அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

*வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 96,663 பேரை கண்டறிய  வேண்டியுள்ளது.
பிப்ரவரி. 15 முதல் கணக்கிட்டு கண்டறிய வேண்டுடியுள்ளது.
- பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன்.

*கொரோனா தடுப்பு நடவடிக்கை - அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை.

*தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.

மதுரை, ஈரோட்டை சேர்ந்த தலா 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி.
சென்னை மற்றும் அரியலூரில் தலா ஒருவருக்கு கொரானோ உறுதியானது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29-லிருந்து 35-ஆக உயர்வு.

*கும்மிடிப்பூண்டி: சிப்காட் தொழில்பேட்டையில், தனியார் எண்ணெய் கிடங்கில் திடீர் தீ.
கிடங்கில் இருந்த கச்சா எண்ணெய் பீப்பாய்களில் கொழுந்துவிட்டு எரியும் தீ-போராடி தீயை அணைத்து வரும் தீயணைப்பு வீரர்கள்.

*புதியதாக 530 மருத்துவர்கள் 1,000 செவிலியர்கள் நியமனம் -தமிழக அரசு.

தமிழகத்தில் காலியாக உள்ள இடங்களில் புதியதாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள், 1508 லேப் டெக்னீசியன்கள் ஆகியோரை மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் விதிகளுக்கு உட்பட்டு தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தகவல். இந்த ஆணை கிடைத்தவுடன் மூன்று தினங்களுக்குள் அவர்கள் பணியில் சேர அறிவுறுத்தல். மேலும் 200 ஆம்புலன்ஸ்களையும் உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழக அரசு உத்தரவு.

*புதுச்சேரி முதல்வர் நிவாரண நிதிக்கு, எம்பிக்கள் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் தங்கள் ஒரு மாத சம்பளத்தை அளித்தனர்.

*நாடு முழுவதும் மே 2 முதல் 18 வரை நடக்கவிருந்த சி.ஏ. தேர்வு ஜூன் 19 முதல் ஜூலை 4 வரை நடக்கும் என அறிவிப்பு. கொரோனா ஊரடங்கு காரணமாக  சி.ஏ. தேர்வை ஒத்திவைத்தது ஐ.சி.ஏ.ஐ.

*வேலூர் மாவட்டத்தில் நாளை முதல் தேவையின்றி பைக்கில் சுற்றினால் லைசென்ஸ் நிரந்தரமாக ரத்து - மாவட்ட ஆட்சியர்.

*மக்கள் கோரிக்கையின் பேரில், 'ராமாயணத்தை' சனிக்கிழமை முதல் டி.டி. நேஷனலில் மீண்டும் ஒளிபரப்பப்படும்.காலை மற்றும் இரவில் 9 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பப்படும் - மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.

*தமிழக சிறையில் உள்ள 2,642 விசாரணை கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சிறைக்கு வரும் கைதிகள் உரிய மருத்துவ பரிசோதனைகளுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் - சி.வி.சண்முகம்.

*ஊரடங்கு உத்தரவின் போது இன்றியமையாத பணிகளை ஒருங்கிணைக்க சிறப்பு குழு.
சென்னை உள்பட 37 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்தது தமிழக அரசு.

*கேரளாவில் மேலும் 39 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் மொத்தம் 176 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று - முதலமைச்சர் பினராயி விஜயன்.

*புதுச்சேரி சட்டப்பேரவை  30ம் தேதி (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு  கூடுகிறது - பேரவைச் செயலகம் அதிகாரபூர்வ அறிவிப்பு.

நீட் தேர்வு ஒத்திவைப்பு.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய மனித வளத்துறை மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு. மே 3 ஆம் தேதி நடைபெற இருந்த நீட் தேர்வு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை ஒத்திவைப்பு. மளிகை & காய்கறி கடைகளுக்கு நேர கட்டுப்பாடு - முதல்வர் பழனிசாமி.

*காய்கறி சந்தைகள் மற்றும் கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்- முதல்வர்.

தேவையின்றி மக்கள் வெளியே நடமாடுவதை தவிர்ப்பதற்காக நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
வரும் 29-ம் தேதி ஞாயிறு காலை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. மருந்தகங்கள் மற்றும் உணவகங்கள் நாள் முழுதும் இயங்கலாம் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு.

*காய்கறி, பழங்களை ஏற்றி வரும் வாகனங்கள் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இயங்கும் - முதல்வர் பழனிசாமி.

ஸ்விக்கி, ஜோமோட்டோ, உபேர் போன்ற நிறுவனங்கள் உணவு விநியோகிக்க நேர கட்டுப்பாடு.
Swiggy, Zomato, Uber Eats நிறுவனங்களின் மூலம் , காலை 7 மணி முதல் 9.30 மணி வரை, மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை உணவு எடுத்துச்சென்று வழங்க  அனுமதி - முதல்வர்.

*பீகாரில் உருளைக்கிழங்கு எடுத்து சென்ற தொழிலாளியை தாக்கிய போலீசார் பணி நீக்கம் - பீகார் டிஜிபி அதிரடி உத்தரவு.

தாக்குதலில் ஈடுபட்ட 3 போலீசாரையும் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருவதாக டிஜிபி தகவல்.
பீகாரில் 144 தடை உத்தரவின்போது வெளியில் சென்ற தொழிலாளியை தாக்கிய விவகாரத்தில் நடவடிக்கை.

*தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38ஆக அதிகரிப்பு. தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38-ஆக உயர்வு-சுகாதாரத்துறை.

*எங்கே செல்கிறது தமிழகம்:

தமிழகத்தில் இன்று மொத்தம் 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அதில் 3 பேர் வெளி நாடோ வெளி மாநிலமோ செல்லவில்லை, இவர்களுக்கு கொரோனா வந்து உள்ளது. இது தான் ஆபத்தான நிலையில் நாம் உள்ளதை காட்டுகின்றது. இனியாவது தமிழக மக்கள் தங்களை தாங்கள் காப்பாற்றிக்கொள்ள வில்லை என்றால் மிகப்பெரிய ஆபத்து காத்து உள்ளது. இனியும் 144 தடை உத்தரவை கடைபிடிக்கவில்லை என்றால் ஆபத்தை நாமே தேடிக்கொள்வதாக தான் அர்த்தம்.

*கொத்துக் கொத்தாய் மடியும் மக்கள்.

இத்தாலியில் இன்று ஒரே நாளில் 1000 பேர் உயிரிழப்பு, கொத்துக் கொத்தாய் மக்கள் மடிந்து விழுவதால் கொரோனா வைரஸ் உயிரிழப்பு இத்தாலியில் 9200 தாண்டியது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages