அக்னிப்புரட்சி (30.04.2020) இன்றைய முக்கிய செய்திகள்.
*உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து 10 லட்சம் பேர் குணம் அடைந்தனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 32,18,183 பேர் பாதிப்பு.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 228,026 பேர் இதுவரை பலி.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2390 பேர் உயிரிழப்பு.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,64,168 ஆக உயர்வு.
அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61,656 ஆக உயர்வு.
இங்கிலாந்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 765 பேர் கொரோனாவால் பலி.
ஸ்பெயின் 453 பேர் , இத்தாலி 323 பேர் , பிரான்ஸ் 427 பேர் , பிரேசிலில் 448 பேர் உயிரிழப்பு.
*இந்தியாவில் 33ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு..!:
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,787 லிருந்து 33,050 ஆக அதிகரிப்பு.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,008 லிருந்து 1,074 ஆக உயர்வு.
குணமடைந்தோர் எண்ணிக்கை 7,797 லிருந்து 8,325 ஆக அதிகரிப்பு. - மத்திய அரசு.
*தமிழகத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 138 பேர், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2323 ஆக உயர்வு
*கோயம்பேட்டில் கொரோனா பாதிப்பு 8ஆக உயர்வு..!:
சென்னை: கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு கொரோனா. கோயம்பேடு சந்தையில் ஏற்கனவே 7 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்வு.
*மருத்துவ கல்லூரி மாணவனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!
சென்னை மருத்துவக் கல்லூரி மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது.
அவரது தந்தை கோயம்பேடு வணிக வளாகத்தில் வியாபாரம் செய்பவர். மாணவருடன் தொடர்பில் இருந்த 35 பேரை சுகாதாரத்துறை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறது.
*சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் 1,500 சிறு மொத்த வியாபார கடைகள் திறக்கப்படவில்லை!
*கோயம்பேடு வியாபாரிகள் மாதவரம் சென்று வியாபாரம் செய்ய மறுப்பு தெரிவிப்பதால் மாதவரம் தற்காலிக சந்தை செயல்படவில்லை!
மாதவரம் சென்று வியாபாரம் ஈடுபட விருப்பமில்லை என பூ வியாபாரிகள் நேற்று முதல் கோயம்பேட்டில் உள்ள தங்கள் கடைகளை அடைத்துள்ளனர்.
இந்நிலையில் தங்களுக்கு மாதவரத்தில் வியாபாரம் செய்வதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கூறி நாளை முதல் பழ மார்க்கெட் வியாபாரிகளும் கோயம்பேட்டில் உள்ள தங்கள் அடைக்க முடிவு செய்துள்ளனர்.
*சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி மார்கெட்டில் செயல்பட்டு வந்த பூ, பழம் அங்காடிகள் இன்று மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இயங்காத காரணத்தால் சில்லரை வியாபாரிகள், பொது மக்கள் ஏமாற்றம்.
*பிரபல இந்தி நடிகர் ரிஷி கபூர் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு.
1973-ல் வெளியான ' பாபி' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் ரிஷிகபூர். மூச்சு திணறலால் மும்பையில் உள்ள மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
*ஊரடங்கை மீறியதாக மாநிலம் முழுவதும் 3,46,071 வழக்குகள் பதிவு.
3,75,747 பேர் கைதாகி விடுதலை- 3.54 கோடி ரூபாய் அபராதமாக விதிப்பு.
3,09,026 வாகனங்கள் பறிமுதல்.
*இது வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் இறுதிச்சடங்கு வீடியோவா? சமூக வலைதளங்களில் பரவி வருவது உண்மையா?
வீடியோ மற்றும் உண்மைத் தன்மை:
https://t.co/uDDHz1PqI5
*மு.க.ஸ்டாலின் அறிக்கை:
கொரோனா நோய்த் தொற்று பரவிடாமல் தடுத்து நிறுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட இரண்டாவது ஊரடங்கு காலம், மே 3-ம் தேதியோடு முடிவடைகிற நிலையில், மேலும் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, நீக்கப்படுமா (அ) படிப்படியாகத் தளர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பும் குழப்பமும் மக்கள் மனதில் நிலவுகிறது.
கொரோனா பரவலைத் தடுத்து மக்களைப் பாதுகாப்பதற்காக, மத்திய - மாநில அரசுகள் எடுக்கின்ற எந்த முடிவாக இருந்தாலும் அதற்குக் கட்டுப்பட்டு சமூக ஒழுங்கைத் தவறாமல் கடைப்பிடித்து ஒத்துழைக்க வேண்டியது பொதுமக்களின் தலையாய கடமையாகும்.
அதேநேரத்தில், ஊரடங்கை நீட்டிப்பது அல்லது தளர்த்துவது குறித்து கடைசி நேரத்தில் அறிவித்து பதற்றத்தை அதிகரித்திடாமல், தக்க முடிவெடுத்து முன்கூட்டியே அறிவித்தால், பொதுமக்களிடம் தேவையற்ற பரபரப்பையும், பதற்றத்தையும் பெருமளவுக்குத் தவிர்க்க முடியும்.
35 நாட்களுக்கும் மேலாக வீட்டிலேயே முடங்கி இருக்கும் மக்களின் மனநிலையையும், வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, மத்திய - மாநில அரசுகள் உரிய முடிவெடுத்து சிறிதும் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
*ரிஷி கபூர் மறைவு- ரஜினி இரங்கல்.
என்னுடைய மிக நெருங்கிய நண்பர் ரிஷி கபூரின் மறைவால் எனது இதயம் உடைந்து விட்டது; அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும்- நடிகர் ரஜினிகாந்த்.
*ஊரடங்கு நல்ல பலனை கொடுத்துள்ளது. நடுவண் அரசு!
ஊரடங்கின் காரணமாக இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமுள்ள சிகப்பு மண்டலங்கள் குறைந்து பச்சை மண்டலங்கள் அதிகரித்து வருகின்றன எனத் தகவல
*தமிழகம், புதுச்சேரியில் வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
அடுத்த 24 மணி நேரத்திற்கு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கையில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு நடுவம்
* வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் நாடு திரும்ப நடவடிக்கை.
பிரத்யேக இணையதள முகவரியை வெளியிட்டது தமிழக அரசு
nonresidenttamil.org என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்
தமிழகத்திற்கு திரும்புவோரின் விவரமறிய, அவர்களை தனிமைப் படுத்தி வசதிகள் ஏற்படுத்த இந்த இணையதளத்தில் பதியலாம்.- தமிழக அரசு.
*சென்னையில் எந்தவித அறிகுறியும் இல்லாமல் 98% பேருக்கு கொரோனா- மாநகராட்சி ஆணையர் பிரகாஷ். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 768 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
*சென்னையில் காணொலி காட்சி மூலம் 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை. மருத்துவக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு எனத் தகவல்.
*கொரோனா இல்லாத மாவட்டமான நீலகிரியில் மே 4 முதல் அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும் - மாவட்ட ஆட்சியர்.
*சென்னையில் இருந்து வெளியூர் செல்ல அவசர பாஸ் இன்று முதல் வழங்கப்படும்-சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு. கடந்த 4 நாட்களாக முழு ஊரடங்கால் அவசர பாஸ் வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டது.
*முழுவதுமாக ஊரடங்கை தளர்த்த முடியாது. முதலமைச்சருடனான ஆலோசனைக்கூட்டம் நிறைவு- ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் டாக்டர். பிரதீபாகவுர் செய்தியாளர் சந்திப்பு;
சில பகுதிகளில் ஊரடங்கை தளர்த்துவது பற்றி அரசு முடிவு செய்யும்.
ஆனாலும், முழுவதுமாக ஊரடங்கை தளர்த்த முடியாது.
தொடர்ந்து தீவிர கண்காணிப்புக்கு பிறகே அடுத்தகட்ட முடிவு.
*சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகள் நியமனம்.
ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்.
*அரசு மற்றும் தனியார் பள்ளிகளை அடிப்படை வசதிகளுடன் தயாராக வைத்திருங்கள் - கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து சென்னை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு.
பள்ளிகளில் முகாம் அமைப்பது தொடர்பாக உயர் அதிகாரிகள் பார்வையிட உத்தரவு.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை.
*ரஷ்ய பிரதமருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மிகாய்ல் மிஷுஸ்டின் கொரோனா காரணமாக பாதிப்பு.
No comments:
Post a Comment