அக்னிப்புரட்சி (21.04.2020) இன்றைய முக்கிய செய்திகள்
*உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 24,80.503 பேர் பாதிப்பு.
உலகில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.7 லட்சத்தை தாண்டியது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 6,46,328 பேர் இதுவரை குணமாகியுள்ளனர்.
பிரான்சில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20265 ஆக உயர்வு.
அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலியையடுத்து பிரான்சில் 20 ஆயிரத்தை தாண்டியது உயிரிழப்பு.
அமெரிக்கா கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வீழ்ச்சி- 0 டாலருக்கும் கீழே போனது.
வெஸ்ட் டெக்ஸாஸ் இண்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் மற்றும் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை படுமோசமான சரிவை சந்தித்து வந்தன.
இந்த நிலையில் WTI கச்சா எண்ணெய் விலை இன்று 0 டாலருக்கும் கீழே குறைந்து -$40.32 ஆக இருந்தது, இது 321% சரிவு ஆகும்.
*இந்தியாவில் கொரோனா பாதிப்பு 18 ஆயிரத்தை தாண்டியது.
நாடு முழுவதும் 18,985 பேர் கொரோனாவால் பாதிப்பு.
இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 603 ஆக அதிகரிப்பு.
3,260பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
*தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் களின் எண்ணிக்கை 1596 ஆக அதிகரிப்பு கொரோனாவால் உயிர்ழிந்தவர்கள் எண்ணிக்கை 18 உயர்வு- சுகாதாரத்துறை அறிக்கை.
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 358 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பிலிருந்து 178 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதிகபட்சமாக கரூரில் 48 பேரும், கோவை ESI மருத்துவமனையிலிருந்து 31 பேரும் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 635 பேர் குணமடைந்துள்ளனர்.
*அரசு மருத்துவர்கள் நாளைமுதல் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிய வேண்டும். பணியின்போது இறந்த மருத்துவர்களுக்கு நாளை இரவு 9 மணிக்கு குடும்பத்துடன் மெழுகு வர்த்து ஏந்தி அஞ்சலி செலுத்த வேண்டும்- அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு.
*வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கவலைக்கிடம்.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக உளவுத்துறையை கண்காணிக்கும் அமெரிக்காவின் உயரதிகாரி தகவல் என சி.என்.என். தொலைக்காட்சி செய்தி.
*அமெரிக்காவில் பிறநாட்டினர் குடியேறுவதை தற்காலிகமாக நிறுத்திவைப்பதற்கான ஆணை கையெழுத்தாக உள்ளது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்.
கண்ணுக்கு தெரியாத வைரஸ் தாக்குதல், அமெரிக்க குடிமக்களின் வேலையைப் பாதுகாப்பதன்அவசியம் ஆகியவை காரணமாக அமெரிக்காவில் பிறநாட்டினர் குடியேறுவதை தற்காலிகமாக நிறுத்திவைப்பதற்கான ஆணை கையெழுத்தாக உள்ளது- அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
*அறுவை சிகிச்சைக்குப் பின் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மோசமான உடல்நிலையில் இருப்பதாக வெளியான தகவல்களுக்கு தென் கொரியா மறுப்பு.
*தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கழுநீர்குளம் பகுதியில், சாலையில் நடந்து சென்ற மூன்று பேர் மீது கார் மோதிய விபத்தில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
*கொரோனா ஊரடங்கு நிவாரணம் - தமிழக அரசு அறிவிப்பு:
தமிழகத்தில் மீனவர்கள், பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு 14 நல வாரியங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாணை வெளியீடு.
*சென்னை மாநகராட்சி மீண்டும் வேண்டுகோள்:
கொரோனா தொற்றால் இறந்தவர் உடல் மூலம் வைரஸ் கிருமி பரவாது
பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை - சென்னை மாநகராட்சி.
இறந்தவர்களை மரியாதையுடன் அனுப்பி வைப்பதே மனித நேயம்.
கொரோனாவால் இறந்தவர்கள் உடல் சரியான பாதுகாப்புடன் கையாளப்படுகின்றன.
இறந்தவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும். மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து பிரச்சினை உருவான நிலையில் மீண்டும் வேண்டுகோள்.
*ஊரடங்கை மீறியதாக இதுவரை 2,60,566 பேர் கைது:
தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறயதாக இதுவரை 2,60,566 பேர் கைது - 2,45,097 வழக்குகள் பதிவு:
2,19,248 வாகனங்கள் பறிமுதல்.
ரூ.1,36,01,694 அபராதம் வசூல் - தமிழக காவல்துறை.
*ஊரடங்கு முடிந்து மே 4 ஆம் தேதி முதல் அரசுப் பேருந்தில் ஏறும் பயணிகள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அனுமதிக்க கூடாது.
- சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்.
*மருத்துவரை அடக்கம் செய்ய தடுத்த விவகாரம் - 90 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு:
கொரோனாவால் இறந்த மருத்துவரை அடக்கம் செய்யவிடாமல் தடுத்த விவகாரம்.
மறியலில் ஈடுபட்ட 90 பேர் மீது மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு.
வேலங்காடு மயானத்தில் வன்முறையில் ஈடுபட்ட 21 பேர் ஏற்கனவே சிறையில் அடைப்பு.
மருத்துவர் இறந்தவுடன் முதலில் கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்துக்கு அடக்கம் செய்ய சென்றனர்.
வேலங்காடு மயானத்தில் போராட்டம், வன்முறைக்கு பிறகு மருத்துவரை அடக்கம் செய்தனர்.
*கல்வி கட்டணம் -தமிழக அரசு கடும் எச்சரிக்கை:
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை கல்வி கட்டணம் செலுத்த வற்புறுத்தக் கூடாது. தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை.
சில பள்ளி, கல்லூரிகள் கட்டணம் செலுத்த சொல்லி வற்புறுத்துவதாக புகார் வருகிறது.
எச்சரிக்கையை மீறி கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்".- தமிழக அரசு எச்சரிக்கை.
*கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக இதுவரை ரூ.160.93 கோடி பெறப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது - தமிழக அரசு. கடந்த 7 நாட்களில் மட்டும் ரூ.26.30 கோடி நிவாரண நிதி பெறப்பட்டுள்ளது.
*புதுச்சேரியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.
*"கொரோனாவுக்கு இலவச சிகிச்சை அளிப்பது குறித்து அரசுதான் முடிவு செய்ய வேண்டும்; இதுபோல விளம்பரம் தேடும் மனுவை தாக்கல் செய்யக்கூடாது!. - மனுதாரருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம்.
*குண்டர் சட்டம் பாயும் - காவல் துறை எச்சரிக்கை. கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர் சட்டம். சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை.
*சென்னை: கீழ்பாக்கத்தில் மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம். தாக்குதல் தொடர்பாக 90 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு.
*ஜம்மு - காஷ்மீரில் 4ஜி இணைய சேவை வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கு:
காஷ்மீரின் களநிலவரம் குறித்து வரும் 26ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.
மத்திய அரசு மற்றும் காஷ்மீர் நிர்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு -விசாரணை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
*அம்மா உணவகத்தை தமிழக அரசு நிதியில் தான் நடத்த வேண்டும்; அதிமுக நிதியில் நடத்தக்கூடாது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம்.
அம்மா உணவகத்தில் உணவு வழங்க மற்ற அரசியல் கட்சிகளுக்கு அரசு அனுமதி தருமா.
அம்மா உணவகத்தை அதிமுக நடத்துவது சட்டவிரோத செயல்; அதிகார துஷ்பிரயோகம்.
*தமிழக முதலமைச்சர் வேண்டுகோள்:
மருத்துவர்களின் அர்ப்பணிப்பிற்கு மரியாதையளித்து மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.
- முதல்வர் பழனிசாமி.
*ஒடிசாவில் கொரோனா தடுப்பு பணியின்போது இறக்கும் மருத்துவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு.
மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களை தியாகிகளாக கருதி இறுதிச்சடங்கு நடத்தப்படும் - முதல்வர் நவீன் பட்நாயக்.
*ரேபிட் கருவி பரிசோதனையை நிறுத்தியது ராஜஸ்தான் அரசு,
துல்லியமான முடிவு தராததால் நடவடிக்கை. ராஜஸ்தான் அரசு.
இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
*நெல்லையில் ஏப்.26, மே.3ல் முழு ஊரடங்கு. நெல்லையில் ஏப்.26, மே.3 ஆகிய 2 நாள்களிலும் மருத்துவமனை, மருந்தகங்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும்- மாநகராட்சி ஆணையர் கண்ணன்.
*தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மே 3 வரை வீட்டில் இருந்தே பணியாற்றும் முறையை கடைபிடிக்க வேண்டும் - அமைச்சர் உதயகுமார்.
*அம்மா உணவகங்களில் அரசே இலவசமாக உணவு வழங்க வேண்டும்.
அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்-அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை. சுங்க கட்டணத்தை உயர்த்தி இருப்பது மனிதநேயமற்ற செயல் - ஸ்டாலின்.
*இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 20,004 ஆக அதிகரித்துள்ளது. 641 பேர் பலியாகி உள்ளனர். 3,901 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
*கொரோனா பாதிப்பு குறித்து பிரதமர் மோடி தலைமையில், நாளை(ஏப்.,22) அமைச்சரவை அவசர ஆலோசனை நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில், அமைச்சரவை அவசர ஆலோசனை நடத்த உள்ளது. பிரதமர் இல்லத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பலன்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment