உத்தரவை மதிக்காததே காரணம் ... என்ன நடந்தது தப்லீக் மர்கசில்?
கொரோனா பாதிப்பு அதிகரிக்க காரணமானதாக கூறப்படும், தப்லீக் ஜமாத்தினர் டெல்லி அரசின் கட்டுப்பாட்டையும் உத்தரவையும் மதிக்காமல் செயல்பட்டது உறுதியாகி உள்ளது.
அதே சமயம் ஊரடங்கால் சொந்த ஊர்களுக்கு திரும்ப இயலாமல் தவித்ததே பலர் டெல்லியில் தங்கியிருக்க காரணம் என தப்லீக் ஜமாத் நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
கொரோனா முன்னெச்சரிக்கையாக, 200 பேருக்கு அதிகமானோர் ஒரே இடத்தில் கூடக்கூடாது என கடந்த 13 ஆம் தேதி டெல்லி அரசு ஆணை பிறப்பித்தது.
ஆனால் அதே நாள் தப்லீக் ஜமாத்தை சேர்ந்த 3400 பேர் டெல்லி நிசாமுத்தீன் மர்கசில் கூடினர்.
இந்த மர்கசில் பங்கேற்று தெலங்கானா சென்ற இந்தோனேசியர்கள் 10 பேருக்கு கடந்த 20 ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி மக்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்து 1500 பேர் புறப்பட்டுச் சென்றனர்.
24 ஆம் தேதி நாடு தழுவிய ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்த நிலையில், மர்கசில் இருந்து 1000 பேரை வெளியேற்ற அனுமதி கோரி தப்லீக் நிர்வாகம் சார்பில் கடிதம் அளிக்கப்பட்டது.
அதற்கு டெல்லி அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனிடையே அங்கு தங்கியிருந்து ஸ்ரீநகர் திரும்பிய ஒருவர் 26 ஆம் தேதி கொரோனாவுக்கு உயிரிழந்தார்.
இதை அடுத்து 27 ஆம் தேதி மர்கசுக்கு விரைந்த அதிகாரிகள் கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட 39 பேரை இரண்டு நாட்களாக அகற்றி தனிமை வார்டுகளில் சேர்த்தனர்.
No comments:
Post a Comment