விடுமுறை அறிவிப்பு சுற்றுலா பயணத்துக்கு அல்ல! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை. - Agnipuratchi

விடுமுறை அறிவிப்பு சுற்றுலா பயணத்துக்கு அல்ல! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை.

Share This

விடுமுறை அறிவிப்பு சுற்றுலா பயணத்துக்கு அல்ல! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை.

அங்கன்வாடி மையங்கள் அனைத்தும் 31.3.2020 வரை மூடப்பட வேண்டும்.
இம்மையங்களில் உணவருந்தும் குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கான உணவுப் பொருட்களை (Dry Ration) அந்தந்த குடும்பத்திடம் அங்கன்வாடி மைய அமைப்பாளர்கள் வழங்க வேண்டும்

சுற்றுலா பயணியர் தங்குமிடம் (Tourist Resorts) அனைத்தும் 31.3.2020 வரை மூடப்பட வேண்டும். சுற்றுலா பயணியர் தங்குமிட உரிமையாளர்கள் எவ்வித முன்பதிவும் 31.3.2020 வரை செய்யக் கூடாது.

கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
அனைத்து விளையாட்டு அரங்குகள், Liquor Bars, கேளிக்கை விடுதிகள் (clubs) போன்றவை 31.3.2020 வரை மூடப்பட வேண்டும்.

கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்திருப்பதாலும், சில தனியார் நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணிசெய்ய பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாலும் பொதுமக்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வாய்ப்பு இருப்பதாக தவறாக கருதி வெளியில் சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

யாரேனும் கொரோனா வெருவி காய்ச்சல் பற்றி பொய்யான செய்தியோ, வதந்தியோ அல்லது தேவையற்ற பீதியை செய்தியாகவோ, சமூக வலைதளத்திலோ, வேறு எந்த வடிவிலோ பரப்பினால் இந்திய தண்டனை சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம், 2005 மற்றும் நடைமுறையில் உள்ள பிற சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதையும் அடுத்த 15 நாட்களுக்குத் தவிர்க்கவும்.

கொரோனா அச்சம் காரணமாக வலிமை மற்றும் மாநாடு படங்களின் படப்படிப்பு மார்ச் 31ந் தேதி வரை ஒத்திவைப்பு!

கூட்டம் நிறைந்த பொதுஇடங்களுக்கு வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்புசக்தி குறைந்த நபர்கள் பயணம் செய்வதை தவிர்க்கவும். - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages