அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

*உலக அளவில் கொரோனா பலி 10 ஆயிரத்தை தாண்டியது- சீனாவை முந்தியது இத்தாலி.

உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,035 ஆக அதிகரிப்பு.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,44,979 ஆக உயர்ந்துள்ளது.

இத்தாலி - 3,405, சீனா - 3,245, ஈரான் - 1,284, ஸ்பெயின் - 831 பேர் பலி.

*கச்சா எண்ணை விலை பாதாளத்தில் வீழ்ந்தாலும் குறையாத பெட்ரோல், டீசல் விலை.

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.72.28 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.65.71ஆகவும் உள்ளது. தொடர்ந்து 5வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி தொடர்வது குறிப்பிடத்தக்கது.

*வரும் ஞாயிற்றுக்கிழமை கோயம்பேடு சந்தை மூடப்படுகிறது-கோயம்பேடு சந்தை கடை உரிமையாளர்கள் முடிவு.

*மக்களின் ஊரடங்கு என்ற பிரதமர் மோடியின் அறிவுறுத்தலை ஏற்று அறிவிப்பு.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வேளாங்கண்ணி மாதா பேராலயம் மூடப்பட்டது - திருப்பலிகளும் ரத்து.

*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 173- லிருந்து 195 ஆக அதிகரிப்பு.

*தமிழ்நாடு முஸ்லிம் ஜமாத் அறிக்கை!

இன்று மதியம் மசூதிகளில் 15 நிமிடங்கள் மட்டுமே தொழுகை நடத்தப்படும் என தமிழ்நாடு முஸ்லிம் ஜமாத் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெறுவது வழக்கம். எனினும், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று 15 நிமிடங்களுக்கு மட்டுமே தொழுகை நடத்தப்படும் என்றும், தொழுகைக்கு வருபவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

*“நிர்பயா குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க 7 ஆண்டுகள் ஆனதற்கு நம் சிஸ்டத்தில் உள்ள குறைபாடுகளே காரணம்!” - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

*கொரோனா முன்னெச்சரிக்கை : ஆந்திர எல்லையில் உள்ள சுருட்டப்பள்ளி ஸ்ரீபள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் 31ம் தேதி வரை தரிசனம் ரத்து.

*கொரோனா முன்னெச்சரிக்கை - ஆந்திர எல்லையான திருவள்ளூர் மாவட்டம் பொன்பாடியில் அமைச்சர்கள் ஆய்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், பாண்டியராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

*நிர்பாய குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டதையடுத்து அதனை டுவிட்டரில் இணையவாசிகள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

டுவிட்டர் டிரெண்டிங்கில் 10 இடங்களிலும் நிர்பயா பற்றிய ஹெஸ்டேக் தான் உள்ளது.

*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின்எண்ணிக்கை 206ஆக உயர்வு. - இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்.

*இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு! ஏற்கனவே இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த நிலையில், இத்தாலியைச் சேர்ந்த 69 வயது முதியவர் இந்தியாவில் உயிரிழப்பு.

*தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு.

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.31,272க்கு விற்பனை.

*ரயில்வே பெண் பணியாளர் சஸ்பெண்ட்: கர்நாடகா : மகனின் இத்தாலி பயணத்தை மறைத்ததாக ரயில்வே பெண் பணியாளர் சஸ்பெண்ட்.

*தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடையில் விற்பனை சரிவு:

ஒட்டுமொத்தமாக 19 சதவீதம் விற்பனை குறைந்துள்ளதாக தகவல்.
நாள் ஒன்றுக்கு சுமார் 1 கோடி ரூபாய் விற்பனை சரிவு.
கொரோனா அச்சம் காரணமாக டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ளன.

*நிர்பயா வழக்கில் 4பேர் தூக்கிலிடப்பட்டதால், நீதி நிலைநாட்டப்பட்டது. - பிரதமர் மோடி ட்வீட்

பெண்களின் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது மிக முக்கியம். பெண்களுக்கு சமத்துவம், சமவாய்ப்பு அளிப்பதால் தேசத்தை நாம் கட்டி எழுப்ப முடியும். - பிரதமர் மோடி ட்வீட்.

*தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை தொடர்ந்து நடத்துவது குறித்து பிற்பகல் 1 மணிக்கு முடிவு செய்யப்படும்.
- சபாநாயகர் தனபால்.

*சட்டப்பேரவை விதி எண் 110-இன் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு:

3500 நகரும் நியாய விலை கடைகள் அமைக்கப்படும்.
181 அம்மா சிறப்பு அங்காடிகள் புதிதாக துவங்கப்படும்.
உயர்கல்வித்துறை சார்பில், 7 புதிய கலை, அறிவியல் கல்லுாரிகள் துவங்கப்படும்.

*கேரளாவில் இருந்து எந்தவித வாகனங்களும் கோவை மாவட்டத்தில் நுழையத் தடை உடனடியாக அமலுக்கு வருகிறது - கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

*கொரோனா முன்னெச்சரிக்கையாக தமிழகத்தில் பள்ளி தேர்வுகளை தள்ளிவைப்பது தொடர்பாக வரும் 23ஆம் தேதி விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

*கொரோனா - கிருமி நாசினி மற்றும் முக கவசம் இருப்பை உறுதி செய்ய எடுத்த நடவடிக்கை என்ன?
மார்ச் 23இல் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.
உலகம் முழுவதும் கிருமி நாசினி பற்றாக்குறை உள்ளது- தமிழக அரசு.

*வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை-வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு. சுய ஊரடங்கு என்ற பிரதமர் மோடியின் அறிவுறுத்தலை ஏற்று, அறிவிப்பு.

*மத்திய பிரதேச முதல்வர் பதவியில் இருந்து கமல்நாத் ராஜினாமா!

கடந்த 15 மாதங்களில் மாநில வளர்ச்சிக்காக பல திட்டங்களை தீட்டினேன். கடந்த 15 மாதங்களில் நான் என்ன தவறு செய்தேன்.
மத்திய பிரதேச மக்கள், பேராசைக்காரர்களை மன்னிக்க மாட்டார்கள் - கமல்நாத்.

*தமிழகத்தில் 22ந் தேதி அனைத்து உணவகங்களும் விடுமுறை அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை மறுநாள் அனைத்து உணவகங்களும் மூடப்படும் - தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் அறிவிப்பு.

*எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக இளநிலை மருந்தியல் தேர்வுகள் ஒத்திவைப்பு. தேர்வுகள் ஏப்ரல் 15ம் தேதி முதல் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது - பல்கலை. பதிவாளர்.

*கொரோனா ஆய்வு தொடர்பாக 18 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி.

கொரோனா தொற்று தொடர்பாக பரிசோதிக்க ஆய்வகம் அமைத்து கொள்ள அனுமதி. கொரோனா தொற்றை உறுதி செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தது மத்திய அரசு.

*"சுய ஊரடங்கை முன்னிட்டு, சாலையோரம் வசிக்கும் மக்களை சமூக நல கூடங்களில் தங்க அனுமதிக்க வேண்டும்": உணவும் வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு  உயர் நீதிமன்றம் உத்தரவு. வீடில்லா மக்கள் சமூக நலக் கூடங்களில் தங்க வைக்கப்படுவார்கள் - மாநகராட்சி.

*கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.ஸகாணொலி மூலம் நடைபெறும் ஆலோசனையில் முதல்வர் பழனிசாமி பங்கேற்பு .

*கொரோனாவை தடுக்க பிரதமர் மோடி ஞாயிறன்று சுயஊரடங்கு அறிவித்துள்ளதால் மார்ச் 22ஆம் தேதி சென்னையில் மெட்ரோ ரயில் சேவை ரத்து - மெட்ரோ நிர்வாகம்.

*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 223ஆக உயர்வு- சுகாதாரத்துறை அமைச்சகம்.

*கொரோனா எதிரொலியாக தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

*கொரோனா எதிரொலி : தமிழகத்தில் ராணுவத்திற்கு ஆட்கள் சேர்ப்பு முகாம் நடக்கும் தேதி தள்ளிவைப்பு என மத்திய அரசு அறிவிப்பு.

*கேரளா, கர்நாடகா, ஆந்திரா எல்லைகள் வரும் 31ம் தேதி வரை மூடப்படுகிறது - தமிழக அரசு அறிவிப்பு.

*கேரளாவில் மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.

*சென்னை அடுத்த மாங்காட்டில் கொரோனா அறிகுறி இருக்கலாம் என்ற சந்தேகத்தில், இரண்டு பெண்களை அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தி சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனைக்கு காய்ச்சல் மற்றும் இருமல் பாதிப்பால் இருப்பெண்கள் தனித்தனியாக வந்தனர். அவர்கள் மாங்காட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும், அதில் ஒருவர் அண்மையில் சிங்கப்பூரில் இருந்து வந்ததும் மற்றொருவர் கேரளாவில் இருந்து வந்ததும் தெரிய வந்தது. இதனால் இருவரும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு மாவட்ட சுகாதாரத்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

*கொரோனா எதிரொலியாக விடுமுறை அறிவித்த பிறகும் வெளி இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பது கவலையளிக்கிறது; தேவையற்ற பயணத்தை மக்கள் தவிர்க்க வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர்!

*கொரோனாவை தடுக்க பிரதமர் மோடி ஞாயிறன்று சுயஊரடங்கு அறிவித்துள்ளதால் மார்ச் 22ஆம் தேதி சென்னையில் மெட்ரோ ரயில் சேவை ரத்து - மெட்ரோ நிர்வாகம்!

*சென்னையில் உள்ள வீடற்றவர்கள் 22ம் தேதி மாநகராட்சி காப்பகங்களில் தங்கிக்கொள்ளலாம் , உணவும் அங்கேயே வழங்கப்படும். ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - சென்னை மாநகராட்சி!

*கொரோனா அச்சுறுத்தலால் வரும் 22-ஆம் தேதி அழைப்பு விடுக்கப்பட்டுள்ள மக்கள் ஊரடங்கை முன்னிட்டு சாலையோர மக்களை சமூக நலக் கூடங்களில் தங்க அனுமதித்து, உணவு வழங்க சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

*ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழக அரசு பேருந்துகள் இயங்காது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு! தனியார் பேருந்துகளை இயக்காமல் ஒத்துழைக்கவும் வேண்டுகோள்!

*தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் என்றும் சில இடங்களில் வானம் மேக மூட்டதுடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வெப்பச்சலனத்தால் நீலகிரி, கோவை உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி  மலையோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஷியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஷியசாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*தமிழகத்தில் தீவிரம் காட்டும் கொரோனா!

ராஜபாளையத்தில் கொரோனா அறிகுறியுடன் 3 பேர் தனி வார்டில் அனுமதி! அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறதா கொரோனா வைரஸ் பாதிப்பு? அரசு உண்மை நிலவரங்களை வெளியிட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages