நோய்தீர்க்கும் மருந்து தயாரிக்கும் பல தனியார் நிறுவனங்கள் பெரும்பாலும் பிறநாடுகளுக்கு தேவையான மருந்துகளைத்தான் தயாரித்துக் கொண்டிருக்கின்றன என்பது மிகவும் வேதனையான விஷயமாகும். - வழக்கறிஞர் V.S.கோபு. - Agnipuratchi

நோய்தீர்க்கும் மருந்து தயாரிக்கும் பல தனியார் நிறுவனங்கள் பெரும்பாலும் பிறநாடுகளுக்கு தேவையான மருந்துகளைத்தான் தயாரித்துக் கொண்டிருக்கின்றன என்பது மிகவும் வேதனையான விஷயமாகும். - வழக்கறிஞர் V.S.கோபு.

Share This

நோய்தீர்க்கும் மருந்து தயாரிக்கும் பல தனியார் நிறுவனங்கள் பெரும்பாலும் பிறநாடுகளுக்கு தேவையான மருந்துகளைத்தான் தயாரித்துக் கொண்டிருக்கின்றன என்பது மிகவும் வேதனையான விஷயமாகும். - வழக்கறிஞர் V.S.கோபு.

இந்தியாவில் மருத்துவம் படித்து திறமையான மருத்துவராக வெளிவரும் மாணவர்கள், அவர்களின் திறமைக்கான அங்கிகாரமாக வெளிநாடுகளில் பணிபுரிவதையே பெரிதும் விரும்புகின்றனர்.

அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. இங்கு மருத்துவ படிப்பு , பணமிருப்பவருக்கே சாத்தியம் என்ற நிலையும், அப்படியே ஒரு ஏழை கடனை வாங்கி படித்திருந்தாலும், வாங்கிய கடனை அடைக்கவேண்டிய நிலையில் அதிக ஊதியம் கிடைக்குமிடத்தை தேர்ந்தெடுப்பதும் இயல்புதான்.

இதைப்போலவே தான்  ஐஐடி யில் பயிலும் மாணவர்கள் நிலையும். இங்கு இயல்பாகவே திறமையான மாணவர்கள் இருந்தாலும், அவர்களின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்தும் நவீனத்துவ கட்டமைப்புகளை ஏற்படுத்த இந்தியா தவறிவிட்டது.

அதன் விளைவு தனியார் நிறுவனங்கள், அதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி, கோடிகளை கட்டணமாக குவிக்கிறது. திறமையான ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிப்பதில்லை.

இதனால் சிலர் வெளிநாடு சென்றாலும், இங்கிருக்கும் மீதமுள்ள சில ஆராய்ச்சியாளர்களும், வெளிநாடுகளின் உதவியோடு இந்தியாவில் இயங்கும் தனியார் மருந்து உற்பத்தி ஆராய்ச்சி, நிறுவனங்களில் தங்களது உழைப்பை கொடுக்கின்றனர்.

வெளிநாடுகள் எதை கண்டுபிடித்து தரச்சொல்கிறதோ, அதை கண்டுபிடித்து கொடுக்கின்றனர். பிறகு அதுவே இந்திய சந்தையில் மட்டுமின்றி உலகச்சந்தையில் விற்பனை மருந்தாக நிலைக்கிறது.

இந்தியாவில் படித்து, இந்தியாவில் உழைத்து, இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டாலும், அம்மருந்திற்கு உரிமை கொண்டாடுவதென்னவோ வெளிநாட்டு நிறுவனங்கள் தான்.

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் மத்திய சுகாதரத்துறை அமைச்சராக இருந்தபோது, செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் திருமணி கிராமத்தில் 594 கோடி ஒதுக்கி 100 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கிய HLL பயோடெக் நோய் தடுப்பு மருந்து உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை உருவாக்கினார்.

அது பல நோய்களுக்கான தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்ய உதவும் அதிநவீன கருவிகளை கொண்டது .

இன்று அதிலிருந்து ஒரு ஊசிமருந்து கூட கண்டுபிடிக்கமால் கேட்பாரற்று கிடக்கிறது என்பதை அறியும்பொழுது, ஆட்சியாளர்களின் அறிவிலாத்தனமும், மக்கள் மீதான அக்கறையில்லா துர்பாக்கிய நிலையும் தான் தெளிவாகிறது.

இந்த நிலை மாற, இந்திய அரசு நோய் தீர்க்கும் மருந்து ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியில் தனி கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகிறது.

அதற்கு முன் மருத்துவ படிப்பை திறமையின் அடிப்படையில் மாணவர்கள் இலவசமாக படிக்குமளவிற்கு மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.

இந்திய அரசு மருந்து ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியை தனியார் வசம் விடாமல் அரசே நடத்தவேண்டும்.

எந்த மருத்துவமனைகளும் அரசின் கட்டுப்பாட்டில்தான் இயங்கவேண்டும் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

ஆராய்ச்சி மாணவர்களை ஊக்குவித்து அதற்கு தேவையான நிதி ஆதாரத்தை தாராளமாக்க வேண்டும்.

இப்படிச் செய்தால் மட்டுமே இந்திய மாணவர்களின் திறமையும், உழைப்பும் இந்தியாவிற்கு கிடைக்கும்.

இப்படிச் செய்தால் மட்டுமே கொரோனா போன்ற கொடிய வைரஸ் தாக்கத்திலிருந்தும், கொடிய நோய்களிலிருந்தும் மக்களை காப்பதோடல்லாமல் இந்திய மருந்து உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தன்னிகரில்லா நாடாக திகழமுடியும்.

செய்யுமா இந்திய அரசு!

வழக்கறிஞர் V.S.கோபு.
சென்னை உயர் நீதிமன்றம்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages