அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
*ம.பி -16 அமைச்சர்கள் உள்பட19 பேர் ராஜினாமா:
மத்திய பிரதேசத்தில் 16 அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா.முதலமைச்சர் கமல்நாத் உடனான ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் அதிரடி முடிவு.
மாநில அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்ய ராஜினாமா செய்த அமைச்சர்கள் கோரிக்கை.
*மத்திய பிரதேசத்தில் மேலும் 2 எம்எல்ஏக்கள் ராஜினாமா. பதவி விலகிய காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்வு.
*பெங்களூருவில் உள்ள மத்திய பிரதேச எம்எல்ஏக்கள் 19 பேரும் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டி கர்நாடக டிஜிபி-க்கு கடிதம்.
*கும்பகோணம்: திருப்புறம்பியம் சீனிவாச பெருமாள் கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட 3 பஞ்சலோக சிலைகள் மீட்பு - 4 பேர் கைது:
கடந்த 11ம் தேதி 2 சீனிவாசப் பெருமாள் சிலைகள் உள்பட 3 சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
*ஈரானுக்கு புனித பயணம் சென்ற 58 இந்தியர்கள் முதற்கட்டமாக தாயகம் திரும்பினர். 58 பேருடன் காசியாபாத் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது சி-17 விமானம்.
*சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து, சவரனுக்கு ரூ. 33,728 ஆக விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ. 35 அதிகரித்து 1 கிராம் ரூ.4,216 விற்பனையாகிறது.
*கடந்த 10 ஆண்டுகளில் நடந்த டி.என்.பி.எஸ்.சி தேர்வு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த கோரிய மனுவில், 2 வாரத்தில் பதிலளிக்க சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
*இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஷபாலி , ஐசிசி டி- 20 பேட்ஸ்மேன் தரவரிசையில் சரிவை சந்தித்துள்ளார்.
இறுதிபோட்டியில் அவர் சொதப்பியதால் புள்ளிகளை இழந்து தரவரிசையில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி 762 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.
*மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபடவில்லை. பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான்
*கர்நாடகாவில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பி.ஸ்ரீராமுலு அறிவிப்பு.
*“ஓ மை கடவுளே படத்தில் வாணி போஜனின் செல்போன் எண்ணாக எனது எண் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது”. - பூபாபலன் என்பவர் காவல் ஆணையர்
அலுவலகத்தில் புகார்!
*திண்டிவனம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சீதாபதியின் வெற்றி செல்லும்.
தேர்தலில் தோல்வியடைந்த அதிமுக வேட்பாளர் எஸ்.பி.ராஜேந்திரனின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். 2016 சட்டமன்ற தேர்தலில் 101 வாக்குகள் வித்தியாசத்தில் சீதாபதி வெற்றி பெற்றிருந்தார்.
*நெல்லை வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் இருவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதை உறுதி செய்யக்கோரிய வழக்கு. தண்டனை பெற்ற இருவரையும் நேரில் ஆஜர் படுத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
*அமெரிக்காவின் டெக்சாஸிலிருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்தது.
இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார், தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பார்- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
*இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்:
கேரளா - 15, கர்நாடகா - 4, உத்தர பிரதேசம் - 7, டெல்லி - 5, லடாக் - 2, புனே - 2, தமிழ்நாடு - 1, தெலங்கானா - 1, ஜம்மு காஷ்மீர் - 1, பஞ்சாப் - 1, இத்தாலி சுற்றுலா பயணிகள் - 16 மற்றும் சுற்றுலா வழிகாட்டி -1.
*தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி முதல் புதிய படங்களை திரையிடாமல் இருக்க திட்டமிட்டுள்ளோம். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் பேட்டி.
*கொரோனா வைரஸ் எதிரொலியால் கேரளாவில் மார்ச் 31 வரை திரையரங்குகள் மூடல்.
கொச்சியில் நடந்த மலையாள திரையுலக அமைப்பினரின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு.
*மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளதால், டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.
*வரி வசூல் செய்வதற்கு பல்வேறு வழிகள் உள்ளபோது மாணவர்கள் படிக்கும் பள்ளி வாயில் முன் குப்பைத் தொட்டி வைப்பது கண்டிக்கத்தக்கது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராஜபாளையத்தில் பள்ளி வாயில் முன் நகராட்சி நிர்வாகம் குப்பைத் தொட்டி வைத்தது ஏற்றுக் கொள்ளக்கூடிய செயல் அல்ல என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
*சபரிமலை கோவிலுக்கு மார்ச் 14 முதல் 18 வரை நடைபெறும் மாத பூஜைக்கு பக்தர்கள் வரவேண்டாம். கொரோனா வைரஸ் கேரளாவில் வேகமாக பரவுவதையடுத்து நடவடிக்கை-தேவசம் போர்டு.
*கொழும்புவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.60 லட்சம் மதிப்பிலான 1.3 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.
*விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ பட இணைத்தயாரிப்பாளர் லலித்குமார் வீடு அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
*"காய்ச்சல், கொரோனா அறிகுறி இருந்தால் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்" மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்.
*”பாஜகவில் இணைந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியா, மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்துவிட்டார்” - ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெல்லாட்.
*ரஜினிக்கு எதிரான மனு தள்ளுபடி.
பெரியார் குறித்து சர்ச்சை கருத்து கூறியதாக நடிகர் ரஜினி மீது புகார்-நடிகர் ரஜினி மீது வழக்கு பதிவு செய்யக்கோரிய மனு. திராவிடர் விடுதலை கழக சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி தொடர்ந்த மனு தள்ளுபடிஎழும்பூர் நீதிமன்றம் உத்தரவு.
*கேரளா தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து கோழிக்குஞ்சுகள், முட்டைகள் வாங்க அனுமதி பெற வேண்டும்.
கோழித்தீவனம் போன்ற பொருட்களை வாங்க உரிய அலுவலரிடம் முறையாக சான்றிதழ் பெற வேண்டும் - தமிழக கால்நடைத்துறை.
*கடலூர் : கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பயோ மெட்ரிக் வருகைபதிவு முறை ரத்து.
*ரேஷன் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சீருடை வழங்க கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு பரிந்துரை - தமிழக அரசு அரசாணை வெளியீடு. அரசு நிர்ணயம் செய்யும் நிறத்தில் சீருடை அணியலாம் - தமிழக அரசு.
*கொரோனா பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் நபர் குணமடைந்தார்; சமீபத்திய பரிசோதனையில் வைரஸ் பாதிப்பு இல்லை என்று அறிக்கை - அமைச்சர் விஜய பாஸ்கர்.
*சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியின் பயனை இந்திய மக்கள் அனுபவிக்க வேண்டும். மக்கள் பயனடைய தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு.
No comments:
Post a Comment