தமிழ்நாட்டு மக்களை நான் தலைவணங்கி கேட்டுக்கொள்
வதெல்லாம் ஒன்று தான்.... மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல்.
போர்க்காலங்களில் நாட்டைக் காக்க தங்களின் உயிரை பணயம் வைத்து போர் புரிபவர்கள் நமது இராணுவ வீரர்கள் தான். அதேபோல், கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனா வைரஸ் கிருமியை எதிர்த்து களத்தில் நின்று போராடுபவர்கள் மருத்துவர்கள் தான்.
அவர்களை நாம் கடவுளாக பார்க்க வேண்டும். அவர்களை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது.
நாட்டைக் காக்கும் போரில் உயிரிழந்த இராணுவ வீரர்களை 21 குண்டுகள் முழங்க இராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்கிறோம். அதேபோல், மக்களைக் காக்க கொரோனாவுடன் போரிட்டு உயிரிழக்கும் மருத்துவர்களுக்கும், இராணுவ வீரர்களுக்கு எப்படி மரியாதை செய்கிறோமோ, அதேபோல் இறுதி மரியாதை செய்ய வேண்டும்.
ஒருவேளை அந்த அளவுக்கு பெரிய மனசு இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் மனிதர்களாகவாவது கருதி மருத்துவர்களின் உடல்களுக்கு இறுதிச் சடங்கு செய்ய பொது மக்கள் அனுமதிக்க வேண்டும்’’
- சென்னையில் கொரோனா வைரஸ் தாக்குதலில் உயிரிழந்த மருத்துவர் சைமன் ஹெர்க்குலஸ் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்ட அறிக்கையின் ஒரு பகுதி...
https://bit.ly/2VBlEgI
#DrSimon #COVID19 #CoronaWarriors
No comments:
Post a Comment