அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.
*உலகம் முழுக்க 12,72,737 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
*உலகம் முழுக்க 69,418 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.
*நேற்று ஒரே நாளில் 5400 பேர் உலகம் முழுக்க கொரோனாவால் பலியாகி உள்ளனர்.
*அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா காரணமாக 1480 பேர் பலி.
*உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிக நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
*ஸ்பெயின்: 131,646 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஸ்பெயினில் 12641 பேர் பலியாகி உள்ளனர்.
*இத்தாலி: 128,948 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 15887 பேர் பலியாகி உள்ளனர்.
*ஜெர்மனி: 100,123 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1584 பேர் பலியாகி உள்ளனர்.
*பிரான்ஸ்: 92,839 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 8078 பேர் பலியாகி உள்ளனர்.
*ஈரான்: 58,226 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3603 பேர் பலியாகி உள்ளனர்.
*யுனைட்டட் கிங்டம்: 47,806 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 4934 பேர் பலியாகி உள்ளனர்.
*துருக்கி: 27,069 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 574பேர் பலியாகி உள்ளனர்.
*சுவிஸ்: 21,100 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 715 பேர் பலியாகி உள்ளனர்.
*அந்த 9 நிமிடங்கள்! சென்னையை 'பறந்து' பார்க்கலாம்!
வீடியோ:-https://youtu.be/qGvCrnZ0NBA
ட்ரோன் கேமரா மூலம் எடுக்கப்பட்ட பிரத்யேக காட்சிகள்!!!
*சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.72.28 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.65.71ஆகவும் உள்ளது.
தொடர்ந்து 22 வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி தொடர்வது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா : நியூயார்க் பிராங்க்ஸ் உயிரியல் பூங்காவில் உள்ள ஒரு புலிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
*இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது.
நாடு முழுவதும் 4,281 பேர் கொரோனாவால் பாதிப்பு.
உயிரிழப்பு எண்ணிக்கை 111 ஆக அதிகரிப்பு. 291 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
* இன்று 50 பேர் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானர்கள் - தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்!
தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளனவர்களின் எண்ணிக்கை 621ஆக உயர்ந்தது. உயிரிழப்பு எண்ணிக்கை 6 உயர்வு
சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 57 வயது பெண்மணி கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தார். இன்று பாதிப்புக்கு உள்ளான 50 பேரில் 48 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் - தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்!
*இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் முக்கியமான 2 வார காலக்கட்டத்திற்குள் நுழைகிறது:
எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசியது வரவேற்கத்தக்கது.
கொரோனாவை கட்டுப்படுத்த எதிர்க்கட்சி தலைவர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள். - ப.சிதம்பரம் ட்வீட்.
*மலேசியா செல்ல முயன்ற 10 பேர் மீது 8 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு:
சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் மலேசியா செல்ல முயன்ற 10 பேர் மீது 8 பிரிவின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு. டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற 10 பேரும் மலேசியா செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர் .
*குஜராத்தில் அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது (STATUE OF UNITY) ’ஒற்றுமையின் சிலை’யை ரூ .30,000 கோடிக்கு "விற்க" ஆன்லைனில் விளம்பரம் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
*ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை:
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன்.
தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலம் ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை.
*மதுரை: கருப்பாயூரணியில் போலீஸ் தாக்கியதில் ராவுத்தர் என்பவர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு:
போலீசாரை கண்டித்து 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்.
*சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக அணு உலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் மீது கோட்டார் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு.
*மதுரை: மாட்டுத்தாவணி மொத்த காய்கறி சந்தையில் சமூக விலகலை கடைப்பிடிக்காத 5 கடைகளுக்கு சீல்:
எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் வழங்கியும் சமூக விலகலை கடைப்பிடிக்காததால் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை.
*தமிழகத்தில் 144 தடை உத்தரவு காலத்தில் விதி மீறியதாக இதுவரை 82,752 வழக்குகள் பதிவு - தமிழக காவல்துறை.
*விதிமுறைகளை மீறியதாக 90, 918 பேர் கைது.
*24.5 லட்சம் அபராதமாக வசூல்.
*69,589 வாகனங்கள் பறிமுதல் - தமிழக காவல்துறை.
*கொரோனா மருத்துவ உபகரணங்களுக்காக, எம்.பி கவுதம் காம்பீர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு:
கொரோனா தடுப்பு பணிக்காக ஏற்கனவே அவர் ரூ.50 லட்சத்தை டெல்லி அரசுக்கு வழங்கியுள்ளார்.
*கொரோனா நோய் தடுப்பு பணிக்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.70 கோடி வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் 1 நாள் சம்பளம் கொரானோ தடுப்பு பணிக்கு வழங்கப்படும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.
*நிலவேம்பு குடிநீர் போல் கபசுர குடிநீர் குடிப்பதும் பயனுள்ளதாக இருக்கும்; நன்மைதரும்.Bஅரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு அவசியம்; சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
- அமைச்சர் ஜெயக்குமார்.
*கொரோனா பரவலை தடுப்பதில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக திகழ்கிறது:
கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்துள்ள இந்தியா அதனை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
- பிரதமர் மோடி.
*செங்கல்பட்டு: டெல்லி மாநாட்டில் பங்கேற்று மதுராந்தகத்தில் தங்கியிருந்த 8 இந்தோனேசியர்கள் மீது வழக்கு. விசா விதிமீறல், பேரிடர் சட்ட விதிமீறல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிந்து நடவடிக்கை.
*தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆலோசனை:
வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை.
*ஈரோடு: கோபிசெட்டிபாளையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வெளியேறியவர் கைது:
தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தடையை மீறி உள்ளே நுழைந்த மற்றொருவரையும் போலீசார் கைது செய்தனர்.
*“நாம் அனைவரும் ஒன்றுதான் என்பதை காட்டும் விதமாகவே நாடு ஒளியேற்றியது; ரஜினி, நாராயணசாமி மட்டுமல்லாமல் சார்க் நாடுகளை சேர்ந்தவர்களும் ஒளியேற்றினர்” - ஹெச். ராஜா.
*பாஜகவின் 40வது தொடக்க தினவிழாவை முன்னிட்டு கட்சி தொண்டர்களுக்கு பிரதமர் மோடி உரை.
கொரோனாவுக்கு எதிராக இந்தியா, சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக திகழ்கிறது. கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்துள்ள இந்தியா அதனை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது-பிரதமர் மோடி.
*நாடு முழுவதும் உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளை கண்காணிக்க உயிரியல் பூங்கா ஆணையம் உத்தரவு.
அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் புலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து நடவடிக்கை.
*மாற்றுத்திறனாளிகளுக்கு 24 மணி நேரமும் உதவ அரசு தயாராக உள்ளது:
- ஜானி டாம் வர்க்கீஸ், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர். உதவி தேவைப்பட்டால் 1800-425-0111 என்ற எண்ணில் அழைக்கலாம்.
*பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் கடிதம்:
முறையான திட்டமிடல் இல்லாமல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது - பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் கடிதம்.
அடுத்த வேளை சமைப்பதற்கு எண்ணெய் இல்லாத மக்கள் எப்படி விளக்கு ஏற்றுவார்கள்? - கமல்ஹாசன்.
*குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், ஆளுநர்கள், பிரதமர், அமைச்சர்கள், எம்பிக்களின் ஊதியம் ஓராண்டுக்கு 30 சதவீதம் குறைக்கப்படும்,தொகுதி மேம்பாட்டு நிதியும் 2 ஆண்டுக்களுக்கு நிறுத்தப்படும்.அனைத்தும் கொரோனா நிதியில் சேர்க்கப்படும்- மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!
*குஜராத் மாநிலம் ஜாம் நகரில் கூலித் தொழிலாளியின் 14 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!
வெளிநாட்டு தொடர்பு எதுவும் நிலையில் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குஜராத் மாநில மக்களிடையே அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.
*தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தை கொரோனா சிகிச்சை மையமாக பயன்படுத்த அனுமதி.
கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க கல்லூரி மற்றும் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்- தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சமூக வலை தளத்தில் அறிவிப்பு.
*கொரோனாவுக்கு எதிராக ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து பயனளிப்பதாக போதிய சான்று இல்லை. ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை பரிந்துரைப்பது பற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தல்.
*இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 693 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: கொரோனா பாதிப்பு உள்ளவர்களில் 76% பேர் ஆண்கள், 24% பெண்கள். - மத்திய சுகாதாரத்துறை.
*கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மாநிலங்களுக்கு மேலும் ரூ.3,000 கோடி நிதி:
தேசிய சுகாதார நடவடிக்கை நிதியிலிருந்து ஏற்கெனவே ரூ.1,100 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
- சுகாதாரத்துறை இணைச் செயலாளர்.
*கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு அரசாங்கம் நிதிகளைப் பெற விரும்பினால் அதற்கு பல வழிகள் உள்ளன. எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தி வைப்பது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. - கார்த்தி சிதம்பரம்.
*சென்னையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 500 மெகாவாட் அளவிற்கு மின்தேவை குறைந்து வருகிறது.
மாநிலத்தின் இதர பகுதிகளில் 400 மெகாவாட் அளவு மின்தேவை அதிகரித்துள்ளது. - மின்வாரியம்.
*கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 10 மாத குழந்தை உட்பட 5 பேர் குணமடைந்தனர். கொரோனா சிகிச்சைக்கு முதலாவதாக அனுமதிக்கப்பட்ட 25 வயது மாணவியும், குணமடைந்து வீடு திரும்பினார் - மாவட்ட ஆட்சியர்.
No comments:
Post a Comment