அக்னிப்புரட்சி (13.04.2020) இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி (13.04.2020) இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி (13.04.2020) இன்றைய முக்கிய செய்திகள்.

*உலகளவில் கொரோனாவால் உயிரிழப்பு 1.14 லட்சத்தை தாண்டியது.

*உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,14,201 ஆக அதிகரிப்பு.

*உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,52,533 ஆக உயர்வு.

*உலகளவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,23,399 ஆக அதிகரிப்பு.

*அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,60,425 ஆக அதிகரிப்பு.

*அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் 1,514 பேர் உயிரிழப்பு; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22,105 ஆக அதிகரிப்பு.

ஸ்பெயின் - 1,66,831, இத்தாலி - 1,56,363;பிரான்ஸ் - 1,32,591; ஜெர்மனி - 1,27,854; இங்கிலாந்து - 84,279; ஈரான் - 71,686 பேர் கொரோனாவால் பாதிப்பு.

*இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 2,000ஐ தாண்டிய முதல் மாநிலமானது மகாராஷ்டிரா. மும்பையில் 59 பேர் உட்பட மாநிலத்தில் புதிதாக 82 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2064ஆக உயர்வு.

*இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டியது.

இந்தியாவில் 9352 பேர் பாதிப்பு!:
"நாட்டில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 324 ஆகவும், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9,352ஆகவும் உயர்வு!.
நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 980ஆக அதிகரித்துள்ளது".- மத்திய சுகாதாரத்துறை.

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 98 ஆகவும், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,173ஆகவும் உயர்வு!.
நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 13 ஆகவும், நோய்த்தொற்றால்

*'முதல்வர் பழனிசாமி தமிழ் புத்தாண்டு வாழ்த்து':
தமிழ் புத்தாண்டு மலர்கின்ற இனிய நாளில் தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
தமிழ் மக்கள் பன்னெடுங்காலமாய் சித்திரை முதல் நாளை தமிழ்புத்தாண்டாக கொண்டாடி மகிழ்கிறார்கள். -முதல்வர் பழனிசாமி.

*ஜாலியன்வாலாபாக்கில் கொல்லப்பட்ட தியாகிகளை இந்நாளில் தலை வணங்குகிறேன் அவர்களது துணிச்சல் நாட்டு மக்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும் - பிரதமர் மோடி.

*‘நாகலாந்துக்கு பரவியது கொரோனா...’: கொல்கத்தாவுக்கு சென்று திரும்பிய திமாபூரை சேர்ந்த நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாகலாந்து மாநிலத்திற்கும் கொரோனா பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

*"தற்போதைய சூழலில் தன்னார்வலர்கள் உதவி செய்வது, தொற்று நோயை அதிகரிக்கவே செய்யும்; தன்னார்வலர்கள் உதவும்போது தொற்று அதிகமாகும் என சுகாதாரத்துறை எச்சரிக்கை; தன்னார்வலர்கள் அரசிடம் ஒப்படைத்தால் வருவாய்த்துறை மூலம் விநியோகம் செய்யப்படும்!" - முதல்வர் பழனிசாமி விளக்கம்.

*தன்னார்வலர்கள் யாருக்கும் தடை விதிக்கவில்லை; மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட அறிவுறுத்தல். - தமிழக அரசு விளக்கம்.

*அமெரிக்கா போன்ற நாடுகள் மிகப்பெரிய பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில் தமிழக அரசு சிறப்பாக நடவடிக்கை எடுக்கிறது. - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

*டி.என்.பி.எஸ்.சி.க்கு தலைவர் நியமனம்: டி.என்.பி.எஸ்.சி. தலைவராக ஐ.ஏ.எஸ் அதிகாரி கா.பாலச்சந்திரனை நியமித்து தமிழக அரசு உத்தரவு.

*ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்க தடை என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு தினகரன் கண்டனம். நிவாரணப் பொருட்கள் வழங்க தடை விதித்திருப்பது மனிதநேயமற்ற செயல் - தினகரன்.

*ஆம்பூரில் அனைத்து வங்கிகளும் மூடல்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை அனைத்து வங்கிகளும் மூடல்.
ஆம்பூரில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணி நடவடிக்கை.

*144 தடை உத்தரவை மீறிய 1 லட்சத்து 63 ஆயிரத்து 477 பேர் மீது வழக்குப்பதிவு.
விதிகளை மீறிய 1 லட்சத்து 39 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்.
இதுவரை 68 லட்சத்து 57 ஆயிரத்து 344 ரூபாய்  அபராதம் விதிப்பு.

*மகாராஷ்டிர வீட்டுவசதிதுறை அமைச்சர் ஜிதேந்திர அவ்ஹத்  தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்!கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்ததால் நடவடிக்கை!

*நாளை காலை 10 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்

*தமிழகத்தில் காய்கறி, பழங்கள், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை - ககன்தீப் சிங் பேடி.

மக்களுக்கு சிரமமின்றி அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஏற்பாடு அரசு விற்பனை மையங்களை விவசாயிகள் அணுகலாம். அரசு கிடங்குகளை விவசாயிகள் கட்டணமின்றி பயன்படுத்தலாம்.

செடிகளில் கருகிய 35 ஆயிரம் மெட்ரிக் டன் பூக்களை சென்ட் ஆலைகளுக்கு அனுப்ப நடவடிக்கை. சோப்பு, நாப்கின், முகச்சவர லோஷன் போன்றவற்றை தங்கு தடையின்றி எடுத்துச் செல்ல தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி.
- வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங்

*கோவையில் அரசு மருத்துவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று.
இருவரும் கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

*அனைத்து மாநிலங்களும் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பின்பற்றி வருகின்றன: போலீசாருக்கு உதவ NSS, NCC மாணவர்கள் களமிறங்க உள்ளனர்! - மத்திய உள்துறை அமைச்சக இணை செயலாளர் புன்யா ஸ்ரீவஸ்தா தகவல்!

*தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப் பட்டுள்ளதே தவிர ரத்து செய்யப்படவில்லை- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் - பள்ளி கல்வித்துறை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages