வந்த நாள் முதல் இந்த நாள் வரை.... எதுவும் மாறவில்லை, மனிதன் மாறிவிட்டான்!- மருத்துவர் இராமதாசு அய்யா நினைவுகள். - Agnipuratchi

வந்த நாள் முதல் இந்த நாள் வரை.... எதுவும் மாறவில்லை, மனிதன் மாறிவிட்டான்!- மருத்துவர் இராமதாசு அய்யா நினைவுகள்.

Share This

வந்த நாள் முதல் இந்த நாள் வரை....
எதுவும் மாறவில்லை, மனிதன் மாறிவிட்டான்!- மருத்துவர் இராமதாசு அய்யா நினைவுகள்.

இயக்குனர் தங்கர்பச்சான் சில மாதங்களுக்கு முன் என்னை சந்தித்த போது, 5000 பாடல்கள் கேட்கக்கூடிய கார்வான் கையடக்க ஆடியோ பிளேயர் கருவியை எனக்கு வழங்கினார். அதில் இன்று காலை, பாவமன்னிப்பு படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய, ‘‘ வந்த நாள் முதல் இந்த நாள் வரை,  வானம் மாறவில்லை வான் மதியும் மீனும் கடல் காற்றும், மலரும் மண்ணும் கொடியும் சோலையும், நதியும் மாறவில்லை, மனிதன் மாறிவிட்டான்’’ என்ற பாடல் வரிகளைக் கேட்டேன். எழுதப்பட்ட காலத்திற்கு மட்டுமின்றி  எல்லா காலத்திற்கும் பொருந்தக் கூடிய மிகவும் அர்த்தமுள்ள பாடல் வரிகள் இவை!
இதோ அந்த பாடலின் முழுமையான வரிகள்:

வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் நீரும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்

நிலை மாறினால் குணம் மாறுவார் - பொய்
நீதியும் நேர்மையும் தேடுவார் - தினம்
ஜாதியும் பேதமும் கூறுவார் - அது
வேதன் விதியென்றோதுவார்
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்

பறவையைக்கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினைக்கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக்கண்டான் பணம்தனைப் படைத்தான்
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்

இன்பமும் காதலும் இயற்கையின் நீதி
ஏற்றதாழ்வுகள் மனிதனின் ஜாதி
பாரில் இயற்கை படைத்ததையெல்லாம்
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்
******************

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages