அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

*பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறையை மே மாதம் 15ம் தேதி வரை நீட்டிக்குமாறும், மத நிகழ்ச்சிகளுக்கான கட்டுப்பாடுகளை ஒரு மாதம் தொடரவும் மத்திய அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

*‘உலகளவில் கொரோனாவால் உயிரிழப்பு 82 ஆயிரத்தை தாண்டியது’:

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82,005 ஆக அதிகரிப்பு.

209 நாடுகளில் பரவியுள்ள கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,30,516 ஆக உயர்வு.

‘உலகளவில் கொரோனாவிலிருந்து 3,01,828 பேர் குணமடைந்தனர்’

உலகளவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,01,828 ஆக அதிகரிப்பு.

அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு 12ஆயிரத்தை தாண்டியது’.

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,813 ஆக அதிகரிப்பு.

நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா பாதிப்பால் 1,942 பேர் உயிரிழப்பு.

*‘அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியது’:
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,00,323 ஆக அதிகரிப்பு.

*76 நாட்களுக்கு பின் சீனாவின் வுகானில் ஊரடங்கு தளர்வு.
உலகளவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய சீனாவின் வுகானில் 76 நாட்களுக்கு பின் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததால் ஊரடங்கை தளர்த்திக் கொண்டது சீன அரசு.

*'சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கூட்ட நெரிசல்':
ஊரடங்கு உத்தரவை பின்பற்றாமல், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகரித்த கூட்ட நெரிசல்.
தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் பொருட்களை மக்கள் வாங்கிச் செல்வதாக புகார்.

*‘உலக சுகாதார நிறுவனத்துக்கு நிதி கிடையாது - ட்ரம்ப் அறிவிப்பு’:
உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கப்படும் நிதியை நிறுத்தி வைக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.

* வீடு, கட்டடங்களை கட்ட ஜூன் வரை அவகாசம் தமிழகத்தில் பிப்ரவரிக்குள் கட்டி முடிக்க வேண்டிய வீடு, கட்டடங்களை ஜூன் வரை கட்டிக்கொள்ள அவகாசம்.
ஊரடங்கால் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், தமிழக அரசு தாமாக முன்வந்து அவகாசம் தந்துள்ளது.

*மனைவி நாடகம் - கணவன் தற்கொலை: தூத்துக்குடி: வீட்டில் இருந்த நகையை தானே எடுத்து வைத்துக்கொண்டு கொள்ளை போனதாக நாடகம்.
தூத்துக்குடியில் தன் வீட்டில் தானே நகையை திருடிய பெண் கைதான சம்பவம். மனமுடைந்த கணவன் தூக்குப்போட்டு தற்கொலை.

*கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்கள் போன்று;  108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் ஒரு மாத சிறப்பு ஊதியம் தமிழக அரசு வழங்க  வேண்டும். அவசர ஊர்தி பணியாளர்களும் மக்களின் உயிரைக் காப்பாற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களுதான் என்பதை அரசு மறந்துவிடக்கூடாது - டிடிவி தினகரன்.

*பழம்பெரும் நடிகையான மனோரமாவின் மகன் பூபதி உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

*குஜராத், சூரத்தில் கொரோனா குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தினர்..

*அனுமன் சஞ்சீவி மூலிகையை கொண்டுவந்து லக்ஷ்மன் உயிரை காப்பாற்றியது போல இந்தியா ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்கி பிரேசில் மக்களை காக்க வேண்டும்.

*ராமாயணத்தை மேற்கோள்காட்டி பிரேசில் அதிபர் ஜேர் போல்செனாரோ பிரதமர் மோடிக்கு கடிதம்.

*கொரோனா - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு:

கொரோனா பரிசோதனைக்கு அதிக  கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்: தனிநபர்களின் சோதனைக்கான கட்டணத்தை  அரசே ஏற்கலாமே?- உச்சநீதிமன்றம் கேள்வி
ஊரடங்கு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும். மருத்துவமனை ஊழியர்கள் தான் போராளிகள்- அவர்களை பாதுகாக்க வேண்டும்- உச்சநீதிமன்றம்.

*கர்நாடகாவில் கொரோனா பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு:
கல்பர்கி பகுதியைச் சேர்ந்த 65 வயது முதியவர் கொரோனாவினால் இன்று உயிரிழப்பு..கர்நாடகாவில் இதுவரை 181 பேருக்கு கொரோனா பாதிப்பு; குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 28ஆக உயர்வு!

*கொரோனா தடுப்பு நடவடிக்கையில் கருத்து வேறுபாடுகளை மறந்து மத்திய, மாநில அரசுகள் பணியாற்ற வேண்டும். ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க பிரதமரிடம் வலியுறுத்தினேன். - டி.ஆர்.பாலு.

*15 நலவாரிய தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை அறிவிப்பு.
14.7 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 வழங்க தமிழக அரசு ஆணை.
முடிதிருத்துவோர், சலவை தொழிலாளர்கள் உள்ளிட்ட 15 நல வாரிய உறுப்பினர்கள் பயன்பெறுவர்.

*விமர்சனம் செய்யும் நேரம் இது கிடையாது, நல்ல ஆலோசனைகளை வழங்கலாம் - கமல்ஹாசனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்:
கொரோனா நிவாரணம் வழங்கிய நடிகர் அஜித் குமாருக்கு நன்றி, அவரை போல அனைத்து நடிகர்களும் உதவி செய்ய வேண்டும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ.

*விலையேற்றத்தைத்  தடுத்து, உரிய நிவாரணம் வழங்கி மக்கள் உயிரைக் காத்திடுக - திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை:

அத்தியாவசியப் பொருள்களின் தடையில்லாத போக்குவரத்தை உறுதி செய்து, விலையேற்றத்தையும் பதுக்கலையும் கட்டுப்படுத்த வேண்டும்.
கொரோனாவைத் தடுப்பதில் மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். பட்டினிச் சாவைத் தடுப்பதில் அரசுகளின் பணி அதிமுக்கியம் - ஸ்டாலின்.

*பிரதமர் மோடி அனுமன் ஜெயந்தி வாழ்த்து:

பக்தி, வலிமை, அர்ப்பணிப்பு ஒழுக்கத்தின் அடையாளமாக அனுமன் விளங்குகிறார். அவரது வாழ்க்கை ஒவ்வொரு நெருக்கடியையும் எதிர்கொள்ள நமக்கு ஊக்கம் அளிக்கிறது - பிரதமர் மோடி அனுமன் ஜெயந்தி வாழ்த்து.

*"கொரோனா  நிவாரணம் - தமிழகத்திற்கு ரூ.510 கோடியை மட்டும் ஒதுக்கியது ஏன்?":

கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பிற மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியது ஏன்?. மத்திய அரசு விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

*ஊரடங்கு நீட்டிப்பு? - 11ம் தேதி முடிவு?
நாடு தழுவிய ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு வரும் 11ம் தேதி முடிவு எடுக்க உள்ளதாக தகவல்
வரும் 11ம் தேதி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்

*தமிழகத்தில் 14 டி.எஸ்.பி க்கள் இடமாற்றம்.

*நாட்டில் ஊரடங்கை உடனடியாக திரும்பப்பெறும் முடிவு இப்போது இல்லை: - எதிர்கட்சிகளுடனான ஆலோசனையில், பிரதமர் மோடி திட்டவட்டம் என தகவல்.

*தருமபுரியில் இருசக்கர வாகனங்களை போலீசார் தாக்கியது பற்றி மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு ஊரடங்கை மீறியதற்காக போலீசார் தாக்கியது பற்றி மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு.

*தருமபுரியில் இருசக்கர வாகனங்களை போலீசார் தாக்கியது பற்றி மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு ஊரடங்கை மீறியதற்காக போலீசார் தாக்கியது பற்றி மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு.

*இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரானோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 773 - மத்திய சுகாதாரத்துறை. இந்தியாவில் கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 5194 பேர்.
கொரானோ தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149.
கொரானோ தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் 402 பேர்.

*தினக்கூலி தொழிலாளர் உள்பட பல்வேறு தரப்பினர் நலனை கருத்தில் கொண்டே அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது: சமூக விலகலை கடைப்பிடிப்பதன் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.- அமைச்சர் ஜெயக்குமார்.

*தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால்  பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 690 லிருந்து 738 ஆக அதிகரிப்பு பாதிப்படைந்த 48 பேரில் 42 பேர் டெல்லி மாநாட்டுக்கு சென்றவர்கள்- சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்.

*சென்னை: பெரியமேட்டில் கொரோனாவை பரப்பியதாக வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். பெரியமேட்டில் ரகசியமாக தங்கியிருந்த 3 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி.

*சென்னை சைதாப்பேட்டையில் மக்களுக்கு அத்தியாவசியப்பொருட்கள் கிடைக்கிறதா என ஸ்டாலின் நேரில் ஆய்வு.வெளியே வந்தால் சமூகவிலகலை கட்டாயம் கடைபிடிக்கும்படி மக்களை அறிவுறுத்தினார் மு.க.ஸ்டாலின்.

*கொரோனா ஒழிப்பில் சாதி, மதம் என்ற பாகுபாடு எதுவும் இல்லை; அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். - தமிழக பாஜக தலைவர் முருகன்.

*'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாகுமா? - அமைச்சர் பதில்' 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை வைகோ ரத்துசெய்யக் கோரியது தொடர்பாக முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும்ஸ- அமைச்சர் செங்கோட்டையன்.

*ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள், பழங்கள் அடங்கிய தொகுப்பு: உணவு டெலிவரி நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு விநியோகிக்க திட்டம். காய்கறி தொகுப்பை 90256 53376, 044 2479113 என்ற எண்களில் சென்னை மக்கள் ஆர்டர் செய்யலாம் - சென்னை வளர்ச்சி குழும செயலாளர் கார்த்திகேயன்.

*’19 சிறப்பு நிபுணர்கள் குழு அமைக்க அரசாணை வெளியீடு':

கொரோனா பரவாமல் தடுப்பதற்காக 19 சிறப்பு நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு. சென்னை மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ரகுநந்தன் உள்பட 19 பேர் தமிழக அரசின் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

*உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை:

உணவுப் பொருட்களை பதுக்கினால் 7 ஆண்டு சிறைத் தண்டனை - உள்துறை செயலாளர் எச்சரிக்கை அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை மாநில  அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.மாநில தலைமை செயலாளர்களுக்கு உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம்.

உணவு பொருட்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி, போக்குவரத்துக்கு தடையில்லை.
அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை பயன்படுத்த மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்.144 தடை உத்தரவை பயன்படுத்தி சிலர் பொருட்களை பதுக்குவதாக வந்த தகவலை அடுத்து எச்சரிக்கை.

*முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு உகந்த நேரத்தில் தேர்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தல்:
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்களின் தேவை அதிகரித்த நிலையில் நடவடிக்கை.

*விழுப்புரத்தில் கொரோனா இல்லை என ஒருவர் நேற்று இரவு விடுவிப்பு: பரிசோதனை முடிவில் கொரோனாஇருப்பது உறுதி - பரபரப்பு.

விழுப்புரம் மாவட்ட போலீசார், 3 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். அதிகாரிகள் கவனக்குறைவால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் விடுவிப்பு என தகவல்.

*வருமான வரியில் திருப்பி அளிக்க வேண்டிய தொகை ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், அதை உடனடியாக அளிக்க உத்தரவு. பிடித்தம் செய்யப்பட்ட சுமார் ரூ.18 ஆயிரம் கோடியை விடுவிக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு.

*கேரளாவில் உள்ள காசர்கோடு மாவட்டத்தில் கொரோனா வெருவி தொற்றுக்காக ஏற்படுத்தப்பட்ட சிறப்பு மருத்துவ பகுதியில் 5 பூனைகள் இறந்துள்ளன தொற்று காரணமாக இறந்து இருக்கலாம் என்ற ஐயத்தால் இறந்த பூனைகளில் சோதனை மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

*கொரோனா வெருவி பாதிப்பு - 08.04.2020: தென்னக மாநிலங்கள்

*தமிழகம்

தொற்று நோயாளிகள் எண்ணிக்கை - 738
நலம் பெற்றோர்- 21
உயிரிழப்பு - 8

*கேரளம்

தொற்று நோயாளிகள் எண்ணிக்கை - 345
நலம் பெற்றோர்- 84
உயிரிழப்பு - 2

*ஆந்திரம்

தொற்று நோயாளிகள் எண்ணிக்கை - 348
நலம் பெற்றோர்- 9
உயிரிழப்பு - 4

*கர்நாடகம்

தொற்று நோயாளிகள் எண்ணிக்கை - 181
நலம் பெற்றோர்- 28
உயிரிழப்பு - 5

*தெலங்கானா

தொற்று நோயாளிகள் எண்ணிக்கை - 453
நலம் பெற்றோர்- 45
உயிரிழப்பு - 11

*பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து!

'ஊரடங்கால் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பது உண்மை தான். எங்கள் மாநிலத்திற்கு ரூ.2400 கோடி வருமானம் கிடைக்க வேண்டிய நிலையில், ரூ. 6 கோடி மட்டும் தான் கிடைத்துள்ளது. பணம் போனால் அதை சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால், உயிர் போனால் மீண்டும் வராது.'

ஊரடங்கு நீடிக்க வேண்டும் என்ற தெலுங்கானா முதல்வர் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து மேற்கண்டவாறு தனது டிவீட்டரில் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

*உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 85,362 ஆக அதிகரிப்பு.

*மயிலாப்பூர் போக்குவரத்து பிரிவில் காவலராக பணிபுரிந்த அருண்காந்தி இன்று ஊரடங்கு பாதுகாப்புப் பணியில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

*சேலத்தில் நாளை முதல், 5 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே காய்கறிகள், மளிகை பொருள்கள் வாங்க முடியும் 144 தடை ஆணையை நாளை முதல் கடுமையாக செயல்படுத்த முடிவு
- சேலம் மாவட்ட நிர்வாகம்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages