அக்னிப்புரட்சி (09.05.2020) இன்றைய முக்கிய செய்திகள்.
*உலகில் மொத்தம் 212 நாடுகளில், கொரோனா வைரஸ் பரவியது .
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40,10,537ஆக உயர்வு.
வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,75,959ஆக உயர்வு.
வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 13,82,344ஆக உயர்வு.
அமெரிக்காவில் மேலும் 29,043 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதி்ப்பு 13,21,666ஆக உயர்வு.
அந்நாட்டில் கொரோனாவுக்கு மேலும் 2,671 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 78,599ஆக உயர்வு.
*இந்தியாவில் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62,000ஐ தாண்டியது
இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 2,000ஐ தாண்டியது
*மகாராஷ்டிராவில் 20,000ஐ கடந்த பாதிப்பு மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரே நாளில் கொரோனா பாதித்த 48 பேர் உயிரிழப்பு; 1,165 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று உறுதியானது
அங்கு இதுவரை பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 20,228ஆக உயர்வு இதுவரை உயிரிழப்பு 779 பேர் உயர்வு.
*தமிழ்நாட்டில் இன்று 526 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,535ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்று 279 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.
இன்று ஒரே நாளில் தமிழகத்தில் நான்கு பேர் உயிரிழப்பு மாநிலத்தில் பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு
இன்று சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பினார் எண்ணிக்கை 219
1824 நபர்கள் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 4664 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
*2 வது நாளில் ரூ.122 கோடி வசூல்:
டாஸ்மாக் மதுக்கடைகளில் 2 வது நாளில் ரூ.122 கோடி வசூல்.
மதுக்கடை திறந்த 2 நாட்களில் சுமார் ரூ.294 கோடிக்கு மது விற்பனை.
2 வது நாளில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.32.45 கோடிக்கு விற்பனை.
நீதிமன்ற உத்தரவின் படி மதுபானக் கடைகள் அடைப்பு - டாஸ்மாக் நிர்வாகம்.
சட்டவிரோதமாக மதுவிற்பனை நடைபெறாமல் கண்காணிக்க வேண்டும்.
அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை.
*கொரோனா பாதிக்கப்பட்டவர்களை வீட்டிற்கு அனுப்புவது குறித்து புதிய வழிமுறை வெளியீடு:
அறிகுறி இல்லை என்றால் மறு பரிசோதனை தேவை இல்லை, வீட்டிற்கு அனுப்பலாம். மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு.
முதல்கட்ட சோதனையில் உறுதி ஆனவர்களுக்கு காய்ச்சல் குணமானால் மறு பரிசோதனை தேவை இல்லை அறிகுறியற்றவர்களை வீட்டிற்கு அனுப்பும் முன் பிசிஆர் சோதனை தேவையில்லை.
*செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 30 வியாபாரிகளுக்கு கொரோனா பாதிப்பு.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காய்கறி வியாபாரிகள்
எண்ணிக்கை 80 ஆக உயர்வு.
காய்கறி வியாபாரிகளை 14 நாட்கள்
தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை. மருத்துவ பரிசோதனை.
*வெளி மாநில தொழிலாளர்களுக்கான பயணச் செலவை தமிழக அரசு ஏற்கும். -தமிழக அரசு அறிவிப்பு.
வெளிமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்படு வார்கள். தொழிலாளர்களின் சொந்த மாநிலங்கள் செலவை ஏற்கவில்லை எனில் தமிழக அரசே கட்டணம் செலுத்தும்.
*திருவள்ளூரில் கோயம்பேடு தொடர்புடைய 120 பேருக்கு கொரோனா:
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 270 ஆக உயர்வு.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதி 44ல் இருந்து 110ஆக அதிகரிப்பு. தமிழக அளவில் கொரோனா பாதிப்பில் திருவள்ளூர் மாவட்டம் - 3வது இடம்.
*தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறியதாக 4.42 லட்சம் பேர் கைது:
இதுவரை 4.16 லட்சம் வழக்குகள் பதிவு- 3.65 லட்சம் வாகனங்கள் பறிமுதல்.
ரூ.4.73 கோடி அபராதம் விதிப்பு.
*மின்சார சட்டத்திருத்த மசோதாவை நிறுத்தி வைக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்:
புதிய திருத்தங்கள் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவும், மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிப்பதாகவும் உள்ளது.
கொரோனா தடுப்புப் பணிகளில் மாநில அரசுகள் கவனம் செலுத்துவதால் மின்சார சட்டத்திருத்த மசோதா குறித்து ஆலோசிக்க அவகாசம் தேவை. - முதல்வர் பழனிசாமி.
*நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு. கோவை குனியமுத்தூர் காவல்நிலையத்தில் சீமான் மீது தேசத் துரோக வழக்குப்பதிவு. பிப்.22ல் கோவை ஆத்துப்பாலம் பகுதியில் நடந்த ஷாகின்பாக் போராட்டத்தில் கலந்து கொண்டார் சீமான். வெறுப்பு உணர்ச்சியை தூண்டும் வகையில் சீமான் பேசியதாக புகார்.
*ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு.
ஊரடங்கு முடியும் வரை மதுவகைகளை ஆன்லைனில் மட்டுமே விற்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு.
*கடலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு இல்லை என மாவட்ட ஆட்சியர் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கடைகளை திறக்கலாம், பொதுமக்களும் சமூக விலகலை கடைப்பிடித்து முகக் கவசத்துடன் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்லலாம் -மாவட்ட ஆட்சியர்.
*ஊரடங்கிற்கு பின் தமிழக பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்து ஆலோசனைகள் வழங்க உயர்மட்ட குழு அமைப்பு.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் உயர்மட்ட குழு அமைத்தது தமிழக அரசு.
*எனது உடல்நிலை குறித்த தகவல் வதந்தி - அமித் ஷா.
எனது உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல் வதந்தி; நான் நலமுடன் இருக்கிறேன், எந்த நோயாலும் பாதிக்கப்படவில்லை- அமித் ஷா விளக்கம்.
*ஊரடங்கிற்கு பின் தமிழக பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்து ஆலோசனைகள் வழங்க உயர்மட்ட குழு அமைப்பு.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் உயர்மட்ட குழு அமைத்தது தமிழக அரசு.
*டாஸ்மாக் திறக்க தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு. தங்கள் தரப்பு கருத்தை கேட்டறிந்தபின்பு முடிவெடுக்க வேண்டும் - பாமக மற்றும் சில அமைப்புகள் சார்பில் கேவியட் மனு.
மதுக்கடைகளை மூடவேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு - அரசு தரப்பு.
*எனது உடல்நிலை குறித்த தகவல் வதந்தி - அமித் ஷா.
எனது உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல் வதந்தி; நான் நலமுடன் இருக்கிறேன், எந்த நோயாலும் பாதிக்கப்படவில்லை- அமித் ஷா விளக்கம்.
*திருமழிசை அங்காடியில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் நேரில் ஆய்வு,
திருமழிசை தற்காலிக மொத்த காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், மாநகராட்சி, சிஎம்டிஏ அதிகாரிகள் ஆகியோர் நேரில் ஆய்வு.
*10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் வீட்டிலிருந்து செய்ய வேண்டும். விடைத்தாள் திருத்தும் பணி 50 நாட்களில் முடிக்கப்பட வேண்டும் - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.
*புதுச்சேரியில் மே 17ம் தேதிவரை மதுக்கடைகள் திறப்பு இல்லை
முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
நீதிமன்ற தலையீடு காரணமாக முடிவெடுப்பதில் சிக்கல்
தமிழக அரசின் உச்சநீதிமன்ற வழக்கின் தீர்ப்புக்காக காத்திருப்பு.
No comments:
Post a Comment