அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

*சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.72.28 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.65.71ஆகவும் உள்ளது.
தொடர்ந்து 21 வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி தொடர்வது குறிப்பிடத்தக்கது.

*காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் 24 மணி நேரத்தில் 9 பயங்கரவாதிகள்  சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தெற்கு காஷ்மீரின் பத்பூராவில் பயங்கரவாதிகள் 4 பேரை நேற்று இந்திய ராணுவம் சுட்டுக்கொன்ற நிலையில், கெரான் செக்டார் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற மேலும் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

*பிரதமரின் அறிவிப்பில் எந்தவித அரசியலும் கிடையாது. பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க இரவு 9 மணிக்கு விளக்கு ஏற்றுவோம் - அமைச்சர் செல்லூர் ராஜூ.

*சமண சமய மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி மகாவீர் ஜெயந்தி வாழ்த்து:

உலகில் அன்பும், அறநெறியும் தழைத்திட மக்கள் அனைவரும் மகாவீரரின் போதனைகளை பின்பற்ற வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி.

*குஜராத் : சூரத்தில் கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு:
புதிதாக 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி - வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 122ஆக உயர்வு.

*தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 71,204 வழக்குகள் பதிவு. இதுவரை 78,837 வாகனங்கள் பறிமுதல் - ரூ.21.26 லட்சம் அபராதம் வசூல் - தமிழக காவல்துறை.

*21 காவலர்களை தனிமையில் இருக்க உத்தரவு:

புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் உள்ள பகுதியில் வசிக்கும் 21 காவலர்களை தனிமையில் இருக்க உத்தரவு. - காவல்துறை.

புதுச்சேரியில் அரியங்குப்பம் பகுதியில் 3 பேருக்கு கொரோனா உறுதியானதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் வசிக்கும் 21 காவலர்களுக்கும் கட்டுப்பாடு. - காவல்துறை.

*சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் அமைச்சுப் பணியாளர்கள் 53 பேருக்கு நோட்டீஸ் கடந்த 23ம் தேதி முதல் பணிக்கு வராததால், விளக்கம் கேட்டு சென்னை காவல் ஆணையர் நோட்டீஸ்

*கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மத்திய அரசுடன் தமிழக அரசு காணொலியில் ஆலோசனை.

மத்திய உள்துறை, சுகாதாரத்துறை செயலாளர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் ஆலோசனை. ஆலோசனையில் தமிழக உள்துறை, சுகாதாரத்துறை செயலாளர்கள், வருவாய் நிர்வாக ஆணையர் பங்கேற்பு.

*ஊரடங்கு உத்தரவை மீறும் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டால் அடுத்த 3 மாதங்களுக்கு கடையை திறக்க அனுமதி இல்லை - சென்னை மாநகராட்சி!*

இன்று விதிமுறைகளை மீறி செயல்பட்ட கறிக்கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதோடு அடுத்த 3 மாதங்களுக்கு கடையை திறக்கக்கூடாது என தடையுத்தரவையும் பிறப்பித்தார் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்!

*திமுக பிரமுகர்  கைது:

கோவை: சாரமேடு பகுதியில் டெல்லி சென்று திரும்பியவர்களை கணக்கெடுக்க சென்ற அங்கன்வாடி ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்த புகாரில் திமுக பிரமுகர் இஸ்மாயில் கைது. அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண் துன்புறுத்தல் தடுப்புச ட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.

*தொலைபேசி உரையாடலில் பிரதமரும்-மு.க.ஸ்டாலினும் பரஸ்பர நலம் விசாரிப்பு.

மக்களின் வாழ்க்கைக்கு மத்திய அரசு அரணாக இருக்க வேண்டும் -  பிரதமரிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

கொரானோ தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசு கவனமாக செயல்பட்டு வருகிறது - மு.கஸ்டாலினிடம் பிரதமர் மோடி பேச்சு.

ஏப்ரல் 8-ம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு கலந்து கொள்வார் என உறுதி.

*கொரோனா தொடர்பான மத்திய அரசின் "ஆரோக்ய சேது" செயலி

கொரோனா தொடர்பான மத்திய அரசின் ஆரோக்ய சேது செயலியை, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நான்கு நாட்களில் 50 லட்சத்திற்கும் மேலானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

ஸ்மார்ட்போனில் உள்ள இருப்பிடம் காட்டும் வசதி மற்றும் ப்ளூடூத்தை இயக்கிவிட்டு, இச்செயலியை திறந்தால் நாம் இருக்கும் பகுதியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் உள்ளார்களா என பயனாளர் அறிந்து கொள்ள முடியும்.

இந்நிலையில், கடந்த 2ம் தேதி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலியை, ஆண்ட்ராய்டு தளத்தில் மட்டும் இதுவரை 5 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

*செங்கல்பட்டில் மது கிடைக்காததால் போதைக்காக குளிர்பானத்தில் பெயிண்ட் அடிக்க பயன்படுத்தும் வார்னிஷை கலந்து குடித்த கார் ஓட்டுநர் சிவராமன் உயிரிழந்தார்.

ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் போதைக்காக குளிர்பானத்தில் ஷேவிங் லோஷன் கலந்து குடித்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

*‘உலகளவில் கொரோனா உயிரிழப்பு 65 ஆயிரத்தை தாண்டியது.

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65,449 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக இத்தாலி - 15,362, ஸ்பெயின் - 12,418, அமெரிக்கா - 8,454 ஜெர்மன் -1444, பிரான்ஸ் -7560 பேர் உயிரிழப்பு.

வரும் 7ம் தேதி அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகளுடன் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி ஆலோசனை.

*ஊரடங்கிற்கு பிறகு நீதிமன்ற பணிகளை துவங்குவது குறித்து ஆலோசனை.

*மாவட்ட நீதிபதிகள் தங்களின் கருத்துகளை நாளைக்குள் அனுப்பி வைக்கவும் சுற்றறிக்கை.

*இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3374 ஆக உயர்வு.

*நேற்று முதல் இதுவரை 472  பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டுபிடிப்பு.

*கொரோனாவுக்கு இதுவரை 79 பேர் உயிரிழந்துள்ளனர்.

*267 பேர் குணமடைந்துள்ளனர்-மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்.

*நாடு முழுவதும் 274 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு.

*சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர் சந்திப்பு.

தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால்  பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 485 லிருந்து 571 ஆக அதிகரிப்பு- சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்.

இன்று பாதிப்படைந்த 86 பேரில் 85 பேர் டெல்லி மாநாட்டுக்கு சென்றவர்கள். கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2ம் கட்டத்தில் தான் உள்ளது - பீலா ராஜேஷ், சுகாதாரத்துறை செயலர்.

*டெல்லி சென்று வந்த 1246 பேர் மருத்துவமனையில் அனுமதி -சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்.

*இந்தியாவிலேயே அதிகமான கொரோனா பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் தான் உள்ளன.
மகாராஷ்டிராவைவிட தமிழகத்தில் தான் அதிக ரத்த மாதிரி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன - பீலா ராஜேஷ்.

நிலைமை தீவிரமான பிறகு சிகிச்சைக்கு வருபவர்களே உயிரிழக்கின்றனர். 28 நாட்கள் கண்காணிப்பில் எப்போது வேண்டுமானாலும் கொரோனா உறுதியாகலாம்.

2 முறைக்கு மேல் சோதனையில் இல்லை என்று முடிவு வந்தபிறகே வீட்டிற்கு அனுப்புவோம். தேவையான முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எல்லோரும் இணைந்து 3 ஆம் கட்டத்திற்கு செல்லாமல் தடுக்க வேண்டும்-சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்.

*சென்னை மாநகரம் மக்கள் தீபத்தில் ஒளிர்ந்து வருகிறது. பட்டாசு வெடித்தும், வானவெடிகளை வெடித்தும் மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிக்காட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages