அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

*உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45,050 ஆக அதிகரிப்பு:

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45,050 ஆக அதிகரிப்பு.

அதிகபட்சமாக இத்தாலி - 13,155, ஸ்பெயின் - 9,053, அமெரிக்கா - 4,138, பிரான்ஸ் - 3,523 பேர் மரணம்.

*வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் அமெரிக்க வெளியுறத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தொலைபேசியில் பேச்சு:

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட முடிவு.

*புதுச்சேரியில் புதிதாக 2 பேருக்கு கொரோனா பாதிப்பு:

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு
திரும்பியவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதி முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த பெண் வீடு திரும்பிய நிலையில் , புதிதாக 2 பேருக்கு கொரோனா.

*சென்னை: சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் உணவை சாப்பிட்டு; முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு.

பல்வேறு மாநிலங்களில் பாராட்டப்பட்ட அம்மா உணவக திட்டம் இன்று மக்களுக்கு கைகொடுக்கிறது.
அம்மா உணவகங்களில் மட்டும் தான் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி தரப்படுகிறது- சென்னையில் அம்மா உணவகங்களில் ஆய்வு செய்தபின் முதல்வர் பழனிசாமி பேட்டி.

*டெல்லி மாநாட்டில் பங்கேற்றோர் விவரங்கள் தெரியாததால் அரசுக்கு தாங்களாகவே தெரிவிக்க கோரினோம்.தாங்களாகவே முன்வந்து தெரிவித்தால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும்.

கொரோனா அறிகுறி இருந்தால் ஈஷா கூட்டத்தில் பங்கேற்றவர்களையும் சோதனைக்கு உட்படுத்துவோம்.
- முதல்வர் பழனிசாமி.

*தமிழகத்தில் ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்யும். - முதல்வர் பழனிசாமி.

*டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களை அடையாளம் காணும் பணி தமிழகம் முழுவதும் தீவிரம்:
சுகாதார துறையுடன் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையில் காவல்துறை தீவிரம். செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 46 பேருக்கு மருத்துவ பரிசோதனை. டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 35 பேருக்கு திருவாரூரில் பரிசோதனை.
திருவண்ணாமலை 7, ராஜபாளையம் 4, மதுரை, தூத்துக்குடியில் தலா ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
டெல்லி மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த 1,131 பேர் கலந்து கொண்டனர்.

*மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்:

ஊரடங்கையும் மீறி சென்னை பாடி மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல். மேம்பாலத்தின் 3 புறமும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவதால் போக்குவரத்து நெரிசல்.
சமூக இடைவெளியை கடைபிடிக்காமல்  வாகனங்கள் வரிசை கட்டி நிற்பதால் மக்கள் அச்சம்.

*தமிழகத்தில்; 16 மாவட்டங்களில் 1,82,815 வீடுகளில் 6,88,815 நபர்களிடம் ஆய்வு. - சுகாதாரத்துறை.

*தமிழக கால்நடைத்துறை விளக்கம்:

கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா பரவாது. சமூக வலைதளங்களில் வதந்தி பரவும் நிலையில் தமிழக கால்நடைத்துறை விளக்கம்.

*கடலூரில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் உயிரிழப்பு:

கடந்த 30ஆம் தேதி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்.சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உயிரிழப்பு.
கொரோனா பரிசோதனை முடிவு வெளியாகவில்லை.

*ஈஷாவில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை:

வதந்தி பரப்புவோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிப்ரவரியில் மாநில சுகாதார அதிகாரிகள் ஈஷா மையத்துக்கு வந்து மருத்துவ சோதனைகளை பார்வையிட்டனர். - ஈஷா யோகா மையம் விளக்கம்.

*கொரோனாவிற்காக Greater Chennai Corporation என்ற சிறப்பு செயலி அறிமுகம்:

*இந்த செயலி மூலம் 24 ஆயிரம் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளை கண்காணித்து வருகிறோம் - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.

*144 தடை - 34,178 பேர் மீது வழக்குப்பதிவு:

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறிய 34,178 பேர் மீது வழக்குப்பதிவு தடை உத்தரவை மீறி வெளியே வந்தவர்களின் 28,040 வாகனங்கள் பறிமுதல். 14 லட்சத்து 47 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல்.

*அசாதாரண சூழ்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் அரசியல் செய்ய மாட்டார் என நம்புகிறோம்:

தமிழகத்துக்கு மருத்துவ ஆலோசனை மட்டுமே தேவை; அரசியல் ஆலோசனை தேவையில்லை. - அமைச்சர் செல்லூர் ராஜூ.

*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,637ஆக உயர்வு உயிரிழந்தோர் எண்ணிக்கை 38ஆக உயர்வு. - மத்திய சுகாதாரத்துறை.

*திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.
டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவருக்கு கொரோனா தொற்று - மாவட்ட ஆட்சியர் தகவல்.

*டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

7824849263, 044-46274411 ஆகிய எண்களை தொடர்பு கொள்ள அரசு அறிவுறுத்தல். மார்ச் 8 - 20 வரை டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் கவனத்திற்கு.
கொரோனா தொற்று இருப்பதற்கான அபாயம் உள்ளது - பரிசோதனைக்கு முன் வர வேண்டும்". தப்லிஹி ஜமாத் அமைப்பினருக்கு தமிழக அரசு வேண்டுகோள்.

*டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 43 பேருக்கு கொரோனா பாதிப்பு - ஆந்திர அரசு அறிவிப்பு.

*கொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை.
காணொலிக்காட்சி மூலம் முதல்வர்களுடன் நாளை காலை ஆலோசனை நடத்துகிறார் பிரதமர் மோடி.

*வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.65 குறைப்பு.

டெல்லியில் சமையல் எரிவாயு விலை ரூ.61.50 குறைவு - மும்பையில் ரூ.62 குறைவு - இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்.

*தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியை சேர்ந்த அரசு மருத்துவர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றது கண்டுபிடிப்பு:காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவருக்கு பரிசோதனை நடத்த முடிவு. இன்று காலை வரை பணியில் இருந்த மருத்துவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

*சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.

வெளியில் நடமாடுவதால் நமக்கு தெரியாமல் கொரோனா வைரஸ் வேகமாக பரவும். ஊரடங்கை மீறி நடமாடுவோருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சாஹி எச்சரிக்கை. கண்ணுக்கு தெரியாத எதிரியாக இருப்பதால், நாம் மறைவாக இருப்பது விவேகமானது-நீதிபதி.

*டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாங்களாகவே முன்வந்து தகவல் தெரிவித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் தமிழகத்தில் 77,330 பேர் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் தமிழகத்தில் மொத்தம் 17 பரிசோதனைக் கூடங்கள் செயல்படுகின்றன - சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்

*டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 190 பேருக்கு கொரோனா. இன்று உறுதிசெய்யப்பட்ட 110 பேரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 234ஆக உயர்வு - சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்.

கொரானோ உறுதி செய்யப்பட்டவர்கள் மாவட்ட வாரியாக:

110 New TN Dist Break-up

Tirunelveli - 6

Coimbatore - 28

Erode - 2

Theni - 20

Dindigul - 17

Madurai - 9

Tirupathur - 7

Chengalpet - 7

Sivagangai - 5

Tuticorin - 2

Tiruvarur - 2

Karur - 1

Kanchi - 2

Chennai - 1

Tiruvanamalai - 1.

*’கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்’ - முதல்வர்.

மக்களின் ஒத்துழைப்பால்தான் கொரோனா பரவுவதை தடுக்க முடியும்; நோயை கட்டுப்படுத்த முடியும். நோய் பரவலை தடுக்கவே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
- முதல்வர் பழனிசாமி.

*முதலமைச்சர் அறிவித்த ரூ.1000 மற்றும் விலையில்லா ரேசன் பொருட்களுக்கான டோக்கன், ரேசன் கடை ஊழியர்கள் மூலம் வீட்டிற்க்கே வந்து வழங்கப்படும் - அமைச்சர் காமராஜ்.

*முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து மார்ச் 31ம் தேதி வரை ரூ.36 கோடியே 34 லட்சத்து 2 ஆயிரத்து 529 பெறப்பட்டுள்ளது - தமிழக அரசு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages