அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய காலை செய்திகள்
*தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதி.
பாதிப்பு எண்ணிக்கை 15ல் இருந்து 18 ஆக உயர்வு. டுவிட்டரில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.
நியூசிலாந்து, லண்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு.
*ரயில்சேவை ரத்து நீட்டிப்பு:
பயணிகள் ரயில்சேவை ரத்து நடவடிக்கை ஏப்ரல் 14ம் தேதி வரை நீட்டிப்பு! - இந்திய ரயில்வே.
*பொறியாளர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு:
கொரோனா அறிகுறி காரணமாக வீட்டில் இருக்க அறிவுறுத்தியதை மீறியதாக கோடம்பாக்கத்தை சேர்ந்த பொறியாளர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு.
*வெளிநாட்டில் இருந்து வந்த 15,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது.
வாட்ஸப்பில் வெளியாகும் தகவல்களை நம்பிவிட வேண்டாம்.
- அமைச்சர் விஜயபாஸ்கர்.
*கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.- மத்திய அரசு.
*உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18,000-ஐ கடந்தது; 4,07,633 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் தொடர்ந்து உயரும் உயிரிழப்பு.
கொரோனா காரணமாக இத்தாலியில் இன்று ஒரே நாளில் 747 பேர் உயிரிழந்த நிலையில், 5,249 பேருக்கு புதியதாக நோய் தாக்கியது.
இதுவரை 6,820 பேர் உயிரிழந்து உள்ள நிலையில், 69,176 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 536ஆக உயர்வு.
No comments:
Post a Comment