அக்னிப்புரட்சி (29.04.2020) இன்றைய முக்கிய செய்திகள்
*உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31 லட்சத்தை தாண்டியது.
உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,36,507 ஆக உயர்வு.
கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 2,17,813 ஆக உயர்வு.
இந்த 31 லட்சம் பேரில் 19,65,373 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
19.08 லட்சம் பேருக்கு லேசான அறிகுறிகளே உள்ளதால் அச்சப்பட தேவையில்லை.
56,970 பேர் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் உள்ளனர்.
*இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 31,333 லிருந்து 31787ஆக உயர்வு.
குணமடைந்தோர் எண்ணிக்கை 7,696 லிருந்து 7,779 ஆக உயர்வு.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 937லிருந்து 1,008ஆக உயர்வு- மத்திய சுகாதார அமைச்சகம்.
*மகாராஷ்டிராவில் 9,318 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 1,388 பேர் குணமடைந்துள்ள நிலையில், 400 பேர் உயிரிழந்துள்ளனர்.
* தமிழகத்தில் இன்று கொரோனா உறுதியானவர்கள் - 104 மொத்த பாதிப்பு - 2,162 இன்று
குணமடைந்தவர்கள் - 1,210 மேலும் இரண்டு பேர் பலி உயிரிழந்தோர் எண்ணிக்கை - 27 உயர்வு
சிகிச்சை பெறுபவர்கள் - 922
மொத்த பரிசோதனைகள் - 1,09,961
இன்றைய பரிசோதனைகள் - 8,087
தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரில் ஆண்கள் - 1,455 பெண்கள் - 707
தமிழகத்தில் பரிசோதனை மையம் 41ல் இருந்து 44 ஆக உயர்ந்துள்ளது
*விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர், சத்தியமங்கலம், அப்பம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
வேலூர், ராணிப்பேட்டை, கோவை, ஈரோடு, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை.
*கொரானோ தடுப்பு காவல் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுடன் இணைந்து பணியாற்ற ஆட்கள் தேவை - தமிழக காவல்துறை.
மத்திய ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு அழைப்பு. மத்திய ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற 40 முதல் 50 வயதிற்குட்பட்டோருக்கு அழைப்பு.
விருப்பமுள்ளவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் - தமிழக காவல்துறை.
*10 நாட்களுக்கு பிறகு கடலூரில் ஒருவருக்கு கொரோனா உறுதி.
கடலூர்: மாவட்டம் முழுவதும் கடந்த 10 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லாத நிலையில் கடலூர் ரங்கநாதன் நகரில் 69 முதியவர் ஆந்திரா மாநிலம் புட்டபருத்தி சென்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
*இளநிலை, முதுநிலை மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வை நடத்தலாம் என யு.ஜி.சியால் அமைக்கப்பட்ட குழு பரிந்துரை.
*கோயம்பேடு சந்தையில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
நேற்று 3 பேர் பாதிப்பு - இன்று 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கோயம்பேடு சந்தைக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் காய்கறி சில்லரை வியாபாரம் செய்ய அனுமதி இல்லை. அதிகாலை முதல் காலை 7.30 மணி வரை மட்டுமே சில்லரை வியாபாரிகள் காய்கறி வாங்கி செல்ல அனுமதி.
காய்கறி வியாபாரிகளுடன் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து இன்றும் பேச்சுவார்த்தை.
*ஊரடங்கை மீறியதாக மாநிலம் முழுவதும் 3,36,426 வழக்குகள் பதிவு. 3,01,111 வாகனங்கள் பறிமுதல் - 3.47 கோடி ரூபாய் அபராதம் விதிப்பு.
3,55,603 பேர் கைதாகி விடுதலை.
*சென்னையில் உணவு டெலிவரி செய்யும் ஊழியருக்கு கொரோனோ பாதிப்பு. 26 வயது இளைஞர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி. உணவு டெலிவரி செய்த வீடுகளை கண்டறியும் பணியில் அதிகாரிகள் தீவிரம்.
*சேலம் மாநகராட்சியில் 4 நாட்கள் முழு ஊரடங்கு முடிவடைந்ததால், மாநகர பகுதிகளில் அமைந்துள்ள தற்காலிக காய்கறி சந்தைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் பழைய பேருந்து நிலைய காய்கறி சந்தையில் இரண்டே மணி நேரத்தில் அனைத்து காய்கறிகளும் விற்று தீர்ந்தது!.
*சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளில் நாளை மட்டும் காய்கறி மற்றும் மளிகை கடைகள் காலை 6 மணி முதல் முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்க தமிழக அரசு அனுமதி!
*பாலிவுட் நடிகர் இர்பான் கான் புற்றுநோயால் மும்பை மருத்துவமனையில் உயிரிழப்பு
1988ல் சலாம் பாம்பே என்ற இந்தி படத்தில் இர்பான் கான் அறிமுகம் ஆனார்.
*தமிழ்நாட்டில் உள்ள அம்மா உணவகம் தனித்துவத்துடன் செயல்படுகிறது அம்மா உணவகத்திற்கு - மத்திய அரசு பாராட்டு. ஊரடங்கு காலத்தில் 140.38 லட்சம் இட்லி, 53.24 லட்சம் கலவை சாதம், 37.85 லட்சம் சப்பாத்தி வழங்கப்பட்டுள்ளது.மொத்தமாக 85 லட்சம் மக்கள் அம்மா உணவகத்தின் மூலம் பயனடைகின்றனர்.
*அலுவலகங்களில் தினமும் 2 முறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும்- சென்னை மாநகராட்சி.
சென்னை மாநகராட்சிப் பகுதியில் அரசு, தனியார் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக இயங்கும் அலுவலகங்களில் தினமும் 2 முறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.
தவறும் நிறுவனங்கள் மீது தொற்றுநோய் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் - சென்னை மாநகராட்சி.
*பொதுமுடக்கம் முடிந்தபின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும்.
போதிய கால அவகாசம் இருப்பதால் தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்லை- சிபிஎஸ்இ.
*சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு ஒரு நாள் அல்லது 2 நாட்கள் விடுமுறை தேவை.
விடுமுறை அளித்து சந்தையில் கிருமி நாசினியை தெளிக்க வேண்டும்.
சந்தை இடமாற்றத்தால் காய்கறி வீணாகும் நிலை ஏற்படும்- வியாபாரிகள் சங்கம்.
*தமிழகம், புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்- வானிலை ஆய்வு மையம்.
*வளைகுடா நாடுகளில் இருந்து இந்திய தொழிலாளர்களை தாயகம் அழைத்து வர மறுப்பது ஏன்?
மத்திய அரசுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கேள்வி. சீனா, இத்தாலி நாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் அனுப்பியது போல் வளைகுடாவுக்கு ஏன் அனுப்பவில்லை?
*மத்திய அரசு அறிவித்த ஊரடங்கில் எந்தவித மாற்றமும் இல்லை: மே 3 வரை ஊரடங்கு தொடரும் - தமிழக அரசு. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமை செயலாளர் சுற்றறிக்கை.
ஊரடங்கு சரியாக கடைபிடிக்கப் படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய அறிவுறுத்தல்.
*மே 2 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது.
3 ஆம் தேதி ஊரடங்கு முடியவுள்ள நிலையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு.
*பஞ்சாப் மாநிலத்தில் லாக்டவுன் மேலும் 2 வாரம் நீட்டிப்பு- முதல்வர் அமரீந்தர்சிங்.
லாக்டவுனை நீட்டித்த 2-வது மாநிலம் பஞ்சாப்.
தெலுங்கானாவில் மே 7-ந் தேதி வரை ஏற்கனவே ஊரடங்கு நீட்டிப்பு.
*கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர், செவிலியருக்கு முழு உடல் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளதா?
பாதுகாப்பு உபகரணங்கள் தரப்பட்டுள்ளதா என அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு மே 13 வரை அவகாசம் - சென்னை உயர்நீதிமன்றம்.
*ஏ.சி., ஃபிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களின் சர்வீஸ் சென்டர்களை மட்டும் திறக்க முடியுமா?
வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு மே 25ஆம் தேதி பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
*சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை களைய நடவடிக்கை இல்லை.
ஊடகங்களில் விரிவாக செய்திகள் வந்த பிறகும் நடவடிக்கை எடுக்காதது பெரும் சிக்கலுக்கு வழிவகுக்கும் - கனிமொழி எம்.பி.
*ஊரடங்கால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிம்மதி.
தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப அனுமதி- மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.
வெளிமாநிலத் தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது - மத்திய உள்துறை அமைச்சகம்.
*எந்தெந்த தொழில்களை படிப்படியாக தொடங்கலாம் என அறிக்கை அனுப்புங்கள்-மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு.
அரசின் நிவாரண உதவிகள் கிடைக்காமல் விடுபட்டவர்களை கண்டறிந்து வழங்குங்கள்.
விளைபொருட்களை சந்தைக்கு கொண்டுசெல்லவிவசாயிகளுக்கு தடை இருக்கக் கூடாது.
100 நாள் வேலைத்திட்டம், சமூக விலகலுடன் முகக் கவசம் அணிந்து நடைபெறுவதை உறுதி செய்யுங்கள்.
மே மாதத்திற்கான ரேஷன் டோக்கன்களை நாள், நேரம் குறித்து வழங்க வேண்டும்.
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 6 மண்டலங்களில் களப்பணிக்குழு அமைப்பு.
இதேபோன்ற சிறப்புக்குழுக்கள் கோவை, மதுரை, திருப்பூர் மற்றும் சேலம் மாநகராட்சிகளிலும் அமைப்பு.
நோய்த்தடுப்பு பகுதிகளில் நகரும் கழிப்பறை வசதி. நடமாடும் சோதனை வாகனங்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு-சந்தேகப்படுபவர்களின் வீட்டிற்கே சென்று சோதனை.
*Containment Zone-ல் உள்ள வீடுகளில் மாஸ்க், சானிடைசர், 250 கிராம் கிருமி நாசினி பவுடர் வழங்கப்படும்- முதல்வர் பழனிசாமி.
*காவிரி மேலாண்மை ஆணையம் ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை.
காவிரி மேலாண்மை ஆணைய நிர்வாக செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிட முடியாது.
காவிரி நீர் ஆணையம்,முறைப்படுத்தும் குழுவின் நடவடிக்கை அதிகாரங்களில் எந்த மாற்றமும் இல்லை - பொதுப்பணித்துறை.
*நாடு முழுவதும் மே 3 க்குப் பிறகு, கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பல மாவட்டங்களுக்கு ஊரடங்கில் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்படும்.
இது தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.
*கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ஜூலையில் நடத்த யூஜிசி உத்தரவு.
கல்லூரி ஆண்டு இறுதி செமஸ்டர் தேர்வுகளை ஜூலை மாதத்தில் நடத்தலாம்- யூஜிசி. முதலாம், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வின்றி இன்டர்னல் மதிப்பெண்களை கொண்டு கிரேடு வழங்கலாம்.
*'குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு':
பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த நாகர்கோவிலை சேர்ந்த காசியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு. காவல்துறையினரின் பரிந்துரையை ஏற்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
*'சென்னையில் 3 தீயணைப்புப்படை வீரர்களுக்கு கொரோனா' ராயபுரம், வியாசர்பாடி, கொண்டித்தோப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 3 தீயணைப்புப்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று.
*காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பசியால் வாடும் வட மாநில தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த அத்தியாவசிய பொருட்கள் வழங்கக் கோரிய வழக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
*மருத்துவ முதுநிலை படிப்பிற்கான நீட் தேர்வில் கிராமப்பகுதியில் பணியாற்றியதற்கான ஊக்க மதிப்பெண் வழங்குவது குறித்த வழக்கு மருத்துவ கல்வி இயக்குநரக தேர்வுக் குழு செயலர் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
No comments:
Post a Comment