அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
*சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.72.28 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.65.71ஆகவும் உள்ளது.
தொடர்ந்து 9 வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி தொடர்வது குறிப்பிடத்தக்கது.
*மலேசியாவின் கோலாலம்பூரில் சிக்கி தவித்த தமிழர்கள் 114 பேர் சிறப்பு விமானத்தில் சென்னை வந்தனர்.
தமிழக அரசின் ஏற்பாட்டின் பேரில் ஏர் ஏசியா விமானத்தில் 114 பேரும் சென்னை அழைத்து வரப்பட்டனர்.
மலேசியாவில் இருந்து தமிழகம் வந்த 114 பேரில் 9 பேர் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி.
*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 492ஆக உயர்வு இந்தியர்கள் 451 பேர், வெளிநாட்டினர் 41 பேர் என 492 பேருக்கு கொரோனா.
- சுகாதாரத்துறை அமைச்சகம்.
*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 492ஆக உயர்வு இந்தியர்கள் 451 பேர், வெளிநாட்டினர் 41 பேர் என 492 பேருக்கு கொரோனா. - சுகாதாரத்துறை அமைச்சகம்.
*நாகை: மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் கொரோனா அறிகுறி இருக்கிறதா என தெர்மல் ஸ்கிரீனிங் பரிசோதனை:
வெளியூரில் இருந்து வரும் பயணிகளிடம் மருத்துவ குழு தெர்மல் ஸ்கிரீனிங் பரிசோதனை செய்து வருகிறது.நெல்லையில் பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து 62 விசாரணை கைதிகள் ஜாமினில் விடுவிப்பு.
*கொரோனா குறித்து வதந்தி பரப்பியதாக கைதான ஹீலர் பாஸ்கர் கோவை சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை.
*வெடிவிபத்து பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு.
விருதுநகர் மாவட்டம் சிப்பிப்பாறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த வெடிவிபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் இருவர் உயிரிழப்பு.
*பைக்கில் சென்னையிலிருந்து சொந்த ஊர் சென்ற 3 பேர் விபத்தில் சிக்கி பலி.
கொரோனா பீதி காரணமாக சென்னையிலிருந்து பஸ் கிடைக்காமல் பைக்கில் போயுள்ளனர்.
பலியான மூன்று பேரில் ஒருவர் சினிமா உதவி இயக்குநர் வினோத் காம்பிளி (வயது 26). உளுந்தூர்பேட்டை அருகே சாலையைர தடுப்பில் மோதி வினோத் பலியானார்.
ஓசூரிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு பைக்கில் சென்ற இரண்டு இளைஞர்களும் பரிதாப மரணம்.
ஓசூரிலிருந்து சென்ற சரவணன், நாகராஜன் இருவரும் கரூர் அருகே சென்றபோது லாரி மோதி பலியான துயரம்.
*உருவாகிறது மயிலாடுதுறை மாவட்டம்: நாகை மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறை புதிய மாவட்டம் உருவாக்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
*நாகை மாவட்டம் இரண்டாக பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை அறிவிப்பு. சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
*அரிசி கடைகளில் அலைமோதும் கூட்டம்!
முண்டியடித்து மூட்டை மூட்டையாக வாங்கி செல்லும் மக்கள்!
மதுரை மூன்றுமாவடி பகுதியில் உள்ள அரிசி கடையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று அரிசி வாங்கிச் செல்ல முண்டி அடித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
*நம்பிக்கையளிக்கும் செய்தி!
கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகவில்லை. சிகிச்சை பலன் பெற்று 5 பேர் இல்லம் திரும்பியுள்ளனர் - டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் தகவல்!
*சீனாவில் இயல்பு நிலை திரும்பியது!
கொரோனா வைரஸ் பாதிப்பை உலகிற்கு வழங்கிய சீனாவில் தற்போது இயல்புநிலை திரும்ப தொடங்கியுள்ளது. அதிக பாதிப்படைந்த வூகானில் வாகன போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இது கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான நாடுகளில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
*சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனி மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டதால் தான் நோய்ப்பரவலை தடுக்க முடிந்தது. தமிழ்நாட்டிலும் நோய்ப்பரவலைத் தடுக்கும் வகையில் கொரோனா நோயாளிகளுக்கு தனி மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். கொரோனா வைரசை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் - அன்புமணி இராமதாஸ்.
*மின்னல் வேகத்தில் கொரோனா.
தமிழகத்தில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. மதுரையில் கொரோனா வைரஸ் காரணமாக சிகிச்சை பெற்ற வந்த நோயாளி கவலைக்கிடம் -அமைச்சர் விஜயபாஸ்கர்.
*கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வேலை இழந்து தவிக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரூ.50 இலட்சம் நிதியுதவி!
*தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15ஆக உயர்வு அமெரிக்காவில் இருந்து வந்த இருவருக்கும், சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று - அமைச்சர் விஜயபாஸ்கர்
*புதுச்சேரியில் - 144 தடை வெளியே நடமாடினால் ஓராண்டு சிறை - முதலமைச்சர் நாராயணசாமி.
தேவையின்றி வெளியே நடமாடினால் ஓராண்டு சிறை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை.
மக்களுக்கு உயிரை பற்றி கவலையில்லை- நாராயணசாமி வேதனை. 144 தடை உத்தரவுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
தேவைப்பட்டால் துணை ராணுவப்படை உதவி கோரப்படும்- முதலமைச்சர் நாராயணசாமி.
*காஷ்மீரில் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா விடுதலை!
*கொரோனா எதிரொலி : 26ம் தேதி நடைபெறவிருந்த மாநிலங்களவைத் தேர்தல் ஒத்திவைப்பு - தேர்தல் ஆணையம்.
*தமிழக சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்.
மார்ச் 31 வரை நடைபெற இருந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முன்கூட்டியே ஒத்திவைப்பு.
*மருத்துவமனைகள் தங்களது பரிசோதனை மையங்கள், தனி வார்டுகள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருங்கள் - அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல்.
செயற்கை சுவாச கருவிகள், முகக்கவசங்கள், மருந்து பொருட்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.
கொரானோவை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவு.
*வாடகைக்கு இருக்கும் மருத்துவர்களை வீட்டை காலி செய்ய நெருக்கடி உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி உள்துறை அமைச்சரிடம் மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை.
*கொரோனா முன்னெச்சரிக்கையாக குஜராத்தில் 10, 12ஆம் வகுப்புகளை தவிர 1 முதல் 9ஆம் வகுப்புகள் மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி. - குஜராத் அரசு.
*கொரோனா வைரசை கண்டுபிடிக்கும் புதிய கருவியை தயாரித்தது இந்தியா.
புனேவை சேர்ந்த நிறுவனம் தயாரித்த கருவிக்கு மத்திய அரசு ஒப்புதல்.
இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது, இந்தியா கண்டு பிடித்த புதிய கருவி.
ஒரு வாரத்தில் ஒன்றரை லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடியும்.
இந்தியா கண்டுபிடித்துள்ள புதிய கருவியின் விலை ரூ.80 ஆயிரம்.
*தமிழகத்தில் தடையின்றி குடிநீர் வழங்க ஏற்பாடு:
குடிநீர் வழங்குவதில் தடங்கல் ஏற்பட்டால், உடனடியாக டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்.
குடிநீர் வழங்கும் பணியில் குறைபாடுகள் இருந்தால் போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும்.
- குடிநீர் வடிகால் வாரியம்.
*கடந்த 40 மணி நேரமாக டெல்லியில் எந்த ஒரு புதிய நோயாளியும் கொரோனாவல் பாதிக்கப்படவில்லை - அரவிந்த் கெஜ்ரிவால்.
30 நோயாளிகளில் சிலர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீட்டு திரும்பி விட்டனர். தற்போது 23 நோயாளிகள் மட்டுமே உள்ளனர் - டெல்லி அரவிந்த் கெஜ்ரிவால்.
*கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சிக்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு:
நகராட்சி நிர்வாகத்திற்கு ரூ.6 கோடி, பேரூராட்சிகளுக்கு ரூ.2 கோடி, ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு. - தமிழக அரசு.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து மாவட்ட தலைமை அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
களப்பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு 17,140 சுய பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.- தமிழக அரசு.
*ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு:
உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு. ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவின் பரிந்துரையை ஏற்று ஓராண்டு ஒத்திவைக்க ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல்.
*தமிழகத்தில் 144 தடை உத்தரவு - அமல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. இன்று முதல் ஏப்ரல் 1 வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்.கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை தமிழகத்தில் ஏப்ரல் 1 வரை பேருந்துகள், கால் டாக்ஸி, ஆட்டோ, லாரிகள் ஓடாது அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே வெளியே வரலாம். - முதல்வர் பழனிசாமி.
*‘கொரோனா பாதிப்பு 500-ஐ தாண்டியது’இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 519ஆக அதிகரிப்பு.
*புதுச்சேரியில் உள்ள ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 2000 அவர் அவர் வங்கி கணக்கில் வழங்கப்படும் - முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment