அக்னிப்புரட்சி (18.04.2020) இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி (18.04.2020) இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி (18.04.2020) இன்றைய முக்கிய செய்திகள்.

*உலக அளவில் 22,29,701 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உலக அளவில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 145 பேர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர். அதே நேரம் 5 லட்சத்து 71 ஆயிரத்து 573 பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் ஒரே நாளில் 32,165 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 7,09,735ஆக உயர்வு.
ஒரே நாளில் 2,535 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததால் அங்கு பலி எண்ணிக்கை 37,154ஆக உயர்வு.

ஸ்பெயின் நாட்டில் 1 லட்சத்து 90 ஆயிரம், இத்தாலியில் 1 லட்சத்து 72 ஆயிரம், பிரான்சில் 1 லட்சத்து 47 ஆயிரம், ஜெர்மனியில் 1 லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

*இந்தியாவில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 991 ஆகும் இதோடு சேர்த்து 14,792 ஆக உயர்வு. இன்று உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆகும் இதோடு சேர்த்து 488 ஆக உயர்வு. குணமடைந்தோர் எண்ணிக்கை 2015 ஆக உயர்வு- மத்திய சுகாதார அமைச்சகம்.

*தமிழகத்தில் புதிதாக 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி:

கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1372 ஆக உயர்வு. தமிழக சுகாதாரத் துறை தகவல். 4 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் 82 பேர் சிகிச்சை முடித்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் 1.1% என்ற நிலையிலேயே உள்ளது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன - அமைச்சர் விஜயபாஸ்கர்.

*ஊரடங்கை மீறி கறி விருந்து நடத்தியதாக 10 பேர் கைது:

மயிலாடுதுறை மாவட்டம் வில்லியநல்லூர் கிராமத்தில் பிரியாணி சமைத்து விருந்து.
கறி விருந்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் வெளியிட்ட டிக்- டாக் வீடியோ. கறி விருந்தில் கலந்து கொண்ட இளைஞர்களில் 10 பேரை கைது செய்த போலீசார்.

*கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாளை முதல் காலை 7.30 மணிக்கு மேல் இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை இரு சக்கர வாகனங்களில் காய்கறி வாங்க வருபவர்களுக்கு காலை 4 மணி - 7.30 மணி வரை மட்டுமே அனுமதி. உத்தரவை மீறினால் இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் - சென்னை மாநகராட்சி.

*ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் சேலத்தில் முதல்முறையாக நடந்த சோதனையில் 18 பேருக்கு கொரோனா இல்லை.
ரேபிட் டெஸ்ட் மூலம் 30 நிமிடங்களில் கொரோனா முடிவை வெளியிட்டது சேலம் அரசு மருத்துவமனை.

*தூத்துக்குடியில் கொரோனா ஆய்வகம்!: தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில், ரூ.80 லட்சம் மதிப்பில் புதிதாக கொரோனா பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்!

*சோலார் பேனல் உற்பத்தி பூங்காக்கள் அமைக்க தூத்துக்குடி துறைமுகம் விருப்பம் புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தி சாதனங்கள் உற்பத்திக்கு நிலம் கண்டறிக - மத்திய அரசு.

மத்திய அரசின் சுற்றறிக்கையை ஏற்று தூத்துக்குடி துறைமுகம் விருப்பம்.
சோலார் பேனல்கள் உற்பத்தியில் உலக அளவில் சீனாவே முன்னிலை வகிக்கிறது. கொரோனா தாக்கம் - சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய உலக நாடுகள் தயக்கம்.

உலக அளவில் உருவாகியிருக்கும் வாய்ப்பை பயன்படுத்த மத்திய அரசு முனைப்பு. சூரிய மின் சக்தி உற்பத்தியில் மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

*ஊரடங்கு விதிகளை மீறியவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரூ.1 கோடியை தாண்டியது. தமிழகம் முழுவதும் 2,14,951 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரை 1,94,339 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கை மீறியதாக 2,28,823 பேர் கைதாகி விடுதலை.

*பணியில் இருக்கும் தபால் ஊழியர்களுக்கு  கொரோனா ​தொற்றினால் ரூ.10 லட்சம் இழப்பீடு-மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் அறிவிப்பு.

கொரோனா காலத்தில் தபால் ஊழியர்கள் அத்தியாவசிய பொருட்களை வழங்குகின்றனர்.
நெருக்கடியான சூழலில் பணியாற்றும் ஊழியர்களுக்காக மத்திய அரசு அறிவிப்பு.

*கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் காவல் அதிகாரி பலி. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவல் உதவி ஆணையர் அனில் கோலி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

*நமது மீனவர்களுக்கு தடைவிதித்துவிட்டு பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பது எவ்வகை நீதி? - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

*மே 4 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும் - ஏர்  இந்தியா. ஜூன் 1 ஆம் தேதி முதல் சர்வதேச விமான சேவை தொடங்கப்படும் - ஏர் இந்தியா அறிவிப்பு.

*எந்த தளர்வும் இல்லை: கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கு மே 3-ம் தேதி வரை தொடரும்.

கடலூர் மாவட்டத்தில் இப்போதுள்ள ஊரடங்கு நடைமுறையே மே 3-ம் தேதி வரை தொடரும். இது மேலும் கடுமையாக்கப்படும், எந்த தளர்வும் இல்லை. கடலூர் ஹாட்ஸ்பாட் (சிவப்பு மண்டலம்) பகுதியாக உள்ளதால் ஊரடங்கில் தளர்வுக்கு வாய்ப்பில்லை -ஆட்சியர் அன்புச்செல்வன்.

*சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு கோடைக்கால விடுமுறை ரத்து.

மே 2 முதல் 31 ம் தேதி வரை வழக்கம் போல் நீதிமன்றம் செயல்படும்.
தமிழகம், புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களின் கோடை விடுமுறையும் ரத்து- சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் குமரப்பன் அறிவிப்பு.

*கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மருத்துவ ஊழியர்களுக்கு நோய் தொற்று அல்லது இறப்பு ஏற்பட்டால் அவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.1 கோடி வழங்கப்படும். - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்.

*20ஆம் தேதி முதல் பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படும்-பதிவுத்துறை தலைவர் அறிவிப்பு.

பணிக்கு வரும் ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும்.
1 மணி நேரத்திற்கு 4 டோக்கன் வீதம் நாளொன்றுக்கு 24 டோக்கன்கள் வரை பதிவுசெய்ய அறிவுறுத்தல்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை சேர்ந்தவராக இருந்தால் பதிவு பணிகள் செய்யப்படாது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அலுவலகம் இயங்கினால் தற்காலிக இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.

*கொரோனா பாதிப்பு பட்டியல் சிறிய விளக்கம்:

ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ளவர்களும் கொரோனா பாதிப்பில் இருந்து பலர் டிஸ்சார்ஜ் ஆகி விட்ட பிறகும் பட்டியலில் அது வரவில்லை என தெரிவிக்கின்றனர். பட்டியலில் வருவது கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டுமே. மருத்துவமனையில் இருப்பவர்கள் எண்ணிக்கை என வந்தால் தான் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை குறைக்கப்படும். இது பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மட்டுமே அதனால் இதில் டிஸ்சார்ஜ் செய்ய பெறுபவர்களின் எண்ணிக்கை வராது.

* திருச்சியில் துப்பாக்கி ஆலைக்கு பணிக்கு வர வற்புறுத்தவேண்டாம்’:

திருச்சியில் துப்பாக்கி ஆலை, எச்.ஏ.பி.பி. ஆலை ஏப்.20 முதல் இயங்கும் என அறிவித்த நிலையில் ஏப்ரல்.20 முதல் பணிக்கு வர வேண்டும் என வற்புறுத்த வேண்டாம் என வேண்டுகோள். - பாதுகாப்புத்துறை தொழிற்சங்கங்கள்.

*பாதுகாப்பு படைவீரர்கள் 2 பேர் உயிரிழப்பு: காஷ்மீர் : பாரமுல்லா பகுதியில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படைவீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.

*‘புதுச்சேரியில் எச்சில் துப்பினால் அபராதம்’

புதுச்சேரியில் பொது இடத்தில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும்.
இறைச்சிக் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் கடை உரிமம் ரத்து செய்யப்படும்.
- முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages