அக்னிப்புரட்சி (09.04.2020) இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி (09.04.2020) இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி (09.04.2020) இன்றைய முக்கிய செய்திகள்.

*உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91,709 ஆக அதிகரிப்பு.

*உலகளவில் 209 நாடுகளில் பரவியுள்ள கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,50 லட்சம் ஆக உயர்வு. குணமடைந்தோர் எண்ணிக்கை 3.44 லட்சம் ஆக அதிகரிப்பு. -

*உலகளவிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 4,30,210 பேருக்கு கொரோனா பாதிப்பு. ஸ்பெயின் - 1,48,220, இத்தாலி - 1,39,422, ஜெர்மனி - 1,13,296, பிரான்ஸ் - 1,12,950, சீனா - 81,802, ஈரான் - 64,586, பிரிட்டன் - 60,733 பேருக்கு கொரோனா.

*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,865 ஆக உயர்வு.

உயிரிழந்தோர் எண்ணிக்கை 166 - லிருந்து 169 ஆக உயர்வு.

குணமடைந்தோர் எண்ணிக்கை 478 ஆக அதிகரிப்பு. - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்.

*தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால்  பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 738 லிருந்து 834 ஆக அதிகரிப்பு.

குணமடைந்தோர் எண்ணிக்கை 27ஆக அதிகரிப்பு

இன்று பாதிப்படைந்த 96 பேரில் 84 பேர் ஒரே இடத்தில் இருந்து வந்தவர்கள்- சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்.

*‘கொரோனா பற்றி அவதூறு: விஏஓ மீது வழக்கு’:

திருவண்ணாமலை: செய்யாறு அருகே கொரோனா பற்றி ஃபேஸ்புக்கில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக விஏஓ மீது வழக்குப்பதிவு. அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக ஆக்கூர்  விஏஓ மாலிக் அலி மீது தூசி காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.

*’ஊரடங்கு எதிரொலி - பாக்கெட் பொருட்களுக்கு தட்டுப்பாடு’:

தமிழகத்தில் பிஸ்கட், நூடுல்ஸ் உள்ளிட்ட பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பொருட்களுக்கு தட்டுப்பாடு. ஏற்கெனவே இருந்த சரக்குகள் விற்பனையாகிவிட்டதால் மளிகைக்கடைகளில் பாக்கெட் பொருட்களுக்கு தட்டுப்பாடு.

*‘மருந்து அனுப்பும் மோடிக்கு நன்றி’:
அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து அனுப்பும் பிரதமர் மோடிக்கு நன்றி.
கொரோனா தடுப்புக்காக ஹைட்ராக்சிகுளோரோகுயின் அனுப்பும் இந்தியாவையும், இந்திய மக்களையும் மறக்க மாட்டோம். - அதிபர் ட்ரம்ப்.

*சேலத்தில் ஊரடங்கு உத்தரவை கடுமையாக்க முடிவு.

*காய்கறி, மளிகை வாங்க செல்லும் இருசக்கர வாகனங்களை வண்ணங்கள் மூலம் அடையாளப்படுத்த காவல்துறை முடிவு.

*சேலத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே மளிகை, காய்கறிகள் வாங்க மக்கள் அனுமதிக்கப்படுவர். 144 தடை உத்தரவு விதிமுறைகள் சேலம் மாவட்டத்தில் இன்று முதல் கடுமையாக அமல்படுத்தப்படுகின்றன.

*‘சென்னையில் நடமாடும்  மளிகை அங்காடிகள் தொடக்கம்’
சென்னையில் நடமாடும் மளிகை, காய்கறி அங்காடி திட்டத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். 5,000 மூன்று சக்கர தள்ளுவண்டி, 2,000 சிறிய மோட்டார் வாகனங்கள் மூலம் மளிகைப்பொருட்கள், காய்கறிகள் விநியோகம்.- மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

*தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறிதாக இதுவரை 1.24 லட்சம் பேர் கைது - 1.14 லட்சம் வழக்குகள் பதிவு.
இதுவரை 97,146 வாகனங்கள் பறிமுதல் - ரூ.38,54,144 அபராதம் வசூல் - தமிழக காவல்துறை.

*மே மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு.

10 நாட்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தி முடிக்க கல்வித்துறை திட்டம். பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தல். கொரோனா  பாதித்த பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களை மாற்றவும் ஏற்பாடு.

*தமிழகத்தில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களின் விவரங்களை சேகரித்து ஏப்.14க்குள் அனுப்ப வேண்டும்- அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு, தொழிலாளர் நலத்துறை முதன்மைச் செயலாளர் நஸீமுதீன் உத்தரவு.

*இந்தியாவில் கொரோனாவுக்கு முதல்முறையாக மருத்துவர் உயிரிழப்பு.
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் சிகிச்சை பலனின்றி மருத்துவர் ஒருவர் உயிரிழப்பு.

*ஊரடங்கை நீடித்த முதல் மாநிலம்!
ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 30ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
கொரோனா தாக்கம் குறையாததால் முதல்வர் நவீன் பட்நாயக் நடவடிக்கை!

*23,000 தினக்கூலிப் திரைத்துறை பணியாளர்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.3000 செலுத்தும் சல்மான் கான்.

_இந்தியாவில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 21 நாள் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. திரைத் துறையில் பணியாற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு உதவும் விதமாக அவர்களின்  வங்கிக் கணக்கில் நேரடியாக நடிகர் சல்மான்கான் நிவாரணத் தொகையை செலுத்தி வருவதாக இந்திய சினிமா ஊழியர்கள் சம்மேளனத்தின் (FWICE) தலைவர் பி.என்.திவாரி கூறியுள்ளார்._

_தவணை முறையில் அவர்களுக்கு பணம் செலுத்துவதாக கூறிய சல்மான் கான், தொழிலாளர்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் முதற்கட்டமாக தலா 3000 ரூபாயை செலுத்தியுள்ளார். சில நாட்கள் கழித்து மீண்டும் மற்றவர்களுக்கு பணம் செலுத்துவதாகவும் கூறியுள்ளார்.

*கொரோனா வைரஸ் தொடர்பான ஐவிஆர்எஸ் தானியங்கி குரல் வழி சேவை அறிமுகம். சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 94999 12345 என்ற அவசர உதவி எண்ணில் கொரோனா தொடர்பான விளக்கங்களை பெறலாம் - தமிழக அரசு.

*கொரோனா விவகாரத்தை அரசியல் ஆக்கினால் பிணக்குவியல்களை காண நேரிடும்-உலக சுகாதார மையம், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு மறைமுக எச்சரிக்கை. சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார மையம் செயல்படுவதாக, டிரம்ப் கூறிய குற்றச்சாட்டுக்கு பதில். மக்களை காப்பாற்றுவதே நோக்கம்- குற்றம்சாட்டுவோர் பற்றி கவலை இல்லை"- உலக சுகாதார மையம்.

*குஜராத் தப்லீக் ஜமாத் அமைப்பினர் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதி:

குஜராத்தில் இருந்து கடந்த 9ம் தேதி சென்னைக்கு வந்து மத பிரச்சாரம்.
39 மத குருமார்கள் பேசின் பிரிட்ஜ் அருகே உள்ள ஜமாத்தில் தங்கி மத பிரச்சாரம் செய்துள்ளனர். 80 வயதுடைய நபருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருடன் தங்கியிருந்த 39 பேரும் மருத்துவமனையில் அனுமதி.

*முகக் கவசம் அணியாவிட்டால்; 1 முதல் 6 மாதம் வரை சிறை:

வீட்டை விட்டு வெளியே வரும் போது முக கவசம் அணிவது கட்டாயம்.
முக கவசம் அணியாமல் வெளியே சுற்றித்திரிபவர்களுக்கு 1 மாதம் முதல் 6 மாதம் வரை சிறை. - டெல்லி அரசு அதிரடி அறிவிப்பு.

*ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு. - அண்ணா பல்கலைக்கழகம்.

*சன் டி.வி குழுமத்தில் பணிபுரியும் 6 ஆயிரம் ஊழியர்களின்  1 நாள் ஊதியமான ரூ.10 கோடியை, மத்திய-மாநில அரசுகளுக்கு கொரோனா நிதியாக வழங்குகிறது சன் குழுமம்.

*விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க, விளை பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்-தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.
நஷ்டம் அடைந்துள்ள சிறு விவசாயி களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் நிதியுதவி - நீதிபதிகள் கருத்து.

*தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பு:
தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது -முதல்வர் பழனிசாமி.

விமான நிலையங்களில் 2.10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது.

344 பேரின் கொரோனா பரிசோதனை முடிவு வர வேண்டி உள்ளது.
2,500 வென்டிலேட்டர் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்றிரவு 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் வருகின்றன.

*நோயின் தீவிரத்தை பொருத்துதான் தமிழகத்தில் ஊரடங்கு நிலையை நீட்டிக்க வேண்டுமா வேண்டாமா என்ற முடிவு எடுக்கப்படும்- தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்.

கொரோனா பரவல் 3ஆம் கட்டத்திற்கு நகர வாய்ப்பு உள்ளது; இருப்பினும் தடுப்பு நடவடிக்கை தீவிரம் செய்யப்பட்டுள்ளது - முதல்வர்.

144 தடை உத்தரவை மீறியவர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் அபராதம் வசூல்
செய்யப்பட்டுள்ளது. - முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

*சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது!

*சன் டி.வி குழுமம் கொரோனா நிவாரண நிதியாக ₹ 10 கோடி வழங்கியது. மேலும் சன் குழுமத்தில் பணிபுரியும் 6 ஆயிரம் ஊழியர்களின்  1 நாள் ஊதியத்தையும் வழங்க முடிவு.

*கொரோனா தடுப்பு நடவடிக்கை: மத்திய அரசு மேலும் ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: கொரோனா தடுப்பு பணிகளுக்காக மாநிலங்களுக்கு மத்திய அரசு மேலும் ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு .

*இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 20 பேர் உயிரிழப்பு.
இதுவரை கொரோனாவால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 186-ஆக உயர்வு.

*கொரானோ தடுப்பு பணிகளுக்கு 3 கோடி வழங்குவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவிப்பு:
பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்கு தலா 50 லட்சம் வழங்கப்படும். சினிமா தொழிலாளர்கள் சம்பளத்திற்கு 50 லட்சம்,  நடன கலைஞர்கள் சங்கத்திற்கு 50 லட்சம்,  மாற்றுத்திறனாளிகள் மற்றும் தின கூலி தொழிலாளர்களுக்கு 1 கோடி வழங்கப்படும் - ராகவா லாரன்ஸ்.

*மருத்துவ நிபுணர்களுடன்;
முதல்வர் நாளை ஆலோசனை:
சென்னை: தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் காணொலிக் காட்சி மூலம்  முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages