நாடு முழுவதும் ஊரடங்கு மே 3 வரை நீட்டிப்பு - சிலருக்கு மனதளவில் கஷ்டமாக இருந்தாலும் கொரோனாவின் பிடியில் இருந்து ஒவ்வொருவரும், தன் குடும்பத்துடன் பாதுகாப்பை கடைபிடிக்க வேண்டும் - பாமக தலைவர் ஜி. கே. மணி - Agnipuratchi

நாடு முழுவதும் ஊரடங்கு மே 3 வரை நீட்டிப்பு - சிலருக்கு மனதளவில் கஷ்டமாக இருந்தாலும் கொரோனாவின் பிடியில் இருந்து ஒவ்வொருவரும், தன் குடும்பத்துடன் பாதுகாப்பை கடைபிடிக்க வேண்டும் - பாமக தலைவர் ஜி. கே. மணி

Share This

நாடு முழுவதும் ஊரடங்கு மே 3 வரை நீட்டிப்பு - சிலருக்கு மனதளவில் கஷ்டமாக இருந்தாலும் கொரோனாவின் பிடியில் இருந்து ஒவ்வொருவரும், தன் குடும்பத்துடன் பாதுகாப்பை கடைபிடிக்க வேண்டும் - பாமக தலைவர் ஜி. கே. மணி                  
—————— —————— -——————
         
உலகையே ஆட்டிப்படைத்து உயிரைப் பலிகொண்டு வரும் கொரோனாவின் கோரப்பிடியில் அகப்படாமலிருக்க இந்தியா முழுவதும் இன்று (ஏப்ரல் 14) வரைநடைமுறையிலிருந்த ஊரடங்கு ஒடிசா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கர்நாடகா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நீட்டிப்பக்கப்பட்டு தமிழ்நாட்டிலும் நேற்று நீட்டிப்பு அறிவிப்பு வந்த நிலையில் இன்று பிரதமர் மோடி அவர்கள் மே 3 வரை நீட்டிப்யை அறிவித்திருக்கிறார். இதனால் தனக்கு வேலை இல்லை. வருவாய் இல்லை, தொழில்கள் சிதைந்துவிட்டது,படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்பது போன்ற மனவேதனைகள் சிலருக்கு இருந்தாலும் கூட கொரோனா உயிர்க்கொல்லியின் பாதிப்பை உணர்ந்து, ஒவ்வொரு உயிரும் காக்கப்பட வேண்டும், ஒவ்வொரு குடும்பமும் பாதுகாக்கப்பட வேண்டும் என பாதுகாப்பு நடவடிக்கை கருதி பின்பற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.                        
         
உலக அளவில் நேற்று வரை கொரோனாவால் 20 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1, 17,654 பேர் உயிரிழந்துள்ளனர்.  உயர்நாடான அமெரிக்காவில் மட்டும் 5, 73, 138 பேர் பாதிக்கப்பட்டு, 22,931 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் ஒரு நகரில் மட்டும் 1,04,410 பேர் பாதிக்கப்பட்டு 6,898 பேர் உயிரிழந்துள்ளனர்.                        
       
இந்திய அளவில் நேற்றுவரை 9352 பேரும் தமிழ்நாட்டில் 1173 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவல் தொடரும் நிலையில் கிராமங்களுக்கு பரவத் தொடங்கினால் கொத்துக்கொத்தாக மக்கள் பாதிக்கப்படுவார்கள் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போது நலமாக இருந்தால் குடும்பம் பாதுகாப்பா இருந்தால் நாளை எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளலாம், சமாளித்துக்கொள்ளலாம் என்று மனதைத் தேற்றிக்கொண்டு அமைதியாக கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும்.                              

அத்யாவசிய உணவுப் பொருட்கள், குடிநீர், மருந்துகள் வாங்க வேண்டிய நிலையில் கட்டாயம் முகக்கவசம் (மாஸ்க்) அணிந்து கொண்டுதான் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். கடைகளில் மாஸ்க் கிடைக்கவில்லையான வீட்டில் உள்ள துணியை கிழித்து மூக்கை, வாயை மூடுமாறு முகத்தில் கட்டிக்கொள்ள வேண்டும். இது தான் நமக்கு முகக்கவசம் (மாஸ்க்). வெளியில் சென்று வீட்டுக்கு வந்தவுடன் சோப்பு போட்டு கை கழுவுவதோடு முகம், கைகால் முழுவதும் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். இது தெரியாதா? என்று நினைக்கக் கூடாது. தெரிந்ததையே, சொன்னதையே திரும்ப, திரும்பச் சொல்லும் போதுதான் மனதில் ஆழப்பதியும், பின் சிந்தனையை தூண்டும். அதன்பின்  செயலுக்கு வரும். அதனால் தான் உங்களுக்கு தெரிந்ததையே  மீண்டும் நினைவுப்படுத்த விரும்புகிறேன்.                      எனவே கொரோனா கோர வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, உயிரைக் காக்க, குடும்பம் பாதுகாக்க ஊடங்கை அவசியம் பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வீட்டிலிருக்கும் போது புத்தகம் படியுங்கள். பாடல், கவிதை, கட்டுரை எழுதுங்கள். மனதையும் உடலையும் வலிமைப்படுத்த சாதாரண மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி செய்யுங்கள். யோகா செய்யுங்கள். மன அமைதி மாபெரும் சக்தி. பொறுமை காத்திடுங்கள். குடும்பத்தில் குழந்தைகள் உள்ளிட்ட அனைவரிடத்தும் அன்பையும் பாசத்தையும் பெருக்குங்கள். மனதை தேற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடும்பமும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எச்சரிக்கை, பாதுகாப்பை அனைவருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages