கொரோனா அமெரிக்காவில் ருத்ரதாண்டவம் ஆடுவது ஏன்?
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுத்தியதற்கான புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவில் இதுவரை கொரோனாவுக்கு 3.37 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
9,610 பேர் பலியாகி உள்ளனர். ஐரோப்பிய நாடுகளை காட்டிலும் அமெரிக்காவில் அதிவேகமாக பரவி உயிர்பலி வாங்கி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வேகமாக பரவுவது ஏன் என 'நியூயார்க் டைம்ஸ்' கட்டுரை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட பின், சீனாவிலிருந்து 4.3 லட்சம் மக்கள், நேரடி விமானம் மூலம் அமெரிக்கா வந்தது தான், அமெரிக்காகவுக்கு அதிக பாதிப்பு ஏற்பட காரணம்.
வூஹானிலிருந்து மட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் நேரடி விமானம் மூலம் அமெரிக்கா வந்தனர்.
சீனாவிலிருந்து 1,300 விமானங்கள் அமெரிக்காவின் 17 முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்டுள்ளன, அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்கத்துவங்கும் முன்பே, சுமார் 4 லட்சம் பேர் சீனாவிலிருந்து அமெரிக்கா வந்துவிட்டார்கள்.
அப்போது விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை தீவிரமாக இல்லாததால் அவர்கள் எளிதில் அமெரிக்காவிற்குள் வந்துவிட்டார்கள்.
ஜன., பிற்பகுதியில் தான் அமெரிக்கா விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தியது.
அதற்கு முன் சீனாவிலிருந்து அமெரிக்கா வந்த, சுமார் 3.81 லட்சம் பயணிகளில் எத்தனை பேருக்கு கொரோனா இருந்தது என தெரியவில்லை. இதுதான் அங்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்த காரணம். இவ்வாறு அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment