.
கர்நாடகத்தின் ராமநகர் நீதிமன்றத்தில் நித்திக்கு எதிராக காலவரையற்ற கைது வாரண்ட்டை போலீஸ் பெற்றுள்ளது.
*தங்கம் விலை மீண்டும் உயர்வு. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,024 உயர்ந்து ரூ.33,224க்கு விற்பனை.
*டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் டெல்லி காவல்துறை ஆணையர் சந்திப்பு.
*கொரோனா முன்னெச்சரிக்கை: ஹோலி கொண்டாட்டத்தை தவிர்த்த பிரதமர்! கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை - பிரதமர் மோடி.
*ரஜினி மீதான புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?:
காவல்துறைக்கு சென்னை 2-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் கேள்வி. சென்னை காவல் ஆணையர், திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவு.
துக்ளக் விழாவில் பெரியார் பற்றி ரஜினி சர்ச்சை பேச்சு. வழக்கு பதிந்து விசாரணை நடத்த கோரி திராவிடர் விடுதலை கழகம் வழக்கு.
*மக்கள் தொகை கணக்கெடுப்பில் புதிதாக சேர்க்கப்பட்ட விவரங்களை திரும்பப்பெறக் கோரி மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கடிதம்.
*டெல்லி வந்த இத்தாலி பயணிகள் 21 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை:
வைரஸ் அறிகுறி அதிகம் உள்ள 14 பேருக்கு அடுத்தக்கட்ட சோதனை.
*அமைதியாக இருக்கும் தமிழகத்தை திசை திருப்பவே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை, எதிர்கட்சியினர் தூண்டி விடுகின்றனர் -பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன்.
*சென்னை: தேனாம்பேட்டையில் நாட்டு வெடிகுண்டு வீசிய விவகாரம்: 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை:
(வெடிகுண்டு வீசப்பட்ட காட்சி:- https://youtu.be/S94tZQAi3bs )
நாட்டு வெடிகுண்டு வீசிய விவகாரத்தில் 5 தனிப்படைகளை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, வட சென்னை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவர் காரில் சென்றிருப்பதும் அவரை குறி வைத்தே வெடி குண்டுகள் வீசப்பட்டதும் உறுதியாகி உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த ரவுடி காக்கா தோப்பு பாலாஜியாக இருக்கலாம் என்றும், இவரை கொலை செய்ய குறி வைத்தே எதிரிகள் திட்டமிட்டு வெடிகுண்டுகளை வீசி இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
*மூடப்பட்ட குடிநீர் நிறுவனங்கள் உரிமம் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்:
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. விண்ணப்பத்தோடு 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் - நீதிபதிகள்.
*நிர்பயா குற்றவாளி பவனின் கருணை மனு நிராகரிப்பு:
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதிரடி. குற்றவாளிகள் 4 பேரின் கருணை மனுக்களையும் நிராகரித்துள்ளார் குடியரசுத் தலைவர்.
*நாடு முழுவதும் உள்ள நித்தியானந்தா சொத்துக்களை முடக்க உத்தரவு:
பாலியல் வழக்கில் கர்நாடகாவின் ராம்நகர் நீதிமன்றம் அதிரடி.
விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததால் நீதிமன்றம் நடவடிக்கை.
*கேன் குடிநீர் ஆலைகளின் ஸ்டிரைக் வாபஸ். 7 நாட்களாக தமிழகத்தில் நடைபெற்று வந்த கேன் குடிநீர் ஆலைகளின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்.
*இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு -மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்.
16 இத்தாலியர்கள் உட்பட 28 பேருக்கு கொரோனா பாதிப்பு.கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சர் பேட்டி.ஸஅனைத்து விமான நிலையங்களிலும், மருத்துவ பரிசோதனை நடத்த உத்தரவு.
*வங்கியில் ரூ.20 கோடி கடன் பெற்ற வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. ராமச்சந்திரனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை:
ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன்
வங்கியில் ரூ.20 கோடி கடன் பெற்ற வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. வங்கி மேலாளர், ராமச்சந்திரனின் மகன் ஆகியோரும் குற்றவாளி என நீதிபதி உத்தரவு. கடன் கொடுக்க வங்கி மேலாளர் லஞ்சம் பெற்றதாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கு.
எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
வங்கி கடன் பெற மேலாளருக்கு லஞ்சம் கொடுத்ததாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கு. ராமச்சந்திரனின் மகனுக்கு 7 ஆண்டுகள், வங்கி மேலாளருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை.
*புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக ஏ.வி.சுப்பிரமணியன் மீண்டும் நியமனம் - காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்.
*மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட கோரிய வழக்கில்.
தேர்தல் ஆணையம் தரப்பில் கால அவகாசம் கோரியதையடுத்து, தமிழக தேர்தல் ஆணையம் 4 வாரங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
*சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டி கிராமத்தில் வெடி விபத்து.
தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் உராய்வு காரணமாக வெடி விபத்து. குருசாமி என்ற தொழிலாளி உயிரிழப்பு - போலீசார் விசாரணை.
*ஜி.எஸ்.எல்.வி எப்-10 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைப்பு:
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிசாட்-1 செயற்கைக்கோளை ஏந்தி நாளை மாலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்தது ஜி.எஸ்.எல்.வி.எப் 10.
*திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலுக்கு செல்லும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை - சென்னை உயர் நீதிமன்றம்:
வாகன கட்டணம் வசூல் குறித்து திருவேற்காடு நகராட்சி ஆணையர் டெண்டர் வெளியிட்டதை எதிர்த்த வழக்கு. நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலாளர் மற்றும் திருவேற்காடு நகராட்சி ஆணையர் ஏப்ரல் 1-ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
*சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு உத்தரவு:
ஸ்டாலினுக்கு எதிரான 3 அவதூறு வழக்குகள் எம்பி எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. ஏப்ரல் 8ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக ஸ்டாலினுக்கு உத்தரவு.
*நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதி அறிவிக்க கோரிய மனு மீதான விசாரணை நாளை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைப்பு.
*ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 15 பேர் உயிரிழப்பு.
ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92ஆக உயர்வு.
*10 பொதுத் துறை வங்கிகளை இணைக்கும் முடிவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு.
10 பொதுத் துறை வங்கிகள் நான்காக இணைக்கப்படுகிறது.
*சென்னை குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதியில் இருந்து கூடுதலாக நீர் திறக்க ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் தமிழக அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார் நேரில் வலியுறுத்தல்.
கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் அளித்த கடிதத்தையும் ஆந்திர முதலமைச்சரிடம் வழங்கினர்.
*சிவகங்கை : திருப்புவனம் அருகே இலுப்பகுடி பகுதியில் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த காவலர் சங்கர்சிங்(38) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.
*கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: பொதுத் தேர்வுக்கு வரும் மாணவர்கள் முகக் கவசம், ஹேண்ட் சானிடைஸர் கொண்டுவர அனுமதி
- சிபிஎஸ்இ
No comments:
Post a Comment