அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

*கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழப்பு.

கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவராத நிலையில், 66 வயது நபர் உயிரிழப்பு. இவரது மகன், கடந்த சில நாட்களுக்கு முன்பு துபாயில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்த நபரும் கேரளாவில் இருந்து ஊர் திரும்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. இவரது மகன், ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே குமரியில், கொரோனா வார்டில் உயிரிழந்த நபரின் பரிசோதனை முடிவில், அவருக்கு தொற்று இல்லை என உறுதியானது.

*கொல்லம் சப்-கலெக்டர் பணியிடை நீக்கம் - ஆட்சியர் பரிந்துரை பேரில் கேரள அரசு அதிரடி.

கேரளா:வெளிநாடு சென்றுவிட்டு நாடு திரும்பிய கொல்லம் சப் கலெக்டர் அனுபம் மிஸ்ரா கொரோனா பாதிப்பை தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர் தலைமறைவானார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அப்துல்நாசர் அளித்த விசாரணை அறிக்கை அடிப்படையில் சப் கலெக்டர் அனுபம் மிஸ்ராவை பணியிடைநீக்கம் செய்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

*தேனி மாவட்டம் போடியில் வெளிநாட்டில் இருந்து வந்ததால் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர், மன ரீதியாக பாதிக்கப்பட்டதால் நேர்ந்த விபரீதம்.

தெருவில் அமர்ந்திருந்த மூதாட்டியின் கழுத்தை கடித்து கொலை செய்த இளைஞர். நிர்வாணமாக ஓடி வந்து கொலை செய்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைப்பு. மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.

*சென்னை மாநகரில் விரைவில் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்த பட உள்ளனர்.
ஊரடங்கு உத்தரவை மீறி அவ்வப்போது மக்கள் வெளியே நடமாடுவதால் துணை ராணுவம் வரவழைக்கப்படுவதாக தகவல்.

*நெல்லை அரசு மருத்துவமனை அருகே இருந்த அம்மா உணவகம் மூடல்:

திடீரென மூடப்பட்டதால் உணவின்றி  நோயாளிகள் மற்றும் உடன் இருப்போர் தவிப்பு. உணவுக்கு மாற்று ஏற்பாடு செய்ய கோரிக்கை.

*வெளிநாட்டில் இருந்து, வேறு மாநிலங்களுக்கு வந்து இறங்கிய நபர்கள்:

உள்நாட்டு விமானம் மற்றும் ரயில், பேருந்துகள் மூலம் தமிழகம் வருகை.
தகவல் சொல்லாமல் 10 மாவட்டங்களில் ஊடுருவல். தேடும் பணியில் போலீசார் தீவிரம். வீட்டிலிருந்து வெளியே வராமல் இருப்பதே நோய் பரவலை தடுக்கும் - அரசு எச்சரிக்கை.

*இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 834ல் இருந்து 873ஆக உயர்வு!

*மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு..

*சென்னையில் ஏசி அல்லாத படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சைக்கான தனிமை வார்டுகளாக மாற்றும் பணிகளை தொடங்கியது தெற்கு ரயில்வே.

ஏசிஅல்லாத படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் தனிமை வார்டுகளாக மாற்றமுடிவு. 2 பக்கங்களும் உள்ள இந்திய பாணியிலான கழிவறைகளை குளியலறையாக மாற்றமுடிவு.
நடு (Middle Berths)படுக்கைகளை நீக்க முடிவு, மொபைல்,லேப்டாப் சார்ஜ்செய்யலாம்.

*இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 834ல் இருந்து 873ஆக உயர்வு.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 180 பேருக்கும் கேரளாவில் 173 பேருக்கும் வைரஸ் தொற்று. கர்நாடகா 55, குஜராத் 53, ராஜஸ்தான் 48, தெலங்கானா 48, உத்தரபிரதேசம் 45, டெல்லி 39, பஞ்சாப் 38, தமிழ்நாடு 38, ஹரியானா 33, மத்திய பிரதேசம் 30, காஷ்மீர் 18, மேற்கு வங்கம் 15, லடாக் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு.
ஆந்திரா 14, பீகார் 9,  சண்டிகர் 7, சத்தீஸ்கர் 6, உத்தரகாண்ட் 5, கோவா 3, இமாச்சல பிரதேசம் 3, ஒடிசா 3, அந்தமான் 2, மணிப்பூர் 1, மிசோரம் 1, புதுச்சேரி 1 நபருக்கு கொரோனா தொற்று.

*அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது: இதுவரை 1,695 பேர் பலி.

*நாங்கள் எங்களை தனிமைப்படுத்தி கொண்டோம் என கமல் வீட்டில் நோட்டீஸ்: தகவல் தெரிவிக்காமல் மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது ஏன்? - மக்கள் நீதி மய்யம் கொதிப்பு.

*திருச்செங்கோட்டில் திமுக சார்பில் காய்கறி விநியோகம்:
வார்டு எண் 1 பகுதியிலுள்ள இரு கிராமத்திலுள்ள சுமார் 2500 குடும்பங்களுக்கு 14 டன் காய்கறிகளை வழங்கினர் திமுகவினர்.

*மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வீட்டில் தனிமைப்படுத்துவதற்கான ஒட்டப்பட்டு இருந்த ஸ்டிக்கர் அகற்றம்.

மருத்துவமனைகளுக்காக உபகரணங்கள் வாங்குவது எந்த காலத்திலும் ஒரு வீண் செலவாக இருக்காது. பிற்காலத்திலும் அது ஒரு பொருளாக இருந்து மக்களுக்கு சேவை அளிக்க உதவும். இது அழிந்து போகின்ற ஒன்றிற்காக செய்யப்படுகிற செலவும் இல்லை - கரோணா பாதிப்பு சிகிச்சைக்காக தமிழகத்திலேயே அதிகபட்சமாக 5 கோடி ஒதுக்கிய தஞ்சை எம்பி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்.

*கமல் வீட்டில் வேலை செய்தவர்கள் யாரோ வெளிநாடு சென்று வந்ததால் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

பாஸ்போர்ட் முகவரியை கொண்டு கமல்ஹாசனின் பழைய முகவரியில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். கமல் அங்கு வசிக்கவில்லை என தெரிந்ததும் கொரோனா நோட்டீஸ் அகற்றப்பட்டது - மாநகராட்சி விளக்கம்.

*வேலூர் மற்றும் கும்பகோணத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி கும்பகோணத்தில் 42வயது நபருக்கு கொரோனா - மேற்கு இந்திய தீவுகளில் பயணித்தவர் வேலூரில் 49 வயது நபர் பாதிப்பு -இங்கிலாந்து பயணம் மேற்கொண்டவர் தமிழகத்தில் 40 பேருக்கு கொரனா பாதிப்பு  தமிழக சுகாதார துறை அறிவிப்பு

*கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில், மேலும் 2 பேர் உயிரிழப்பு.
இன்று மட்டும் 2 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு. இந்த 3 பேருக்கும் கொரோனா பரிசோதனை முடிவுகள் வரவில்லை - மருத்துவமனை தகவல்.

*கொரோனாவுக்கு கேரளாவில் முதல் பலி.

*கேரள மாநிலத்தில் கொரோனா வைரசால் 69 வயது முதியவர் உயிரிழப்பு. கேரளாவில் கொரோனா  பாதிப்புக்கு 170 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் உயிரிழப்பு.

*கோவையில் ஓரே இடத்தில் குவிந்த 100க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள். உணவு, தங்கும் இடம், மருத்துவ  வசதி  கோரி திடீரென சாலை மறியல் கலைய மறுத்ததால் போலீசார் தடியடி - கோவை சுந்தராபுரத்தில் பரபரப்பு.

*தமிழகத்திற்கு ரூ.9000 கோடி நிதி ஒதுக்க கோரி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்:
கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.9000 கோடி நிதி தேவைப்படுகிறது".
மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்த மத்திய அரசுக்கு முதலமைச்சர் நன்றி.

*அத்தியாவசிய பணிக்கான ‘பாஸ்’ பெற்றுக்கொள்ளலாம். பொதுப் பயன்பாடுகள், ஊடக சேவை, சுகாதாரம், மருத்துவ சேவைகளில் ஈடுபடுவோர், ‘பாஸ்’ பெற்றுக்கொள்ளலாம்.

வணிகம், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணி புரிவோர் ‘பாஸ்’ பெற்றுக்கொள்ளலாம்.

- சென்னை மாநகராட்சி.

*புதுக்கோட்டையில் 843 பேரை தனிமைப்படுத்தி கண்காணிப்பு:
வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 400. விமான நிலைய அதிகாரிகள் கொடுத்த தகவலால் மாவட்ட நிர்வாகம் அதிர்ச்சி. மீதம் உள்ளவர்களை தேடும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரம்.

*ஸ்பெயினில் பலி எண்ணிக்கை 5,690 ஆக உயர்வு! ஸ்பெயினில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 552 பேர் உயிரிழப்பு; புதிதாக 6,529 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

*'பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் நிதியுதவி' கொரோனா தடுப்புப் பணிகளுக்காக பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஒருமாத ஊதியத்தை மத்திய நிவாரண நிதிக்கு வழங்குவர். - ஜெ.பி.நட்டா.

*கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரியுள்ளார் பிரதமர் மோடி.
தங்களால் இயன்ற பண உதவிகளை செய்ய பிரதமர் வேண்டுகோள்.
நீங்கள் அனுப்பும் சிறு தொகை, பேரிடர் மேலாண்மை மற்றும் மக்களை காப்பாற்றும் ஆராய்ச்சிக்கு பயன்படும் - பிரதமர்  மோடி.

*வருகின்ற ஏப்ரல். 3 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ரேஷன் கடைகள் செயல்படும். வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும் என்பதால், அந்நாளுக்கான விடுப்பு பின்னர் அறிவிக்கப்படும். -தமிழக அரசு.

*நடிகர் அக்‌ஷய் குமார்   ₹25 கோடி ரூபாய் நிதி:

கொரோனா தடுப்பு பணிகளுக்கு பிரதமரின் வேண்டுகோளையடுத்து நடிகர் அக்‌ஷய் குமார் தனது சொந்த நிதியிலிருந்து ₹25 கோடியை
PM CARES வங்கி கணக்கிற்கு வழங்கியுள்ளார்!

*கேராளாவில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
- முதல்வர் பினராயி விஜயன்.

*தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 41ஆக உயர்வு. - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்.

*41 பேரும் வசிக்கும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்.

*வீடு, வீடாக சென்று யாருக்காவது காய்ச்சல், இருமல் பிரச்னை இருக்கிறதா என கண்காணிக்கப்படும்.

*காய்ச்சல், இருமல் இருந்தால் அவர்களை கண்டறிந்து மருத்துவப் பரிசோதனை செய்யவும் திட்டம்.

*கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து கண்டறிந்து வருகிறோம்.

*தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் 2-வது கட்டத்தில் உள்ளது.

*சுகாதாரத்துறை செயலாளர் பீல ராஜேஷ் பேட்டி.

*கொரோனா தொற்றில் 2-வது கட்டம் என்றால் என்ன?

வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வந்தோருக்கு தொற்று இருப்பது முதல் கட்டம், வெளிநாட்டில் இருந்து வந்தோர் குடும்பத்திற்கு பரவியதே 2- கட்ட நிலையாகும், சமூகத்திற்கு இடையே கொரோனா தொற்று பரவினால் அது 3-ம் நிலையாகும்.

*நாட்டுப்புறக் கலைஞர்களும் இசைக்குழுவினரும், கோவில் திருவிழாக்களை நம்பி வாழ்வு நடத்துபவர்களுக்காக மநீம தலைவர் கமல் ஹாசன் தமிழக அரசிடம் கோரிக்கை!

*கேரளாவில் மேலும் 6 பெருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி.
இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 165- ஆக உயர்வு.

*வேறு மாநிலங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்ப மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்.
போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் பல நூறு கிலோ மீட்டர் நடந்து செல்லும் நிலை உள்ளது - மத்திய உள்துறை அமைச்சகம்.

*பிரதமரின் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு ரூ.500 கோடி வழங்குவதாக டாடா அறக்கட்டளை அறிவிப்பு. இதை இரண்டாவது தவணையாக கொரோனா தடுப்புப் பணிகளுக்கு கூடுதலாக டாடா சன்ஸ் ரூ.1000 கோடி பங்களிக்கிறது-மொத்தம் ரூ.1500 கோடி நிதியுதவி.

*தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு:
சென்னை: மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த 25 வயதான இளைஞருக்கு கொரோனா பாதிப்பு; தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42 ஆக உயர்வு!.

*அவசரமாக பயணம் மேற்கொள்வோருக்காக பிரத்யேக கட்டுப்பாட்டு அறை எண்: 75300 01100 என்ற எண்ணை அழைக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு.

கட்டுப்பாட்டு அறையை கண்காணிக்க காவல் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை,

திருமணம், இறப்பு, மருத்துவம் போன்ற அவசர தேவைக்கான பயணத்துக்கு தொடர்பு கொள்ளலாம்.

சென்னைக்குள்ளேயோ, மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையோ செல்ல நேரிட்டால் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.

* நன்னிலம் காவல்துறையினர் வெளியில் வீணாக சுற்றித் திரிபவர்களை கைகளைத் தூக்கி பணிஸ்மெண்ட்

திருவாரூர் மாவட்டம்  நன்னிலம் அருகே ஆண்டிபந்தல் என்ற பகுதியில் உதவி காவல் ஆய்வாளர் சிவனேசன் மற்றும் அவரது குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த பொழுது வீணாக இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிபவர்கள் ஐ வரிசையாக நிற்க சொல்லியம் கொரோனோ வைரஸ் பற்றியம் 144 தடை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பதையும் எடுத்து வைத்து கைகளை உயர்த்தி பணிஸ்மெண்ட் நடத்தப்பட்டது இதனால் காவல் துறையினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages