அக்னிப்புரட்சி (13.05.2020) இன்றைய முக்கிய செய்திகள்.
*உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43.39 லட்சமாக உயர்வு.
கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16,00,728ஆக உயர்வு.
கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,92,804ஆக உயர்வு.
அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 14,08,636ஆக உயர்வு.
கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 83,425ஆக உயர்வு.
*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70,756லிருந்து 74,281ஆக உயர்வு.
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 22,455லிருந்து 24,386ஆக உயர்வு.
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,293லிருந்து 2,415ஆக உயர்வு - மத்திய சுகாதார அமைச்சகம்.
* தமிழகத்தில் இன்று புதியதாக 509 பேருக்கு கொரனா தொற்று. இதில் சென்னையில் மட்டும் 380 பேர்
தமிழகத்தில் கொரனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9227 ஆக அதிகரிப்பு. இன்று பாதிப்பால் உயிரிழந்தோர் 3 பேர் இவர்களோடு சேர்த்து 64 ஆக உயர்வு குணம்மடைந் தோர் எண்ணிக்கை 2176 ஆக உயர்வு
*என்எல்சி விபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு.
கடலூர்: என்எல்சி 2வது அனல்மின் நிலையத்தில் கடந்த 7 ம் தேதி பாய்லர் வெடித்தவிபத்தில் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒப்பந்த தொழிலாளி பாலமுருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. தீக்காயம் அடைந்த 8 பேரில் 2 நிரந்தர தொழிலாளி, ஒரு ஒப்பந்த தொழிலாளி என 3பேர் உயிரிழந்த நிலையில் இன்று உயிரிழப்பு 4ஆக உயர்ந்துள்ளது.
*குற்றவாளிகள் அனைவருக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் - பாஜக தமிழகத் தலைவர் திரு. முருகன் பேட்டி:
விழுப்புரம் அருகே சிறு மதுரை கிராமத்தில் சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில்; தமிழக பாஜக தலைவர் திரு. முருகன் அவர்கள் உயிரிழந்த சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர்; குற்றவாளிகள் அனைவருக்கும் உச்சபட்ச தண்டனை தூக்குதண்டனை வழங்க வேண்டும். மேலும்; இந்த வழக்கு தமிழகத்திற்கு ஒரு முன்மாதிரியான வழக்காக இருக்கவேண்டும்.
திமுக தலைவர் ஸ்டாலின்; கொரோனா காலகட்டத்தில் மக்களைப் பாதுகாப்பதை தவறவிட்டு; கொரோனா காலத்திலும் அரசியல் செய்து வருகிறார்; எனவே அவர் இதனை தவிர்க்க வேண்டும்.
தமிழக அரசு; கொரோனா கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், முதல் நாளிலிருந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.
*ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான உயர்மட்ட குழு நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை. தமிழக பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்க ரங்கராஜன் குழு அமைக்கப்பட்டது.
*இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஆலைகளும் இன்று முதல் உற்பத்தியை தொடங்குவதாக அசோக் லேலண்ட் நிறுவனம் அறிவிப்பு.
*டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்க உத்தரவிட கோரிய வழக்கு தள்ளுபடி:
மனுதாரருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. அபராதத் தொகையை முதலமைச்சர் நிவாரண நிதியில் ஒரு வாரத்தில் செலுத்தவும் உத்தரவு.
*தேர்வு மையத்திற்கு வரும் மாணவர்களுக்காக பேருந்து வசதி.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
தேர்வு முடிந்த பிறகு மீண்டும் வீடுகளுக்கு மாணவர்கள் செல்ல பேருந்து வசதி ஏற்படுத்த நடவடிக்கை.
*கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது கோவை.
கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 146 பேரும் குணமடைந்தனர்; அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணியும் குணமடைந்து இன்று வீடு திரும்பினார்.
*தெற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
அந்தமானில் வங்கக்கடல் பகுதியில் 16ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்.
புயம் உருவாக வாய்ப்பு இருப்பதால் வரும் 15,16 மற்றும் 17ஆம் தேதிகளில் வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்.
*பழக்கடைகளை சேதப்படுத்திய வாணியம்பாடி ஆணையர் சிசில் தாமசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.
2 வாரத்தில் பதிலளிக்க மனித உரிமை ஆணைய பொறுப்பு தலைவர் ஜெயச்சந்திரன் ஆணை.
செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு.
*கொரோனா தீவிரம் குறையாத நிலையில் 10 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும். - வைகோ
மாணவரின் கல்வித் திறனை 11, 12ம் வகுப்பு தேர்வில் மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. இயல்பு நிலை திரும்ப இன்னும் எத்தனை நாட்கள் ஆகுமோ?; அனைவரையும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும். ஊரடங்கு நீடிக்கப்படும் என பிரதமர் நேற்று தெரிவித்து இருக்கிறார் - வைகோ.
*'மத்திய ஆயுதப்படைகளின் உதவியை கோரியது மகாராஷ்டிரா
கொரோனா சவாலை எதிர்கொள்ள மத்திய ஆயுதப்படை குழுக்களின் உதவியை கோரியது மகாராஷ்டிரா அரசு. 20 கம்பெனி மத்திய ஆயுதப்படை குழுக்களை அனுப்புமாறு மத்திய அரசிடம் உதவி கோரியது - மகாராஷ்டிரா அரசு.
*'அதிக நேரம் பணிபுரிந்தால் இரட்டிப்பு சம்பளம் வழங்குக: - முதல்வர் நாராயணசாமி.
புதுச்சேரி: தனியார் நிறுவனங்களில் அதிக நேரம் பணிபுரிந்தால் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும்.
கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுக்கு தொற்று இல்லை.
- முதல்வர் நாராயணசாமி.
*திமுகவின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் மக்கள் கொடுத்த 1 லட்சம் மனுக்களை தலைமைச் செயலாளரிடம் ஒப்படைத்த திமுக எம்.பி.க்கள். தலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்து திமுக எம்.பி.க்கள் மனுக்களை அளித்தனர்.
*தலைமைச் செயலாளர் சண்முகம் மீது திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பரபரப்பு குற்றச்சாட்டு.
திமுக எம்.பி.க்களுக்கு தலைமைச் செயலாளர் சரியான பதில் தரவில்லை. மக்களவை உறுப்பினர்களாகிய தங்களை தலைமைச் செயலாளர் கொச்சைப்படுத்திவிட்டார்.
திமுக ஆற்றி வரும் நிவாரணப் பணிகளை பார்த்து தலைமைச் செயலாளருக்கு பொறாமை.
எம்.பி.க்களை மதிக்காமல் டிவி பெட்டியில் சத்தத்தை அலறவைத்து அதை கவனித்துக்கொண்டு இருந்தார்.
*தலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்த பின்பு தயாநிதி மாறன் பரபரப்பு புகார். உங்களை போன்ற ஆட்களுக்கு வேறு வேலையில்லை'' என தலைமைச் செயலாளர் கூறினார் தலைமைச் செயலர் சண்முகம் இந்த வார்த்தையை கூறியதை கேட்டு அதிர்ந்துபோனோம் -தயாநிதி மாறன்.
*கொரோனா தடுப்பு பணிக்காக PMCARES நிதியில் இருந்து ரூ.3100 கோடி ஒதுக்கீடு-பிரதமர் அலுவலகம் அறிவிப்பு.
ரூ.2 ஆயிரம் கோடி வென்டிலேட்டர் வாங்க ஒதுக்கப்படும்.
ரூ.1000 கோடி புலம் பெயர் தொழிலாளர் நலனுக்காக ஒதுக்கீடு.
ரூ.100 கோடி தடுப்பூசி கண்டுபிடிக்க ஒதுக்கீடு செய்யப்படும்.
No comments:
Post a Comment