அக்னிப்புரட்சி (10.04.2020) இன்றைய முக்கிய செய்திகள்
*உலகம் முழுக்க 16.38 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
உலகம் முழுக்க 1 லட்சத்துக்கும் மேலானோர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.
மொத்தம் 3,69 லட்சம் பேர் இதுவரை உலகம் முழுக்க குணப்படுத்தப் பட்டுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 84,860 பேர் உலகம் முழுக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா காரணமாக அமெரிக்காவில் 468,286 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்,
அமெரிக்காவில் 16,663 பேர் பலியாகி உள்ளனர்.
*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,761ஆக உயர்வு.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 206ஆக உயர்வு.16002 ரத்த மாதிரி சோதனைகளில், 0.2 சதவீதத்தினருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 678 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது- 33 பேர் உயிரிழப்பு. இதுவரை சமூக பரவல் இல்லை மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம். - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்
*தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 834 லிருந்து 911 ஆக அதிகரிப்பு உயிர் இழந்தோர் 9 ஆக அதிகரிப்பு. கொரோனா பாதிப்பில் இருந்து 44 பேர் குணமடைந்து உள்ளனர்.
கொரோன பாதிக்கப்பட்ட 77 பேரும் தனிமைபடுத்தப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள். - தலைமை செயலர் சண்முகம்.
*தமிழகம் முழுவதும் தடை உத்தரவை மீறியதாக இதுவரை 1.25 லட்சம் வழக்குகள் பதிவு 1 லட்சத்து 6 ஆயிரத்து 539 வாகனங்கள் பறிமுதல். ரூ.45 லட்சத்து 13 ஆயிரத்து 544 அபராதம் விதிப்பு.
*புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5லிருந்து 7 ஆக உயர்வு. டெல்லி மாநாட்டில் பங்கேற்று புதுச்சேரி திரும்பிய மேலும் 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியான நிலையில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை.
*கொரோனா தடுப்பு பணிக்காக இந்தியாவுக்கு ரூ.16,698 கோடி நிதி ஒதுக்கப்படும். - ஆசிய வளர்ச்சி வங்கி.
*தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிதமானமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு. ஆங்காங்கே 30-40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
- சென்னை வானிலை ஆய்வு மையம்.
*கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஈரோட்டை சேர்ந்த இளைஞர் குணமடைந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து இளைஞர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். - மருத்துவமனை டீன்.
*ஊரடங்கு உத்தரவை நல்ல முறையில் கடைப்பிடித்து வரும் பொதுமக்களுக்கு நன்றி - சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.
*தமிழ்நாடு திரைப்பட நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.1000 வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு.
*சென்னையில் இருந்து அமெரிக்கா மற்றும் சிங்கப்பூருக்கு 498 பயணிகளுடன் 3 சிறப்பு விமானங்கள் புறப்பட்டது: இந்தியாவிற்கு சுற்றுலா வந்த பயணிகள் மீண்டும் அவர்களது நாட்டிற்கு அனுப்பிவைப்பு.
*மலேசியாவில் ஏப்ரல் 28ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - பிரதமர் முகைதீன் யாசின்: ஏற்கனவே ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏப்ரல். 28ம் தேதி வரை நீட்டிப்பு.
*மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்களுக்கான ஊதியம் சேவைக்கு ஈடானதாக இல்லை. ஊதியம் உயர்த்தப்படும் என மத்திய - மாநில அரசுகள் மீது உயர்நீதிமன்றம் நம்பிக்கை.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மாநில மற்றும் மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து.
*திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டியில் 144 தடை உத்தரவை மீறி திறக்கப்பட்ட தேவாலயத்திற்கு சீல் வைப்பு - வட்டாட்சியர் நடவடிக்கை.
*கொரோனா பாதிப்பு காரணமாக நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு. நீட் தேர்வு விண்ணப்பங்களில் ஏப்ரல் 14ம் தேதி இரவு வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் கால அவகாசம் நீட்டிப்பு.
*பஞ்சாபில் மே 1ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்படுவதாக அறிவிப்பு
*இந்தியாவில் 3.28 கோடி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் உள்ளன.
*ஊர்வலங்கள், திருவிழாக்கள் போன்றவைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.
*90% குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.1,000 வழங்கப்பட்டுள்ளது! - தலைமைச் செயலர் சண்முகம்.
*ஏழை மக்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கில் மக்கள் சிரமங்களை போக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வறுமையில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதியுதவி வீடுகளில் காய்கறிகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - தலைமைச் செயலர் சண்முகம்
*3 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.
*கடந்த 24 மணி நேரத்தில் தீவிர சுவாச பிரச்சனை உள்ளவர்களை சோதித்ததில் யாருக்கும் கொரோனா இல்லை - தலைமைச் செயலர்.
*"முதல்வர் தினமும் ஆய்வுகள் மேற்கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு வருகிறார்".
*ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முதலமைச்சர் பரிசீலனை. பிரதமருடன் ஆலோசித்த பிறகு தமிழக அமைச்சரவையில் முடிவு.
* வெளிநாடு சென்று வந்த 5 பேர் மூலமாக 71 பேருக்கு கொரோனா பாதிப்பு.
*அரியலூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.
கேரளாவில் பணிசெய்து அரியலூர் வந்த இளைஞருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி. பரிசோதனை முடிவு இன்னும் வராத நிலையில் விரக்தியில் தற்கொலை என தகவல்.
*திருச்சி மாநகர பகுதிகளில் மருத்துவ அவசர தேவை மற்றும் அலுவல் பணி நிமித்தம் தவிர வேறு எவரும் 4 சக்கர வாகனங்களில் பயணிக்க கூடாது - மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவு.
மக்கள் நடமாட்டத்தை குறைக்கவும், கொரானோ நோய்த்தொற்று பரவலை தடுக்கும் விதமாகவும் நடவடிக்கை. மக்கள் காய்கறி, மளிகை, இறைச்சி மற்றும் மருந்துகளை தாங்கள் வசிக்கும் பகுதியிலிருந்து 2 கிமீ எல்லைக்குள் வாங்கி கொள்ள வேண்டும்.
மக்கள் வெளியில் வரும்போது ஆதார், வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை கையில் அவசியம் எடுத்து வரவேண்டும் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
No comments:
Post a Comment