அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

*மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக, தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது.

இன்று அவை கூடியதும், மறைந்த  உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும்.

பல்வேறு துறைகள் சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீது புதன்கிழமை முதல் விவாதம் நடத்தப்பட்டு, அந்தந்த துறைகளுக்கு தேவையான நிதி ஒதுக்கப்படும்.

குடியுரிமை திருத்தச் சட்டம்,  மக்கள்தொகை பதிவேடுக்கான கணக்கெடுப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

*கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியாவிற்கான விமான சேவையை ரத்து செய்தது கத்தார் அரசு!

*கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்த ஆலோசனை தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்து வருகிறது. ஆலோசனையில் அமைச்சர்கள், தலைமை செயலாளர் மற்றும் சுகாதார செயலர் பங்கேற்றுள்ளனர்.

*மலேஷியாவில் இருந்து கோவை வந்த கேரள இளைஞருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி! மருத்துவமனையில் அனுமதி! கேரள மாநிலம் பத்தினம்திட்டா மற்றும் கோட்டயம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கேரள அரசு உத்தரவு!

*சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 குறைந்து ரூ.33,448க்கு விற்பனை.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.26 குறைந்து ரூ.4,181க்கு விற்பனை. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.49.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

*ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை கோரிய வழக்கில் உத்தரவை நாளை ஒத்திவைத்தது எழும்பூர் நீதிமன்றம். துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினி அவதூறு பேசியதாக திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் வழக்கு.

*தமிழகத்தில் எத்தனை தனி நபர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது? - சென்னை உயர்நீதிமன்றம்.

சமுதாயத்தில் தன்னை உயர்ந்தவர்களாக காட்டிக்கொள்ள தனிநபருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறதா? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி. பாதுகாப்பு கோரி தனிநபர் தொடர்ந்த வழக்கில் தமிழக டிஜிபி மார்ச் 12ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

*காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் கோவிலுக்கு வர வேண்டாம்" - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலைக்கு வரும் பக்தர்கள் முக கவசம் அணிந்து வரவேண்டும், அடிக்கடி கை கழுவ அதற்கான உபகரணங்களை கொண்டு வர வேண்டும் காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறி இருப்பவர்கள் திருமலையில் சாமி தரிசனம் செய்ய வேண்டாம். ஏதாவது நோய் அறிகுறி இருந்தால் உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது திருப்பதி கூடுதல் முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி

*அடுத்தாண்டு நடக்கும் மேற்குவங்க சட்டசபை தேர்தலில் முதல்வர் மம்தாவை தோற்கடித்து பாஜ., ஆட்சியமைக்கும் - பா ஜ., தேசிய பொதுச்செயலர் ராம் மாதவ்

*பாகிஸ்தானின் கராச்சி நகரில் 3 அடுக்கு குடியிருப்புக் கட்டடம் கடந்த வியாழக்கிழமை இடிந்து விழந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 27-ஆக உயா்ந்துள்ளது.

*பொதுத்துறை வங்கிகள் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கைகள் தகர்க்கப்பட்டு வருகின்றன . - கே.எஸ்.அழகிரி

பொதுத்துறை வங்கிகள் மீதான நம்பிக்கையை மீட்க பாஜக அரசிடம் என்ன செயல்திட்டம் இருக்கிறது?
பாஜக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டின் பொருளாதாரத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. - கே.எஸ்.அழகிரி.

*தமிழக மாணவிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி:

நாசா நடத்தும் போட்டியில் பங்கேற்க அமெரிக்கா செல்லும் தமிழக மாணவிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி.
அருப்புக்கோட்டையை சேர்ந்த மாணவி லட்சுமி பிரியாவுக்கு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை சார்பில் ரூ.1 லட்சம் நிதி.

*அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ். 2018-19, 2019-20 ஆகிய ஆண்டுகளுக்கான காலாண்டு கணக்கை அண்ணா பல்கலை. தாக்கல் செய்யவில்லை என வருமான வரித்துறை நோட்டீஸ்.

*சென்னை தேனாம்பேட்டை - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் பாதையில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழந்ததால் பாதிப்பு
20 நிமிடத்திற்கு ஒரு ரயில் சேவை மட்டுமே இயக்கப்படுவதால் பயணிகள் அவதி; உயர்மின் அழுத்த கம்பியை சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

*YES வங்கி நிறுவனர் ராணா கபூர், குடும்பத்தினர் வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது. ராணா கபூர், மனைவி பிந்து, மகள்கள் ரோஷினி, ராஹீ ராதா ஆகியோர் வெளிநாடு செல்வதை தடுக்க லுக் அவுட் நோட்டீஸ்.

*கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் அவசர  ஆலோசனையில் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை இயக்குநர், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பு.

*புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 200-க்கும் மேற்பட்ட தனிப்படுக்கைகள் தயாராக உள்ளன - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.

கிராமப்புற மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது ஜிப்மர் மருத்துவமனையில் 3 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பை கண்டறியும் மையம் அமைக்கப்பட்டுள்ளது - நாராயணசாமி.

*தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கையில் நாமக்கல், முன்மாதிரி மாவட்டமாக தேர்வு - தேசிய குழந்தைகள் ஆணையம்.

*தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு டிஎன்பிஎஸ்சி செயலாளர் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

*டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் லஞ்சம் கொடுத்து தேர்ச்சி பெற்றதாக கைது செய்யப்பட்ட 3 பேருக்கு ஜாமீன் மறுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு.

*தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவ வசதிகள் உள்ளன.
கொரோனா குறித்து தமிழகத்தில் 37,000 மருத்துவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம். - இந்திய மருத்துவ சங்கத்தலைவர் சி.என்.ராஜா.

*ஒடிசாவில் அமைந்துள்ள பூரி ஜெகன்நாத் கோவிலுக்குச் சொந்தமான 545 கோடி ரூபாயை யெஸ் வங்கியிலிருந்து விடுவிக்குமாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஒடிசா நிதி அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

*புதுச்சேரி: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பெரியசாமி மீதான தேர்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

*பெங்களூருவில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு சோதனையில் உறுதி. அமெரிக்காவில் இருந்து திரும்பிய நபருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது-கர்நாடக மருத்துவ கல்வி அமைச்சர் கே. சுதாகர்.

*கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க தோப்பூர், தாம்பரம், திருச்சி, கோவை ஆகிய 4 இடங்களில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை சீராக உள்ளது. கொரோனா பாதிப்புள்ள நபருக்கு 2 நாட்களாக காய்ச்சல் இல்லாததால் ஒரு வாரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். தமிழகத்தில் ஒருவரை தவிர வேறு யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை.- அமைச்சர் விஜயபாஸ்கர்.

*அதிமுக-தேமுதிக கூட்டணி உறுதியாக உள்ளது. கூட்டணியில் எந்தப் பிரச்னையும் இல்லை
அரசியலில் கருத்து மோதல் இருக்கலாம்; காழ்ப்புணர்ச்சி மோதல் இருக்கக்கூடாது - அமைச்சர் ஜெயக்குமார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages