அக்னிப்புரட்சி (04.05.2020) இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி (04.05.2020) இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி (04.05.2020) இன்றைய முக்கிய செய்திகள்.

*இந்தியாவில் கொரோனா பாதிப்பு  42 ஆயிரத்தைதாண்டியது.
நாடு முழுவதும் 42,533 பேர் கொரோனாவால் பாதிப்பு.
உயிரிழப்பு எண்ணிக்கை 1,373 ஆக அதிகரிப்பு. 11,707 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

*தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,550ஆக உயர்வு. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30லிருந்து 31ஆக உயர்வு.
தமிழகத்தில் இன்று ஆண்கள் 377 பேரும், பெண்கள் 150 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட் டுள்ளனர். கோயம்பேடு சந்தை மூலம் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் -சுகாதாரத்துறை.

*விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளி​ல் 39 பேருக்கு கொரோனா உறுதி.

ஏற்கனவே 86 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் மேலும் 39 பேருக்கு பாதிப்பு. கோயம்பேட்டில் இருந்து வந்தவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் முடிவு.

*பெட்ரோல், டீசல் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் வருவதால் தமிழகத்தில் இன்று முதல் பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் - தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் முரளி தகவல்.

*சென்னை இஎஸ்ஐ மருத்துவ மனையில் மேலும் 4 பெண் பயிற்சி மருத்துவர்களுக்கு கொரோனா  உறுதி:
ஏற்கனவே ஆண் பயிற்சி மருத்துவருக்கு கொரோனா உறுதியானது. துப்புரவு தொழிலாளர் உட்பட மேலும் 2 பேருக்கு கொரோனா.

*சென்னை: திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதியில் அம்மா உணவக பெண் பணியாளருக்கு கொரோனா உறுதி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இவரது வீடு இருப்பதால்  நோய்த்தொற்று பரவி இருக்கலாம் எனத் தகவல்.

*கோயம்பேட்டில் இருந்து கடலூர் திரும்பிய மேலும் 7 பேருக்கு கொரோனா உறுதி.

கோயம்பேட்டில் இருந்து திரும்பிய 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு 55 ஆக அதிகரிப்பு.ஸ26 பேர் சிதம்பரம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையிலும், 3 பேர் புதுச்சேரி ஜிப்மர் மலுத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 26 பேர் மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், 500 பேரின் முடிவு வர வேண்டியுள்ளது.

*தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறியதாக 4,07,895 பேர் கைது 3,41,971 வாகனங்கள் பறிமுதல் - ரூ.4.01 கோடி அபராதம் விதிப்பு.

*மதுரை: மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் முதல்முறையாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது.
பக்தர்களின்றி சிவாச்சாரியார்கள் மட்டும் பங்கேற்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை நடத்தினர்.

*சென்னை: கோயம்பேட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்ற 7,500 தொழிலாளர்களை கண்டறிய முயற்சி கோயம்பேட்டில் இருந்து சென்றவர்களின் தகவல்களை மாவட்ட நிர்வாகங்கள் பெற்று ஆய்வு செய்து வருகின்றன.

*கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 160ஆக உயர்வு.

இன்று ஒரே நாளில் 107 பேருக்கு தொற்று உறுதி, 107 பேரும் கோயம்பேட்டில் இருந்து கடலூர் வந்தவர்கள். இதுவரை கோயம்பேட்டில்  இருந்து வந்த 129 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கோயம்பேட்டில் இருந்து வந்த மேலும் 430 பேருக்கு கொரோனா பரிசோதனை தொடர்கிறது.

*கோயம்பேடு சுற்றுவட்டார பகுதிகளில், கொரோனா பரிசோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோயம்பேட்டுடன் தொடர்புடைய அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை, அதே சமயம் அலட்சியமாகவும் இருக்கக் கூடாது.
முகக்கவசம் அணிவதை மக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
இந்தியாவிலேயே குணமடைந்தோர் எண்ணிக்கை தமிழகத்தில்தான் மிக அதிகம் - கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்.

*வெளி மாநில தொழிலாளர்களிடம் ரயில் கட்டணம் வசூலிப்பதற்கு காங். கடும் எதிர்ப்பு.

கட்டணத்தை அந்தந்த மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் கமிட்டி ஏற்கும்: சோனியா அறிவிப்பு. தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரிய மனு தள்ளுபடி ஊரடங்கு காரணமாக பலர் மது பழக்கத்தை கைவிட்டு விட்டதாக மனுவில் தகவல். அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

*மே 31ஆம் தேதி நடைபெறவிருந்த சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ஒத்திவைப்பு. - யூபிஎஸ்சி.

*கொரோனா பரிசோதனைக்கு தமிழகத்தில் எத்தனை பி.சி.ஆர்., ஆய்வகங்கள் உள்ளன?. மே 12ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

*சென்னையை சேர்ந்த காவல்துறை துணை ஆணையருக்கு கொரோனா தொற்று

ஏற்கனவே காவலர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில்,  உயர் அதிகாரிக்கும் தற்போது பாதிப்பு டிஜிபி, ஆணையர் அலுவலகங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு

*இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கிறார்.

*கடலூர்: நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து.
நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டில் தீ பற்றியதால் பரபரப்பு. தீ விபத்தால் நிலக்கரி கொண்டு செல்லும் பணி பாதிப்பு- தீயை அணைக்கும் பணி தீவிரம்.

*10-ம்  வகுப்பு பொதுத்தேர்வை ஜூன் 3வது வாரத்தில் நடத்த முடிவு இந்த மாத இறுதியில் அட்டவணை வெளியாகும் - தேர்வுத்துறை

*தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை வரும் 7ஆம் தேதி முதல் திறக்க அதிரடி உத்தரவு

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை வரும் 7ஆம் தேதி முதல் திறக்கப்படும்.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி- தமிழக அரசு அறிவிப்பு. 6 அடி தூர சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்.
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் திறக்கப்படாது.

*சென்னை கோயம்பேடு சந்தை தற்காலிகமாக இடமாற்றம்-கொரோனா தொற்று பரவியதால் தமிழக அரசு நடவடிக்கை.

திருமழிசை சேட்டிலைட் நகரத்திற்கு கோயம்பேடு சந்தை மாற்றம்-திருமழிசையில் கடைகள் அமைக்கும் பணி தீவிரம்.
சென்னை கோயம்பேடு சந்தை நாளை முதல் தற்காலிகமாக மூடல்.
7ஆம் தேதி முதல் திருமழிசையில் தற்காலிக சந்தை செயல்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் திருமழிசைக்கு வந்து காய்கறிகளை வாங்கி கொள்ளலாம்.

*டாஸ்மாக் திறப்பு: கே.பாலகிருஷ்ணன் கண்டனம். கொரோனா பாதிப்புள்ள சூழலில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது ஆபத்தானது. கண்டனத்திற்குரியது -கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்).

தமிழக மக்கள் 40 நாட்களாக மதுவை மறந்துள்ளனர். அரசு அந்த சூழலை குலைக்க வேண்டாம்.தமிழ் இனம் உயர்வதற்கான ஒளிக்கீற்று தென்படுகிறது.மது அரக்கன் நம் மக்களின் வருங்காலத்தை சிதைக்க அனுமதிக்க கூடாது. - கே.எஸ்.அழகிரி
தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி

*மே 7ஆம் தேதி முதல் டாஸ்மாக் (TASMAC) கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு மிக மோசமானது கண்டிக்கத்தக்கது. - திரு டிடிவி தினகரன் எம்எல்ஏ,
கழகப் பொதுச்செயலாளர்,
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.

கொரோனாவால்  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நாள்தோறும் பல நூற்றுக்கணக்கில் அதிகரித்து வரும் சூழலில், மதுக்கடைகளைத்  திறப்பது மக்களின் உயிரோடு விளையாடும் செயல். துளியும் பொறுப்பற்ற இந்த நடவடிக்கையைப்  பழனிசாமி அரசு  உடனடியாக திரும்பபெறவேண்டும்.

*மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என உறுதிப்படுத்த வேண்டும்.

மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தல்.
சரக்கு போக்குவரத்தில் பிரச்சினை இருந்தால் உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டு அறை எண்ணை தொடர்புகொள்ளலாம்-மத்திய உள்துறை இணைச் செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவாஸ்தவா தகவல்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages