அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

*இந்தியாவில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 258ஆக அதிகரிப்பு. 219 இந்தியர்கள் மற்றும் 39 வெளிநாட்டினருக்கு கொரோனா பாதிப்பு.

*தமிழக முதல்வருக்கு பிரதமர் மோடி பாராட்டு: தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை திருப்திகரமாக இருப்பதாக பிரதமர் மோடி பாராட்டு. தொலைபேசியில் முதல்வர் பழனிசாமியிடம் பேசிய பிரதமர் மோடி தமிழகத்தின் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

*சென்னையில் நாளை வழக்கம்போல் அம்மா உணவகங்கள் செயல்படும்.
சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டாலும் பொதுமக்கள் நலன் கருதி அம்மா உணவகங்கள் செயல்படும் என அறிவிப்பு.- சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.

*விடுமுறையை கொண்டாட்டமாக கருதாமல் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். பொதுமக்கள் அலட்சியமாக இருக்காமல் அரசு சொல்லும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
- அமைச்சர் விஜயபாஸ்கர்.

*தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்வு’ சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.31,728க்கு விற்பனை.

*அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக தனது ஒரு மாத ஊதியத்தை வழங்குகிறார் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்:
கொரோனா தடுப்பு நடவடிக்கையால் முறையான ஊதியம் கிடைக்காத தொழிலாளர்களுக்கு நீதிபதி நிதியுதவி. தலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்து காசோலை வழங்கவுள்ளார் உயர்நீதிமன்ற நீதிபதி.

*கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க மது அருந்துவது, புகைப்பிடிப்பது, அதிக சர்க்கரை உள்ள குளிர்பானங்கள் ஆகியவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும் - டெட்ரோஸ் அதனோம், உலக சுகாதார அமைப்பின் தலைவர்.

*அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் தங்களது வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் - அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தல்.
இந்தியர்கள் தங்களின் விசா காலத்தை நீட்டிக்க யுஎஸ்சிஐசி என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் - இந்திய தூதரகம்.

*10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை. சென்னை மதுரவாயல் அருகே நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்.
சிறுமியின் உடலை 3வது மாடியில் இருந்து தூக்கி வீசிய சுரேஷ் என்ற இளைஞர் கைது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறுமியின் சடலம்.

*நாடு முழுவதும் சுய ஊரடங்கு கட்டுப்பாடு : தமிழகத்தில் நாளை ஒருநாள் மட்டும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.

*இதுவரை அரசு மருத்துவமனைக்கு வராதவர்களும் தற்போது வருகிறார்கள்- அமைச்சர் விஜயபாஸ்கர்.

*கொரோனா தொடர்பான எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்விக்கு பதில்.

கொரோனா பாதித்த 3 பேரின் தற்போதைய நிலை என்ன?- ஸ்டாலின் கேள்வி.

கொரோனாவிற்கு ஒதுக்கப்பட்ட ரூ.60 கோடி நிதி போதாது, ரூ.500 கோடி ஒதுக்க வேண்டும்- ஸ்டாலின்.

மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களுக்கு அதிகமான தட்டுப்பாடு இருப்பது உண்மை.
விதிமுறைகளை தளர்த்தி டெண்டர் இல்லாமல் மருத்துவ உபகரணங்கள் வாங்க அனுமதி - அமைச்சர் விஜயபாஸ்கர்.

*ம.பி. மாநிலத்தில் காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைகின்றனர்.

பெங்களூருவில் முகாமிட்டிருந்த எம்.எல்.ஏக்கள் டெல்லி செல்கின்றனர்.
ம.பி. முதலமைச்சர் கமல்நாத் ராஜினாமா செய்த நிலையில், ஆட்சி அமைக்கும் பணியில் பாஜக தீவிரம்.
பாஜகவில் இணையும் ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆதரவாளர்கள்.

*"மருத்துவ படிப்பு - அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை" - முதலமைச்சர் பழனிசாமி.

உள்ஒதுக்கீடு தொடர்பாக பரிசீலிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும். அரசு பள்ளி மாணவர்கள், குறைவாக சேர்வதற்கான காரணங்களை ஆய்வு செய்து, ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு அறிக்கை அளிக்கும்.
உள்ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் வகையில்சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படும்.
சட்டப்பேரவையில் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு.

*தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய சபாநாயகர் தனபால் உத்தரவு:
சட்டமன்ற விடுதிக்கு வரும் பார்வையாளர்களை பரிசோதிக்க ஏற்பாடு செய்யப்படும் - முதலமைச்சர் பழனிசாமி.

*விருதுநகர்: சிப்பிப்பாறை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்.
பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25,000 வழங்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி.

*முன் கூட்டியே முடிகிறது தமிழக சட்டபேரவை:

சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது:
இனி வரும் நாட்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபெறுகிறது.
ஒரே நாட்களில் 6 துறைகளுக்கான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. கொரோனா தாக்கம் எதிரொலி- சபாநாயகர் தனபால் அறிவிப்பு. ஏப்ரல் 9ம் தேதி வரை பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

*மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் 5வது நாட்களாக ஏராளமான தமிழர்கள் தவிப்பு:
சுற்றுலா சென்றவர்களும், பணி நிமித்தமாக சென்றவர்களும் நாடு திரும்ப முடியாமல் தவிப்பு.

5 நாட்களாக உணவு கிடைக்காமல் திண்டாடுவதாக வேதனை- விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதம்.நாடு திரும்ப மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என கோரிக்கை. விமான நிலையத்திலேயே 5 நாட்களாக தங்கி இருப்பதாக, சிக்கி தவிப்பவர்கள் புலம்பல்.

*கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வீட்டில் கொள்ளை.
தஞ்சாவூர் மாவட்டம் நாடியம் கிராமத்தில் உள்ள ஆட்சியரின் சொந்த வீட்டில் 50 சவரன் திருட்டு.
வீட்டின் பின்பக்கமாக நுழைந்த திருடர்கள் பீரோவை உடைத்து கைவரிசை.

*கொரோனா முன்னெச்சரிக்கை: சென்னையில் மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம் ஆகிய கடற்கரைகளுக்கு செல்ல இன்று பிற்பகல் 3 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை மக்களுக்கு அனுமதி இல்லை - மாநகராட்சி ஆணையர்.

*அவசியமற்ற பயணங்களை தவிருங்கள், அத்தகைய பயணங்கள் யாருக்கும் உதவாது கொரோனா குறித்து யாரும் அச்சமடைய வேண்டாம். கொரோனா தடுப்பு குறித்த மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் -  பிரதமர் மோடி.

*இந்தியாவில் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 298ஆக உயர்வு.
இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 4 பேர் உயிரிழப்பு- மத்திய அரசு.

*தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா:
தாய்லாந்திலிருந்து வந்த இருவருக்கும் நியூசிலாந்திலிருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6ஆக உயர்வு. - அமைச்சர் விஜயபாஸ்கர்

*கொரோனா எதிரொலி:சென்னையில் மார்ச் 23முதல் மார்ச் 31வரை மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் குறைப்பு.
காலை 4.30 - 6 மணி, காலை 10 மணி-மாலை 4 மணி, இரவு 8-11 மணி வரை ரயில்கள் ஓடாது.
மாலை 4  முதல் இரவு 8 மணி வரை அத்தியாவசிய பணிக்கு செல்வோர் மட்டுமே மெட்ரோவில் செல்லலாம்.

* புதுச்சேரியில் வரும் 23 ம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவு. பொருட்கள் வாங்குபவர்கள் காலை 7 மணி முதல்  இருந்து 9 மணி வரையிலும், மாலை 6 மணியில் இருந்து இரவு 9 வரை வெளியே வந்து வாங்கி கொள்ளலாம்-முதலமை‌ச்ச‌ர் நாராயணசாமி அறிவிப்பு.

*கேரளாவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 52ஆக உயர்ந்துள்ளது. - பினராயி விஜயன்.

*கொரோனா எதிரொலி: சிறிய வழக்குகளில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட 74 பேரில் 51 கைதிகள் சொந்த ஜாமீனில்  விடுவிப்பு.
12 மாவட்ட நீதிபதிகள் நேரில் விசாரணை நடத்தி ஜாமீன் வழங்கினர்.

*நாளை சென்னையில் மின்சார ரயில் சேவைகள் ரத்து -  தெற்கு ரயில்வே.
காலை 6-11 மணி வரையும் மாலை 6-10 வரையும் மட்டும் இரு மணி நேரத்திற்கு ஒரு ரயில் மட்டுமே இயங்கும்.

*நாளை மட்டுமே ஊரடங்கு-புதுவை முதல்வர் நாராயணசாமி.

புதுச்சேரி மாநிலத்தில் நாளை 22 ஆம் தேதி மட்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை 23 ஆம் தேதி முதல் 31 தேதி வரை 144 தடை உத்தரவு மட்டும் புதுச்சேரி மாநிலத்தில் அமலில் இருக்குமென முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் வழக்கம்போல் திறந்திருக்கும். இந்த குறிப்பிட்ட நாளில் 5 நபர்களுக்கு மேல் ஒன்று கூடக்கூடாது என்ற 144 தடை உத்தரவு மட்டும் அமலில் இருக்கும் என முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

*அஸித்ரோமைசின், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை கொரோனா பாதிப்புக்கு பயன்படுத்தலாம். 2 மருந்துகளையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என தெரியவந்துள்ளது- அமெரிக்க அதிபர் டிரம்ப்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages